Friday, December 31, 2021

RSS ஐ (சுதர்சனை) அறியாத முனாஃபிக்குகள்

07 -அக்டோபர்-2000 அன்று
 விஜயதசமி. ஆர் எஸ் எஸ் ன் 75 வது வருட ஆண்டுவிழா அன்றைய (ஐந்தாவது) தலைவர் சுதர்சன் முன்னிலையில் நடந்தது. அதில் சுதர்சன் பேசியது கீழே.


இந்திய முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்துவர்கள் சுதேசி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும். சுதேசி சர்ச்சுகளை உருவாக்கவேண்டும். அதில் இந்திய தன்மை இருக்கவேண்டும். முஸ்லிம்கள் இஸ்லாத்தை இந்துமயப்படுத்த வேண்டும்.இரு சமூகத்து மக்களும் தேசிய நீரோட்டத்தில்                இணைய வேண்டும்.
 
15 -அக்டோபர்-2000 அன்று திரும்பவும் ஒரு ஆர் எஸ் எஸ் மாநாடு ஆக்ராவில் நடந்தது. அதில் சுதர்சன் பேசியது கீழே.
 
இந்திய
 முஸ்லிம்களின் நரம்புகளில் ஓடும் ரத்தத்தில் ராமரும்      கிருஷ்ணரும் கலந்திருப்பார்கள். ஏன் இன்னும் அந்நிய படையெடுப்பாளரான பாபருடன் உங்களை         அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள். மாநாட்டின் முதல் வரிசையில் ஐம்பதாயிரம் ஆர் எஸ் எஸ் ஆட்களுடன் அந்த பேச்சை அத்வானி கேட்டுக்கொண்டு இருந்தார். மதசார்பற்ற நாட்டின் உள்துறை அமைச்சராக தன்னை எண்ணிக்கொள்ளவில்லை,     மாறாக ஆர் எஸ் எஸ் ன் மாணவராக தன்னை எண்ணிக் கொண்டார். எதிர்க்கட்சிகள் தாண்டவமாடின, அத்வானியின் பதில்,  நாங்கள் ஜனதாவில் இருந்து பிரிந்து வந்ததே எங்கள் ஆர் எஸ் எஸ் அடையாளத்தை              வெளிப்படுத்தத்தான்.
 
ஒருவரியில்
 தங்களின் அரசியல் நிலைப்பாட்டை இதைவிட விளக்கமுடியாது. அரசியல் தேவை, ஆட்சி தேவை, அதிகாரம் தேவை, பதவி தேவைஇதெல்லாம் எதற்க்காகஹிந்து ராஷ்டிரம்   அமைப்பதற்காக. ஆர் எஸ் எஸ் ன் அடையாளத்தை           மறைத்துவிட்டு அரசியல் செய்ய நாங்கள் தயாரில்லை.
 
ஆக
 ஆர் எஸ் எஸ் ன் சனாதனநான்கு வர்ண ஹிந்து ராஷ்டிராவை   உருவாக்குவது தான் பிஜேபி யின் கடமை. அது தெரிந்தும்    காசுக்கு நக்கிப்பிழைக்கும் பல பெயர்தாங்கி முஸ்லிம்கள்               ஆர் எஸ் எஸ் மற்றும் பிஜேபி ல் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

Sunday, December 19, 2021

RSS ன் வெற்றிக்கு காரணம்.

ஆர் எஸ் எஸ் ன் பல சாதனைகளுக்கு காரணம் அவர்களின் தலைமை. முதல் தலைவர் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பார், மற்றவர்கள் எந்த கேள்வியும் கேட்க்காமல் ஏற்றுக்கொள்வார்கள். 1925 ல் ஆரம்பித்த ஆர் எஸ் எஸ்க்கு இதுவரை 6 தலைவர்களே உள்ளனர்.

1.      K. B. Hedgewar 1925–1930, 

(Acting  Laxman Vasudev Paranjape   1930–1931 - ஹெட்கேவார் சிறைக்கு சென்றபோது தற்காலிக தலைவராக ஹெட்கேவரால் நியமிக்கப்பட்டவர்.) 

2. M. S. Golwalkar 1940–1973,

3. Madhukar Dattatraya Deoras 1973–1994,

4. Rajendra Singh 1994–2000,

5. K. S. Sudarshan 2000–2009,

6. Mohan Bhagwat 21 March 2009– till date,

 

இந்த முறையில் மிக முக்கியமான விடயம் தலைவர் சொன்னால் வேறு வார்த்தை இல்லை. கேட்டுவிட்டு செயல்படுவது மட்டுமே தொண்டனின் வேலை. விவாதம் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

 

ஆர் எஸ் எஸ் ன் அதிகார படிக்கட்டில் அடுத்துவருவது பிரச்சாரக். இவரை அதிகாரி என்று அழைக்கக்கூடாதுஅப்படி அழைப்பது தவறானது. இவரை உழைப்பாளி என்று அழைக்கவேண்டும்இவர் தேசத்துக்காக உழைப்பவர். இவருக்கு ஊதியம் கிடையாதுதேசத்துக்காக உழைப்பவருக்கு எதற்கு ஊதியம்?  சாப்பிட உடுக்க போக்குவரத்துக்கு என்ற எல்லா செலவுகளையும் சங்கமே பார்த்துக்கொள்ளும்.

 

இவர் ஷாகாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார், அர்ப்பணிப்புதேசபக்திதன்னமலற்ற உழைப்புபடிப்புஆர்வங்கள்அக்கறைகள்ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார். குடும்ப பொறுப்பு இல்லாத சந்நியாசியாக 25 வயதுக்கு குறைந்தவராக பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவராக இருப்பார். எப்பொழுது எங்கே பயணிக்க சொன்னாலும் பயணம் செய்ய ர்வமுள்ளவராக இருப்பார்.

 

1939ல் ஹெட்கேவார் தாதாராவ் பரமார்த் என்பவரை சென்னைக்கு பிரசாகராக அனுப்பினார். ராயப்பேட்டையில் லார்ட் கோவிந்ததாஸ் என்பவற்றின் பங்களாவில் ஆரிய சமாஜ் கூட்டம் நடைபெற்றது. அதில் சுருக்கமாக வெளிப்படையாக பேசினார். நான் ஆர் எஸ் எஸ் ஐ தமிழகத்தில் நிறுவ வந்துள்ளேன்விருப்பம் உள்ளவர்கள் என்னோடு இணையலாம். சிலர் இணைந்தனர்அவர்களை வைத்து சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள மைதானத்தில் ஷாகா நடத்தப்பட்டது. சிறிய கைத்தடியோடு நடந்த ஷாகாவை பார்த்து பரமார்த் ஐ கைது செய்தனர். அவருக்காக வழக்காடிய வக்கீல் ராஜகோபாலாச்சாரியார் பின்னாளில்  ஆர் எஸ் எஸ் இணைந்தது மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான பி மற்றும் சி மில்ஊழியர்களை ஆர் எஸ் எஸ் ன் பரமார்த் சேர்த்தார்.

 

மில் ஊழியர்களுக்கு தமிழை தவிர வேறு மொழி தெரியாதுமஹாராஷ்டிராவை சேர்ந்த பரமார்த்துக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும் இருந்தும் அவர்களை ஆர் எஸ் எஸ் சேர்த்தது பரமார்த் ன் சாதனை.

 

காரணம் என் மொழி அவர்களுக்கு புரியாது ஆனால் என் உணர்வுகள் அவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பரமார்த் சொன்னார்.

 

பரமார்த் தமிழகத்தை விட்டு சென்றபோது ஆயிரக்கணக்கான பி மட்டும் சி மில் தொழிலாளிகள் கண்ணீர்விட்டு  வழியனுப்பிய வரலாறை தமிழ ஆர் எஸ் எஸ் காரர்கள் இன்றும் சொல்வார்கள்.


உணர்வு ரீதியாக மக்களை மடையர்கள் ஆக்குவதில் வல்லவர்கள் ஆர் எஸ் எஸ் காரர்கள்.

1948 தடைக்கு பிறகான RSS ன் வளர்ச்சி

 கோல்வாக்கர் ஒருமுறை சங்கம் பரவும் பெரிய அளவில் பரவும் என்றாவது ஒருநாள் இந்தியாவில் உள்ள ஹிந்துக்களின் எண்ணிக்கைக்கும் ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் வித்யாசம் இல்லாமல் போகும் என்பது என்  நம்பிக்கை என்று சொன்னார்.

 

அதற்க்கான முயற்சிகளின் தன் ரெண்டாவது பிறப்பின் போது ஆர் எஸ் எஸ்  ஆரம்பித்தது. ஆம் ஆர் எஸ் எஸ் ஐ தடைசெய்த போது ஆர் எஸ் ன் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தவிர வேறு யாரும் அதன் தடையை எதிர்த்து பேசவில்லை. மேலும் காந்தி படுகொலையை நடத்தியவர்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழ ஊன்றிப்போனது. இதன்னை நன்கு கவனித்த ஆர் எஸ் எஸ் தங்களுக்கான ஆதரவு  தளத்தை விரிவுபடுத்த நினைத்தது.

 

அதற்க்கான அவசியம் மிகவும் அதிகமாக இருந்தது. காரணம் கம்யூனிஸ்டுகள் அந்த காலகட்டத்தில் காங்கிரசை விட மக்கள் பிரச்சனைகளை பேச ஆரம்பித்தார்கள். குறிப்பாக வங்கதேச கம்யூனிஸ்டுகள். கம்யூனிஸ்டுகள் அறிவு தளத்திலும்  மாணவர்களிடையும் அதிகம் பிரபல்யம் ஆகினார்கள். ஆந்திரத்தில் நிலையுடைமையாளர்களிடம் இருந்து நிலங்களை பிடுங்கி விவசாயிகளிடம் கொடுத்தனர். தொழில்சங்ககளிலும் நாடாளுமன்றத்திலும் ஊடுருவி மக்கள் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தனர். இந்த நேரத்தில் செயல்படவில்லை என்றால் மக்களிடம் இருந்து நாம் விலகி சென்றுவிடுவோம் என்று ஆர் எஸ் எஸ் நினைத்தது. அதற்க்கான  வேலையை தொடங்கியது.

 

1948 ஜூலையில் தொடக்கி அடுத்த ஆண்டால் 1949 ஜூலை இல் முறைப்படி பதிவுசெய்யப்பட்டு உலகுக்கு அறிமுகமான இயக்கம் தான் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP). இந்த வகையில் ஆர் எஸ் எஸ் முதல் குழந்தை என்று இதை சொல்லலாம். அறிவு தளத்தில் உள்ள மாணவர்கள்ஆசிரியர்கள் எல்லோரும் சேர்ந்து தொடங்கிய அமைப்பு என்று சொல்லப்பட்டது. கல்வித்துறையில் மகத்தான மறுமலர்ச்சியை அவர்களின் இலக்கு.

 

பல்கலைக்கழ அளவில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் சாதி மத மொழி வேறுபாடு இன்றி கல்லூரி பள்ளி என்று தன் எல்லையை விரிவுபடுத்தியது. குறிப்பாக குஜராத் மற்றும் பீகாரில் நல்ல வரவேற்பு கிடைத்தது. எங்கெல்லாம் சாதி அரசியல் புகுந்ததோ அங்கெல்லாம் ABVP புகுந்தது.

மாணவர்களின் தலைவர்கள் பெரும்பாலும் ஆர் எஸ் எஸ் ஷாகாவில் பயிற்சிபெற்றவர்கள் ஆக இருந்தார்கள். இவர்கள் அதிகப்படியான மாணவர்களை ஷாகாவிற்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். குறிப்பாக மும்பையை சேந்த யஸ்வந்த்ரோ கேல்கர் வளர்ச்சி அலுவலர் ஆக பொறுப்பேற்றவுடன் ABVP அமைப்பின் வளர்ச்சி அசுரவேகத்தில் இருந்தது.

 

இன்று குறைந்த பட்சம் ஒன்னரை கோடி உறுப்பினர்கள் இந்த இயக்கத்தில் அங்கத்தினராக உள்ளனர். இந்த அளவுக்கு உறுப்பினர்களை கொண்ட அமைப்பு வேறு எதுவும் இந்தியாவில் இல்லை. ஆர் எஸ் எஸ் ஆரம்பித்தபோதே அவர்களின் நோக்கம் பத்து பன்னிரண்டு வயதினரை குறிவைத்துதான் வளர்ந்தது. சிறிய வயதில் விதைப்பது பசுமரத்தாணி போல் மனதில் பதியும் என்பதால் சிறு வயது குழந்தைகளுக்கு போதையை ஊட்டி வளர்த்தார்.

 

புதிய கல்வி சாலைகளை திறப்பது அடுத்த திட்டம். இது கிருஸ்துவ மிஷினரிகளுக்கு மாற்றாக ஆரம்பிக்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் மராட்டிய தலைவர் நானாஜி தேஷ்முக் என்பவரை  உத்திரபிரதேச கோரக்பூருக்கு அனுப்பினார்கள். அங்கே சரஸ்வதி சிசு மந்திர் பிறந்தது. உத்திரபிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் நாடெங்கும் பரவியது. கட்டாய ஆரம்பக்கல்வியை ஊக்குவித்த இந்த நிறுவனம்ஏழை மாணவர்களை இலக்காக கொண்டு செயல்பட்டது. கிருத்துவ மிஷினரிக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டு ஹிந்து ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வியை அளித்தது. 1977 ல் சிசு மந்திர்,   வித்யா பாரதி என்ற ஒருங்கிணைக்கப்பட்ட பள்ளிக்கூடமாக உருமாறியது. இந்தியா முழுவதும் சுமார் 20,000 பள்ளிகள்ஒரு லட்சம் ஆசிரியர்கள், 25 லட்சம் மாணவர்கள் இதில் உள்ளனர். பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களிடம் ஆர் எஸ் எஸ் ஐ கொண்டு சேர்க்க இந்த பள்ளிக்கூடங்கள் உதவின.


இவ்வாறு தடைக்குப்பின் தன் ஆளுகையை ஆர் எஸ் எஸ் விரிவாக்கியது. 

Sunday, December 12, 2021

பாபரி மஸ்ஜிதும் கீழவெண்மணி சம்பவமும்

எல்லா தீர்ப்பும் நீதியல்ல என்பதற்கு  கீழவெண்மணி படுகொலைகள் சம்பவமும் பாபரி மஸ்ஜிதின் தீர்ப்பு போல ஒரு எடுத்துக்காட்டு  

கூலியை அரைபடியாக உயர்த்திகேட்டு  போராடியமக்களை 1968 டிசம்பர் 25 அன்று நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள்விவசாயிகளைத் தாக்கினார்கள்விவசாயிகளும் திருப்பித் தாக்கினார்கள்நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள்ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் ராமையன் என்பவரின் குடிசைக்குள் ஓடி  ஒளிந்தார்கள்எட்டடி நீளம்ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர்  அடைந்திருந்தனர்கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில்அக்குடிசை   எரிந்து சாம்பலானதுபெண்கள்குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி   மாண்டனர்.


கூலியை முறைப்படியாக உயர்த்திகேட்டதற்கு தண்டைனையாக நடத்தப்பட்ட படுகொலையை கீழவெண்மணி சம்பவம்சமூகநீதியை பேசிய திமுக அண்ணாதுரையின் ஆட்சியில் நடந்த அவலம்


இந்தக் கோர சம்பவத்தை அறிந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பி.ராமமூர்த்தி தலைமையில் வெண்மணி கிராமத்தினுள் நுழைந்தனர்வெண்மணியில் நடந்த இந்தக் கோர சம்பவத்தை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை.   பண்பாடுநாகரிகம்மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில்வெண்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட 44 தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின்மீது குறைந்தபட்ச   இரக்கம்கூடக் காட்டவில்லைகம்யூனிஸ்டுகள் மட்டுமே போராடி வந்தனர்
மக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் வெண்மணி படுகொலைகளுக்கு எதிராக அன்றைய முதலமைச்சர் அண்ணாகணபதியா பிள்ளை தலைமையில் தீர்ப்பாயம் அமைத்தார்ஆனாலும்அடிப்படையான ஆதாரமான உண்மை வெளிவரவில்லைவெண்மணி சம்பவத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர்


பாதிக்கப்பவர்களின் புறத்தில் இருந்த நந்தன் அவருடைய கூட்டாளிகளின் உதவியோடு 14.12.1980 தேதி கோபாலகிருஷ்ண நாயுடு இரிஞ்சூர் கிராமத்தில்   கொலை செய்யப்பட்டார்சமூகநீதி நிலைநாட்டப்பட்டதுஇதேபோல் பாபரி   மஸ்ஜிதை திரும்பவும் கட்டி நீதியை நிலைநாட்டுவோம்.

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...