Friday, November 23, 2018

உலகில் மதங்கள் உண்டா?

உலகில் மதங்கள் உண்டா?
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலர் வாக்குக்கிணங்க உலகத்தில் தோன்றிய எல்லா இறைத்தூதர்களும் ஓரிறையைத்தான் போதித்தார்கள், காலப்போக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளை, ஆண் பெண் கடவுளை மக்கள் படைத்தனர், கற்பனையில் தோன்றிய உருவத்தை கடவுள் என்று வணங்கினர்.
இங்கே இன்னொரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன், நமதூரில் இன்னொரு பழமொழி கூட சொல்வார்கள் விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர் அப்படின்னு, அதாவது உயிரோடு இருப்பவர்கள் இறைவனை காணமுடியாது என்பதுதான் இதன் பொருள். அப்படி இருக்க யார் இறைவனை கண்டது ? காணாதபோது எப்படி உருவம் வரையமுடியும்? இங்கேயும் நான் தமிழ்ப்பழமொழியைத்தான் மேற்கொள் காட்டி இருக்கேன், இஸ்லாத்தை அல்ல.

உலகில் முக்கியமான ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் மற்றும் யூத மதங்களை பற்றி பார்ப்போம்.
ஹிந்து என்பது பூகோள வரையரையே தவிர மதமல்ல, ரிக், யஜுர், சாமம் மற்றும் அதர்வண வேதங்களில் ஹிந்து என்பது மதம் என்று குறிப்பிடப்படவில்லை, மாறாக சிந்து சமவெளி நாகரீகத்தையே குறிக்கிறது, ஆக சீனாவில் வசிப்பவர் சீனர்கள் என்பதுபோல், இந்தியாவில் வசிப்பவர்கள் இந்துக்கள்.
இயேசு கிருஸ்து உயிரோடு இருக்கும் வரை கிறிஸ்துவம் என்ற மதம் இல்லை, இயேசு கிருஸ்து தன்னை கடவுள் என்று சொல்லவும் இல்லை, ஆக கிறிஸ்துவம் என்பது தவறான வாதமே. பைபிளில் எங்கேயும் கிருஸ்துவமதம் சொல்லப்படவில்லை.
அதே போல யூதர்களின் புனிதநூலான தோராவில், யூத மதம் என்று ஒன்று குறிப்பிடப்படவில்லை, அவர்கள் பல விஷயங்களில் கிருதுஸ்துவர்களோடும், முஸ்லீம்களோடும் ஒத்து போவார்கள்.
இஸ்லாம் என்பது மதமல்ல, அது இறைவனை அடையக்கூடிய மார்க்கம் என்றுதான் குரான் சொல்கிறது, யார் ஒருவன் இறைவனுக்கு கட்டுப்படுகிறானோ அவன் முஸ்லீம்.
முதலில் சொன்னது போல, இறைத்தூதர்களை மக்கள் கடவுளாக ஆக்கினார்கள், அதன் அடிப்படியில் ஹிந்து மதத்தில் பல இறைத்தூதர்களை கடவுளாக ஆக்கியுள்ளார், இதை புரிய நிறைய விளக்கம் தேவைப்படுகிறது, இங்கே நான் ரத்தினைசுருக்கமாய் சிலதை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
நான் அறிந்தவரை இஸ்லாம் சொல்லும் இறைதூதர்களே ஹிந்து மதத்தில் நம்பப்படும் அவதாரங்கள்.
அவதாரங்கள் ஏன் எதற்கு என்று கேட்டால் எந்த ஹிந்துவும் சரியாக பதில் சொல்லமாட்டார்கள் அல்லது தெரியாது, இங்கே ஒரு சிறிய கேள்வி, அவதாரமாக கடவுள் வரவேண்டிய நோக்கம் என்ன?
கடவுள் என்றால் மனிதனுக்கு மேலே ஒரு உயர்ந்தது, கடவுள் மனித உரு எடுத்தால் என்ன விபரீதம் ஏற்ப்படும்? நம்மைப்போல ஒன்றுக்கு இரண்டுக்கு போகவேண்டும், பசி கோபம் பழிவாங்குதல் போன்ற செயல்களை செய்யவேண்டி வரும், இந்த குணநலன்கள் இறைவனுக்கு கொடுத்து நம்மைப்போல் இறைவனின் புனிதத்தை பாழ்படுத்தலாமா?.
உதாரணமாக விநாயகர் சதுர்த்தியை எடுத்துக்கொள்ளுங்கள், விநாயகர் உருவான வரலாறை படியுங்கள், இது நடப்பதற்கு சாத்தியமா? ஒருவேளை கடவுளால் சாத்தியம் என்றால், பார்வதி குளிக்கச்செல்கிறார்கள், ஏன் குளிக்கவேண்டும், அசுத்தமடைந்தால் தானே குளிக்கவேண்டிவரும், நாமே கடவுளை அசுத்தமாவங்கன்னு சொல்வது சரியா?
மேலும் சதுர்த்தி முடிந்ததும் நீர்நிலைகளில் போடவேண்டிய காரணம் என்ன? எந்த ஹிந்துவுக்காவது தெரியுமா? அதே போல் எல்லா விசேஷத்தின் நாட்களும் சமஸ்கிருதத்தில் வரும், இதிலிருந்து தெரிவது என்னவென்றால், பார்ப்பனர்கள் மக்களை அடிமைப்படுத்தி கட்டுக்கதைகளை கடவுளின் பெயரில் இட்டுக்கட்டி நம்பவைத்துள்ளனர்.
இதனால் அவர்கள் சுகபோகமாக வாழ்வார்கள், எனக்கு தெரிந்து பல வேண்டுதல்கள் தீமிதிப்பது, அலகு குத்துவது பெரும்பாலும் பிராமணர் அல்லாத மக்கள்தான் செய்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வந்து உருவமற்ற வழிபாட்டை செய்துகொண்டிருந்த மக்களை அடிமைப்படுத்தி, கடவுளின் பெயரில் கட்டுக்கதைகளை சொல்லி அவர்கள் சுகபோகமாக வாழ்ந்தனர். இன்று அதை மக்களிடம் பிரச்சாரம் மூலம் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எல்லா சாதியினரையும் ஹிந்துக்கள் என்று சொல்லிக்கொண்டே ஒரு சாராரை கோவிலுக்குள் விடுவதில்லை.

ஆக உலகில் மதங்கள் இல்லை, மனிதர்கள் தான் தன சுய லாபத்திற்காக மக்களை மதங்களை கூறுபோட்டு கேவலப்படுத்துகிறார்கள்.

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...