Tuesday, March 14, 2023

பசும்பாலா? பன்றிப்பாலா?

பால்

நம்மிடையே உள்ள அடுத்த மிக பெரிய அறியாமை பாலை பற்றியது. வெண்மை புரட்சி என்ற பெயரில் நம் அறிவார்ந்த விஞ்ஞானிகள் செய்த பெரிய சீர்கேடு இன்று  பாக்கட்டில் வரும் பால். பால் என்ற உணவு தாயின் மடியில் இருந்து குழந்தைகளுக்கு நேரடியாக செல்லவேண்டிய ஒரு உணவுஅதனால் தான் குர் ஆன் இவ்வாறு கூறுகிறது

 தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; (2:233)

 

மனிதனை தவிர எந்த ஒரு உயிரனமும் இரண்டு வருடத்திற்கு மேலாக பால் 

அருந்துவதில்லை. மேலும் எந்த ஒரு உயிரினமும் மற்ற ஒரு விலங்கின் பாலை 

அருந்துவதில்லை. பண்டைய காலத்தில் கன்றுக்கு எஞ்சிய பால் மோராகவும்

தயிராகவும்வெண்ணையாகவும் மட்டுமே பெரிதும் பயன்பட்டது. நம் நாட்டு 

பசுவிடம் 1.5 லிட்டர் பால் கிடைப்பதே அரிது. மேலும் கன்றின் பாலை கவரும் 

துர்மதி நமக்கு இருந்தது இல்லை. ஆனால் இன்று மனிதனின் பேராசையின் 

விளைவாக பன்றியின் ஹார்மோன் சேர்க்கப்பட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஜெர்சி பசுக்கள் எங்கும் காணப்படுகின்றன. இவை அனைத்தும் பசுவின் போர்வையில் இருக்கும் பிசாசுகள்.

 

பல லிட்டர் பால் சுரக்கவேண்டும் என்பதற்க்காக ஆக்சிடாக்சின் (oxytocin) போன்ற  ஊக்கமருந்துகள் அளிக்கப்பட்டு பால் உருவாக்கப்படுகிறது. மிக எளிதில் கெட்டு போகக்கூடிய குணம் கொண்ட பால் கெட்டுப்போகாமல் 

இருப்பதற்காக ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுகுளிரூட்டி பதப்படுத்தப்படுகிறதுஅதன் பின்னால் நுரை வருவதற்காகவும்கெட்டியாக இருப்பதற்காகவும் 

கேடு விளைவிக்கும் யூரியாவெண்மையாக இருப்பதற்கு ரசாயனம் (Bleaching Powder) போன்றவை சேர்க்கப்பட்டு நம்மை வந்து சேர்க்கிறது. இதை 

பச்சிளங்குழந்தைகள் முதல் பாட்டி வரை அனைவரும் ஊட்டச்சத்தான உணவு என நினைத்து குடிக்கிறார்கள்.

 

பால் ஒரு முழுமையான உணவு என்று அடிக்கடி வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து போகிறோம். பால் அருந்த வேண்டாம் என்று யாராவது கூறினால் 

உடனே நமது மூளைக்கு ஒன்றுதான் தோன்றுகிறது. பால் குடிக்காவிட்டால் எப்படி உடலுக்கு கால்சியம் கிடைக்கும்?  நம்முடைய அறிவிற்கு கால்சியம் 

பற்பசையிலும் பாலிலும்  மட்டும் தான் இருக்கிறது என்று விளம்பரங்களில் 

காட்டப்படுகிறது. பற்பசையினால் கால்சியம் பற்களில் ஒட்டிக் கொள்ளும் என நினைப்பது நமது அறியாமை. இதில் வியப்பு என்ன வென்றால் சிறிதும் விஞ்ஞானம் இல்லாத இந்த கருத்தை மருத்துவர்கள் வந்து தொலைகாட்சி 

விளம்பரங்களில் பரிந்துரைப்பார்கள். நம் குழந்தை பருவத்தில் பல்துலக்கிய 

கரியும்,  வேப்பங்குச்சியும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கவல்லது. வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றத்தை மூன்றே நிமிடத்தில் 

போக்கவல்லது இந்த கரி. நம்மை முட்டாளாக்கிவிட்டு இப்போது உங்கள் பற்பசையில் கரி இருக்கிறதா என்று உப்பு இருக்கிறதா 

என்று கேட்கிறார்கள்.

 

உண்மை என்னவென்றால் ஒரு லிட்டர் பசும்பாலில் 1 கிராம் மட்டுமே கால்சியம் உள்ளதுஆனால் நமது உடல் கிரகிக்கும் 

அளவு 160 மில்லி கிராம் மட்டுமே. பாலைவிட அதிகமாக தேங்காயில் 

கால்சியம் உள்ளதுபால் குடித்தும் கால்சியம் பற்பசை பயன்படுத்தியும் 

ஒரு கொய்யா காயை கூட கடிக்கமுடியாமல் தான் நமது 

பிள்ளைகளின் பல் உள்ளது.

 

பனீர்சீஸ் மற்றும் பால் பொருட்கள்

 

இப்பொழுது வேடிக்கையான விளம்பரம் ஒன்றை காணலாம், "உங்கள் குழந்தைகளுக்கு பாலின் அனைத்து சத்தும் சென்று சேரவில்லையாபாலில் உருவான சத்துக்கள் நிறைந்த பனீர்சீஸ் வாங்கி கொடுங்கள் என்று. பாலை விரும்பாத குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுகின்றன. பால் வணிகமும் ஆயிற்று அதனை தொடரும் நோய்களின் 

வணிகமும் ஆயிற்று. இது தான் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.

 

உண்மையில் பாலின் அடுத்த பரிணாமம் இவை அனைத்தும். பால் பொருட்களை அதிகம் உட்கொள்ளும் வியட்நாம் போன்ற நாடுகளில் தான் எலும்பு தேய்மான பிரச்னை அதிகம். செயற்கையான முறையில் 

தயாரிக்கப்படும் இந்த பாலை பருகுவதால் சிறுநீரக பாதிப்புகள்

எலும்பு முறிவு மற்றும் புற்றுநோய் கூட வர வாய்ப்பு இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

இன்று சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது 

மட்டுமல்லாமல் நோய் ஏற்படும் வயது குறைந்து குழந்தைகளும் 

நோயாளி ஆவதுதான் அபாயத்தின் அறிகுறி. இன்று நமக்கு 

அனைத்திற்கும் மாத்திரை தேவைப்படுகிறது. மலம் கழிக்கபசி எடுக்கதூக்கம் வரதாம்பத்தியம் கொள்ளகுழந்தை பெற்றுக்கொள்ள போன்ற இயற்கையான விஷயங்களுக்கும் மாத்திரைகளும் 

அறுவை சிகிச்சைகளும் தேவைப்படுகின்றன. பெங்களூரில் ஆயிரம் கணிப்பொறி வல்லுநர்களை பரிசோதித்தபோது வெறும் 3 நபருக்கு 

மட்டுமே 50 மில்லியனுக்குஅதிகமான விந்தணுக்கள் இருப்பது 

கண்டறியப்பட்டது.

 

பெண்களுக்கு மாதவிலக்கு மற்றும் கர்ப்பப்பை பிரச்சனைகள் ஆண்களுக்கு  விந்தணுக்கள் குறைபாடு. இப்படி இருந்தால் குழந்தை எப்படி பிறக்கும்இன்றே  இப்படி இருந்தால் வரும் சந்ததிகளின் எதிர்காலத்தை நினைத்து பார்க்க முடியுமாஜெர்மனியில் இந்த நிலை ஏற்கனவே 

உருவாகிவிட்டது. குழந்தை இல்லாத தம்பதிகள் அங்கு அதிகம். அங்கு குழந்தை பெற்றுக்கொண்டால் அரசாங்கம் அனைத்து  சலுகைகளையும் 

வழங்குகிறது. ஏனென்றால் அங்கு குழந்தை பிறப்பதே  அரிதாகிவிட்டது. 

இங்கும் வீதிக்கு வீதி செயற்கை கருத்தரிப்பு மையங்கள் உருவானதற்கு 

இயற்கைக்கு மாறாக தயாரிக்கப்படும் பால் முக்கிய காரணியாகும்.

 

பால் பொருட்களை தயாரிக்க பல ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன

அதனால் பல வியாதிகளும்நீரிழிவு நோயும்மலட்டுத்தன்மையும் 

உருவாகிறது.

 

குர் ஆன் சொல்வதுபோல குழந்தைகளுக்கு 2 வருடங்கள் நிரப்பமாக பாலூட்டினாலே போதுமானதுகால்சியம் தேவைக்கு எள்தேங்காய் பால்ராகி மற்றும் தினை பால்களை பயன்படுத்தலாம். ராகி மற்றும் தினை பால்களை 

சூடாக குடிக்கவேண்டும் என்றால் நேரடியாக சூடாக்காமல் ஆவி முறையில் சூடாக்கி  குடிக்கலாம்.




 
நம் அன்றாட உணவில் இருந்து இந்த பால் பொருட்களை நீக்குவதே நாம் ஆரோக்கியத்தை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி.

2 comments:

meeran said...

மிகவும் பயனுள்ள அதே சமயம் சிந்திக்க வேண்டியதும் கூட...

meeran said...

மிகவும் பயனுள்ள அதே சமயம் சிந்திக்க வேண்டியதும் கூட...

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...