Wednesday, January 5, 2022

பெரும்பான்மையினர் பக்கம் தமிழக மற்றும் இந்திய அரசுகள்

 தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட பல விடயங்களில் முன்னோடியாக உள்ளதற்கு காரணம், இங்கே சாதி மத இனம் என்ற பாகுபாடு பார்க்காமல் மக்கள் வாழ்வதே ஆகும். சாதி ஆவணப்படுகொலைகள் நடந்தாலும் மாற்றுமதத்தினருடன் உறவு சொல்லி பழகும் கலாச்சாரம் இங்கே அதிகம். அதற்க்கு முக்கிய காரணம் சமூக நீதி, பெரியார், அண்ணாதுரை. ஆனால் காலம் செல்ல செல்ல சமூகநீதி அரசு பெரும்பான்மையினருக்கு சாதகமாக  செயல்பட்டுவருவதை நாம் காணலாம். அரசன் மக்கள் அனைவருக்கும் பொதுவானவன். சாதி மதத்தால் அவனை குறுக்கிவிடமுடியாது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்தியாவிலும் தமிழகத்திலும் இந்த நிலைமை மாறிக்கொண்டு இருக்கிறது.
 
சாதி படிநிலையை தூக்கிப்பிடிக்கும் வர்ணாசிரமத்தை நிலைநாட்ட துடிக்கும்  பார்ப்பன பனியாவின் அடாவடிக்கு இந்தியா அடிபணிந்துவிட்டது. காரணம் ஆர் எஸ் எஸ் மற்றும் பிஜேபி என்றாலும் அவர்களுக்கு ஒத்து ஓதும் எதிர்க்கட்சிகளும். எங்கே நடுநிலைமையாக் செயல்பட்டால் இந்துக்களின் எதிரி என்று முத்திரைகுத்தப்படும் அவலம் இங்கே நிலவுகிறது.
 
தமிழக திராவிட அரசு எப்படி பெரும்பான்மைவாத அரசாக மாறியது என்று ஒரு சிறிய விளக்கம்.
 
பெரியார் பிள்ளையார் சிலையை உடைப்பேன் என்றார்காரணம் மூடநம்பிக்கையின் நட்சத்திரமாக இந்த கடவுள் (?) விளங்குவதால்.
 
அண்ணாதுரை ஒன்றேகுலம்  ஒருவனே தேவன்பிள்ளையாரை வணங்கவும் மாட்டேன் உடைக்கவும் மாட்டேன் என்று கூறி பின்னாளில் கற்பனை காவியமான கம்பராமாயணத்தை எழுதிய  கம்பருக்கு சிலைவைத்து தன் முட்டாள் தனத்தை உறுதிப்படுத்திக்கொண்டார். இந்த சிலைவைப்பு எல்லாம் கம்பராமாயணத்தை ஆதரிக்கவும் அதை உறுதிப்படுத்தவும் தான். மாறாக கம்பரால் தமிழ் அடைந்த நன்மை என்று ஒன்றும் இல்லை. ஆக ஓட்டுக்காக மக்களை திருப்திப்படுத்த ஆட்சியாளர்கள் தயாராகிவிட்டனர். இந்த சிலைகளால் தமிழுக்கும் தமிழக மக்களுக்கு ஒருபயனும் இல்லைமாறாக தமிழக அரசு பல கொடிகளை இழந்ததுதான் மிச்சம்.
 
அண்ணாவுக்கு பிறகு வந்த கருணாநிதிஇந்துக்களை திருடர்கள் என்று சொன்னாலும் முஸ்லிம்களை திட்டமிட்டு வஞ்சித்தார். முஸ்லிம்களின் பல தொகுதிகளை பிடுங்கிக்கொண்டு இதயத்தில் இடம் கொடுத்தார். முஸ்லீம் தீவிரவாதி என்ற பதத்தை முதன் முதலில் பிரகித்தது இவரே. ஆக இவரும் பெரும்பான்மையினருக்கு சாதகமாக நடந்து சமூக நீதியை குழி தோண்டி புதைத்தார்.
 
இந்துக்களின் எதிரி திமுக என்ற பொய்யான குற்றச்சாட்டுக்கு பதில் தருகிறேன் பேர்வழி என்று ஸ்டாலின் அவர்கள் 2019 நாடாளுமன்ற தேர்தலின் அர்ஜுன் சம்பத் பாராட்டும் அளவுக்கு முஸ்லிம்களுக்கு ஒரு சீட்டுக்கூட தன் கட்சியின் சார்பாக கொடுக்கவில்லை.
 
முஸ்லிம்களின் சிறைவாசி விடயத்தில் ஓரவஞ்சகம் செய்யும் எல்லோருக்குமான முதல்வராக ஸ்டாலின் இருக்கமுடியாது என்பதே என் கருத்து. 2021 தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அப்துல் சமத்துக்கு போட்டுவைத்து மாலையிட்டது பெரும்பான்மையினரின் வாக்கைப்பெறுவதற்க்கே. ஆக தமிழகத்தில் திராவிட கட்சி முஸ்லிம்களை திட்டமிட்டே எல்லா விடயங்களிலும் ஒன்று ஒதுக்குகிறது அல்லது பெரும்பான்மைவாதத்திற்கு பலிகடா ஆக்குகிறது.
 
உண்மையில் அரசியல் என்பது எல்லோருக்குமானது. ஆனால் இன்று மத்தை அரசியலில் புகுத்தி மத அரசியலை இந்தியா முழுவதும் பிஜேபி செய்துவருகிறதுஅதற்க்கு ஈடுகொடுக்கவேண்டு எல்லா மாநில அரசும் பிஜேபி யை பின்பற்றி சமூகநீதியை குழிதோண்டி புதைத்துவிட்டது.
 
ஜீசசுக்கு கொடுப்பதை ஜீசசுக்கு கொடுசீசருக்கு கொடுப்பதை சீசருக்கு கொடு என்று அரசியலையும் மதத்தையும் கிறிஸ்துவம் பிரித்தது. அகண்ட பாரதத்தை அமைக்க பாடுபடும் ஆர் எஸ் எஸ் திட்டங்களை சட்டபூர்வமாக நிறைவேற்ற பிஜேபி  உள்ளது. ஆக பிஜேபி இந்து மதத்தை அரசியலுக்கு பயன்படுத்துகிறது.
 
ஆனால் இஸ்லாம் மட்டுமே உண்மையானமக்களுக்கானதூய்மையான அரசியலை முன்னெடுக்கிறது.  அரசியலும் ஆன்மீகமும் வேறுவேறு அல்லமக்களுக்கு பணிசெய்வதே  ஆன்மீகத்தின் முக்கிய கூறு என்று இஸ்லாம் எடுத்தியம்புகிறது. இஸ்லாம் என்றாலே பொதுநலன்மற்றவர் நலன் என்கிறது இஸ்லாம். ஆனால் இஸ்லாம் எந்த இடத்திலேயும் அரசியலை மார்க்கத்தை பரப்புவதற்கு  பயன்படுத்தவில்லைபயன்படுத்தவும் கூடாது. இஸ்லாமிய ஆட்சியின் கீழே எல்லா மதத்தினரும் தங்கள் மத சுதந்திரப்படி வாழ அனுமதிக்கப்பட்டது அதனால் தான்.
 
 
ஆனால் இன்றைய சாபக்கேடு இந்தியாவில் முஸ்லிம்கள் தங்களின் கடமைகளை சரிவர பின்பற்றமுடியவில்லைஉரிமைகள் மறுக்கப்படுகிறது. பெரும்பான்மையினருக்கு ஆதரவாக செயல்படஒத்து ஓத  வேண்டியது இருக்கு. ஜனநாயக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகிறது. சமூக நீதி பேசக்கூடிய தமிழகத்திலும் இதே நிலைதான்.


நாம் தமிழர் கட்சியும் முஸ்லீம்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் தேர்தல் வரைவறிக்கையில் பிரபாகரன் இறந்தால் இறைவன் என்றும் வழிபாடு விடயங்களையும் பேசுகிறது
 
மதத்தை முன்னிறுத்தி செய்யப்படும் அரசியலை புறக்கணிக்கத்தவரை இந்த  திமுக ஆட்சி  விடியாத ஆட்சியே.

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...