Tuesday, June 29, 2021

காங்கிரசின் தோல்வியும் பிஜேபி யின் பி டீம் என்ற வாதமும் - உத்திரபிரதேச தேர்தல் ஒருபார்வை


403 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்திர பிரதேசத்தில் வருகிற 2022  பிப்ரவரி அல்லது மார்ச்சில் தேர்தல் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2012 ஆக இருக்கட்டும் 2017 ஆக இருக்கட்டும் பிஜேபி க்கு எதிரான வலுவான கூட்டணி அமைக்கப்படவில்லை. 2012 ல் ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி பார்ட்டி 2017 ல் ஆட்சியை இழந்தது, காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளமுடியவில்லை. 2012 ல் 47 இடங்களை பெற்ற பிஜேபி 2019 ல் 312 இடங்களை பிடித்து ஆட்சியில் அமர்ந்தது. தனது வெற்றிபெற்ற இடத்தை 85% ஆக ஐந்து வருடத்தில் அதிகரித்துள்ளது. காரணம் SP மட்டுமல்ல, பகுஜன் சமாஜ்வாதி, கம்ம்யூனிஸ்ட் & சிவசேனா போன்ற கட்சிகள் 2012 ல் போட்டியிடவில்லை, ஆனால் 2017 ல் களமிறக்கப்பட்டது. இன்று உவைஸி 2022 ல் போட்டியிடப்போகிறார் என்று தெரிந்தவுடன் காங்கிரசின் வெற்றியை பறிக்க போகிறார் என்று துணிந்து பொய் சொல்லும் நமக்கு தெரியுமா? காங்கிரஸ் கடந்த முறை 7 சீட்டை மட்டுமே பெற்றது என்று?



ஏற்கனவே 2017  ல் உவைசியின் AIMIM  38  இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தை கூட வெல்லவில்லை, வரும் தேர்தலில் 100  இடங்களில் நிற்போம் என்றதும் பிஜேபி யின் பி டீம் என்ற ஓட்டை காரணத்தை தூக்கிக்கொண்டு வருகிறார்கள். இவர்களை பொறுத்தவரை முஸ்லிம்கள் அதிகாரத்தை பெற்றுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள், அதற்க்கு ஒத்து ஊதுவதும் முஸ்லிம்களே. காலத்திற்கும் திமுக, காங்கிரஸ் ன்னு ஆதரவு தந்துகொண்டே இருக்கவேண்டும், காங்கிரஸ் வெற்றிபெற்று பணம் வாங்கிக்கொண்டு பிஜேபி க்கு சென்றுவிடுவார்கள், நாம் தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு நடுத்தெருவில் CAA  க்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கவேண்டும். 

பிஜேபி யின் கெடுதல்கள் தெரிந்த பின் பிஜேபி யை தவிர்த்து மற்ற எல்லா கட்சிகளையும் காங்கிரஸ் ஒன்றிணைக்கவேண்டும். 60 வருடம் இந்தியாவை ஆண்ட கட்சியால் தனக்கான தலைவரை கூட தேர்தெடுக்கமுடியாத நிலையில் இருக்கும் காங்கிரசுக்கு இது சாத்தியமில்லை என்றால் தேர்தலில் நிக்காமல் இருப்பதே நல்லது. தேர்தலில் நின்றால் ஓட்டுப்பிரியும், பிஜேபி வந்துவிடும். ஒருவேளை வெற்றிபெற்றால் காங்கிரசின் MLA  க்கள் பிஜேபி க்கு சென்றுவிடுவார்கள். 

தன் இயலாமையை மறைக்க மற்றவரை பிஜேபி யின் பி டீம் என்று சாடுவதை எல்லா கட்சிகளும் நிறுத்திக்கொள்வது நல்லது. இல்லையென்றால் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள். 

இனியாவது அரசியலை படியுங்கள், விளங்குங்கள், எல்லோரும் சொல்வதால் நாமும் சொல்லவேண்டும் என்ற கட்டாயம் இல்லை, நமக்கு இறைவன் அறிவை கொடுத்துள்ளான், ஆராய்வோம், முஸ்லீம் சமுதாயத்திற்கு எதிராக நாமே செயல்படவேண்டாம். 

Wednesday, June 23, 2021

பெட்ரோல் விலையும் மதுவிலக்கும்

 பெட்ரோல் விலை 

பெட்ரோலின் விலை கச்சா எண்ணெய்க்கு தகுந்தவாறு மாற்றி அமைக்கப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை ஏறும்போது பெட்ரோல் விலை ஏறுகிறது, ஆனால் குறையும் போது குறைவதில்லை. தன் பங்குக்கு கலால் வரியையும் மத்திய அரசு குறைப்பதில்லை. 

மக்கள் வாங்கும் அளவுக்கு தான் விலையை நிர்ணயித்து உள்ளோம் என்று சொல்லும் பிஜேபி யினருக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவான விஷயம். மேலும் விலையை குறைத்தால் நிறைய வாங்கி மாசை அதிகப்படுத்துவார்கள். விலையை குறைக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் பாசிச அரசு சொல்லும் சாக்கு தான் இந்த காற்றை மாசுபடுத்தும் சொல்.

பாசிச அரசு உண்மையிலேயே மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால் பெட்ரோல் விலையை குறைத்து மக்களுக்கு நல்லது செய்யலாம். கூடுதலாக மக்கள் வாங்காமல் இருக்க வண்டியின் எண் ஐ பயன்படுத்து ரேஷன் முறையில் பெட்ரோலை விற்கலாம். இன்று எவ்வளவு விற்பனை ஆகிறதோ அதே அளவு விற்பனையை குறைந்த விலைக்கு ரேஷன் முறையில் வழங்கினால் மக்களும் சந்தோசமாக இருப்பார்கள். மேலும் காற்றும் மாசுபடாது.

மதுவிலக்கு

பல நாடுகளில் sin commodity என்று  சிகரெட் மற்றும் மதுக்களை அழைப்பார்கள். அதிகமான வரிகளை போட்டு மக்கள் வாங்குவதை குறைப்பார்கள். விலை அதிகம் ஆகும் போது மக்கள் வாங்காமல் விடவும் சாத்தியமுண்டு. அதை போல தமிழகத்தில் பின்பற்றப்படவேண்டும். வரியால் அதிக பணமும் கிடைக்கும், மக்களும் குடிப்பதை குறைப்பார்கள்.

ஆக பெட்ரோலுக்கு வரியை குறைத்தும் சாராயத்திற்கு வரியை அதிகப்படுத்தியும் மக்களை நிம்மதியாக அரசுகள் வாழவிடவேண்டும்.

Friday, June 11, 2021

நீட் தேர்வு கடந்து வந்த பாதை

நீட் தேர்வு

2012 ஆம் ஆண்டு நீட் தேர்வு மருத்துவ இளங்கலை மற்றும் முதுநிலை படிப்பிற்கு நீட் தேர்வு நடத்தப்படவேண்டும் எண்டு CBSE மற்றும் இந்திய மருத்துவ கழகம் (Medical  Council  of  India) என்று சொன்னது. 

05-May-2013 அன்று நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. 

உச்சநீதி மன்றத்தில் 115 வழக்குகள் நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 18-Jul-2013 அன்று மூன்று நீதிபதிகளின் அமர்வில் அல்தாமஸ் கபீர் என்ற நீதிபதியின் தலைமையில் விக்ரம்ஜித் சென் என்ற நீதிபதியின் ஒப்புதலோடு நீட் தேர்வு இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என்ற தீர்ப்பு வெளியானது. அதே நேரத்தில் மூன்றாவது நீதிபதி அணில் ஆர் தாவே தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்றில் இரண்டு பேர் எதிர்த்ததால் நீட் தேர்வுக்கு தடை விதித்து தீர்ப்பு வெளியானது.

மேலும் ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் NEET  தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. தேர்வின் பாடத்திட்டம் CBSE ல் இருந்து எடுக்கப்படுகிறது, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு இது சிரமத்தை உண்டாக்கும் மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே கேள்வித்தாள்கள் உள்ளது என்றும் மாநிலங்கள் எதிர்த்தன. 

நீட் தேர்வின் ரத்துக்கு எதிராக 11-April-2016 அன்று மத்திய அரசு மேல் முறையீடு செய்தது. ஐந்து பேர்கொண்ட நீதிபதிகளுக்கு தலைமை தாங்கிய அணில் ஆர் தாவே ( SK Singh and AK Goel) நீட் தேர்வு தேவை என தீர்ப்பு வழங்கினார். ஏற்கனவே நீட்டை எதிர்த்த நீதிபதி விக்ரம்ஜித் சென் 30-12-2015 அன்று ஓய்வு பெற்றிருந்தார்.

[2016 மே மாதம்  தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு நீட் தமிழகத்திற்கு தேவை இல்லை என்று கடிதம் எழுதினர், அந்த கடிதத்தில் பெயரில் 2016 ஆண்டு மட்டும் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அடுத்த வருடத்துக்குள் பாடத்திட்டத்தை மாற்றவேண்டும், மாற்றினாலும் மாற்றாவிட்டாலும் அடுத்த வருடம் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.]

அவசர சட்டமாக நீட் தேர்வின் சட்டம் நிறைவேற்றப்பட்டு 24-May-2016 அன்று குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கினார். 16-July-2016 அன்று சட்டமாக அரசிதழில் அறிவிக்கப்பட்டது. 

சொன்னது போலவே 26-May-2017 அன்று நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஆங்கிலத்திற்கும் மாநில மொழிக்கும் இடையே வினாத்தாள்களில் பிழைகளும் மொழிபெயர்ப்பு தவறுகளும் இருந்தன. இருந்தும் மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை. அதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் முடிவை அறிவிக்கக்கூடாது என்று வழக்கு போடப்பட்டது. உயர்நீதிமன்றமும் முடிவை அறிவிக்கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு 12-Jun-2017 அன்று தடைவிதித்தது. (தடைக்கு தடை). தேர்வின் முடிவுகள் வெளியாயின.

அதன்பிறகு தமிழக அரசு சட்டமன்றத்தில் 25-Jul-2017 அன்று மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்த காரணத்தால் அரசு பள்ளி மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடு வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. அதை மத்திய அரசு ரத்து செய்தது.(பாடத்திட்டத்தை மாற்ற கொடுத்த அவகாசம் முடிந்துவிட்டதால்). அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி அவர்களை சந்தித்து நீட் தீவு விலக்கு தமிழகத்துக்கு தேவை என்று கோரிக்கைவிடுத்தார். கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பிறகு நிர்மலா சீதாராமன் அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரியில் உள்ள அரசு சீட்டிற்கு விலக்கு அளிப்போம் என்று சொல்லி பிறகு முடியாது என்று சொல்லவிட்டார். 

14-Aug-2017 அன்று விலக்கு வேண்டி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதையும் 22-Aug-2017 அன்று உச்சநீதிமன்றம் நிராகரித்து முடிவுகளை வெளியிட்டு மருத்துவர்களின் சேர்க்கை நடக்க உத்தரவிட்டது. 23-Aug-2017 அன்று நீட் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன, 01-Sep-2017 அன்று அனிதா என்ற மாணவி 1176 மதிப்பெண் (NEET 12.33 percentile while she scored 86/720 marks.) பெற்று மருத்துவம் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்டார். 04-Sep-2017 அன்று சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டது.  


இந்தியா முழுக்க நீட் தேர்வு எழுதிவர்கள் : 14,10,755

தேர்ச்சி பெற்றவர்கள் : 7,97,042

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்கள் : 1,23,078

தேர்ச்சி பெற்றவர்கள் : 59,785

26 அரசு கல்லூரிகளில் உள்ள இடம் : 3250

தனியார் கல்லூரியில் உள்ள அரசு இடம் : 3600

மொத்தம் : 6850

7.5% இடஒதிக்கீட்டால் பயன்பெற்ற மாணவர்கள் : MBBS 313, BDS 92 Total 405.

மாநிலம் விட்டு மாநிலத்திற்கு தேர்வுக்கான இடத்தை ஒதுக்கியது, 18% GST வரி விதித்து விண்ணப்பத்தின் தொகையை அதிகரித்தது. சோதனை என்ற பெயரில் மாணவர்களை மனரீதியாக தாக்கியது என்று எல்லா வகையிலும் பாவப்பட்ட மாணவர்களை எப்படியாவது மருத்துவம் படிக்கவிடாமல் செய்ய மத்திய அரசு முயன்றது. முடிவில் பணம் இருந்தால் மட்டுமே படிக்கமுடியும் என்ற நிலைக்கு நீட் தேர்வையும் மருத்துவத்தையும் ஆக்கிவிட்டது.

கடந்த தடவை விண்ணப்பம் மூலம் கிடைத்த வருமானம் மட்டும் நூறு கோடி.

ஆக நீட் தேர்வின் மூலம் பணமுள்ளவர்களுக்கும் பார்ப்பன பணியாகும்பலுக்கும் மருத்துவ சீட்டை தாரைவார்க்கும் செயல்தான் இது. முடிவாக நீட் சமூகநீதிக்கும் இந்திய இறையாண்மைக்கும் எதிரானது.

Friday, June 4, 2021

விசாரணைக்கைதிகளின் விடுதலையும் திமுக அரசின் மௌனமும்

 பொய் வழக்கு

காலம்காலமாக அரசுக்கு எதிராக மக்களுக்கு சாதகமாக நடந்துகொள்ளும் சாதாரண மனிதன் முதல், கட்சி மற்றும் இயக்கங்கள் வரை ஆளுங்கல்ட்சியாள பல வகையில் தண்டிக்கப்படுவார்கள். அதில் முதன்மையானது பொய் வழக்கு.பொய் வழக்கு போடுவதில் எல்லா அரசுகளும் ஒன்றாகவே செயல்படுகிறது. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அரசை விமர்ச்சித்தாலே, அரசின் தவறை தட்டிக்கேட்டாலோ முதலில் பாய்வது பொய்வழக்கு தான். எல்லா அரசுகளும் இந்த விடயத்தில் ஒன்றுபோல செயல்பட்டாலும் பாசிச பிஜேபி அரசு ஒருபடிக்கு மேல் போய் சாதாரண சுவரொட்டி ஒட்டியதெற்க்கெல்லாம் போய் வழக்கு போட்டது. இந்திய அளவில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் கல்வி, வெளிவாப்பில் குறைவாக இருந்தாலும், சிறையில் % க்கு அதிகமாக விசாரணைக்கைதிகளாக முஸ்லிம்கள் உள்ளனர். இந்திய விடுதலைக்கு & அதிகமாக முஸ்லிம்கள் பாடுபட்டனர், ஆனால் இன்றோ % அதிகமான முஸ்லிம்கள் விசாரணை கைதிகளாக இந்தியா முழுக்க உள்ள சிறையில் இருக்கிறார்கள். 

விசாரணை கைதிகளாக முஸ்லிம்கள்:

இந்தியாவில் 2018  ன் தரவுப்படி 18.81 % முஸ்லிம்கள் விசாரணை கைதிகளாக இருக்கிறார்கள் என்று டெக்கான்ஹெரால்டு என்ற செய்தித்தாள் தெரிவிக்கிறது (Majority prisoners in Indian jails are Dalits, Muslims | Deccan Herald). இந்திய மாநிலங்களில் உத்திரபிரதேசத்தில் தான் அதிக % முஸ்லிம்கள் விசாரணை கைதிகளாக இருக்கிறார்கள்.

இந்தியா முழுக்க உள்ள விசாரணை கைதிகளின் எண்ணிக்கை 2015 வரை.

Hindus    -    2,11,335

Muslims  -    63,626

Sikhs       -    10,413

Christian  -    9,193

Others     -     2,072.

இஸ்லாமிய விசாரணை கைதிகளை பொறுத்தவரை உத்திரபிரதேசத்தில் 27,459 பேரும் (நாட்டின் மொத்த முஸ்லீம் விசாரணை கைதிகளில் 31.31% ), மேற்கு வங்கத்தில் 8,401 பேரும் உள்ளனர். இந்த தொகை கர்நாடகாவில் 2,798 ஆக உள்ளது. 

தாழ்த்தப்பட்ட விசாரணை கைதிகளை பொறுத்தவரை உத்திரபிரதேசத்தில் 24,489 பேரும் (நாட்டின் மொத்த தாழ்த்தப்பட்ட விசாரணை கைதிகளில் 25.39% ), மத்தியப்பிரதேசத்தில் 8,935 பேரும் உள்ளனர். இந்த தொகை கர்நாடகாவில் 2,803 ஆக உள்ளது. 

வருடந்தோறும் அதிகரிக்கும் விசாரணை கைதிகள்:

வருடங்கள் தோறும் விசாரணைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, அதற்க்கு மிக முக்கிய ஆளும் பாசிச பிஜேபி அரசும் சங்கபரிவார அமைப்புகளும் தான். 2017 

2017 ல் 3,08,718 ஆக இருந்த விசாரணை கைதிகளின் எண்ணிக்கை 2018 ல் 3,23,537 ஆகவும் 2019 ல் 3,30,487 ஆகவும் உயந்துள்ளது. 2017 க்கும் 2019 க்கும் இடையே அதிகரித்த  % 7.

இன்றுவரை விசாரணை கைதிகளாக, போலி முதல் அறிக்கையை சமர்ப்பித்து, முதல் அறிக்கையை பிரதி எடுத்து, முதல் அறிக்கை சமர்பிக்காமல் பல முஸ்லிம்கள் உள்ளனர். தலைவர்களின் பிறந்த நாள், இறந்த நாள் என்று பல விசாரணை கைதிகளை விடுதலை செய்தாலும், முஸ்லிம்களுக்கு அது எட்டாக்கனியாகவே உள்ளது. கடந்த தடவி 1500 பேரை விடுதலை செய்த தமிழக அரசு 4 முஸ்லிம்களை மட்டுமே விடுதலை செய்தது. (https://hindmuslim.blogspot.com/2019/02/1500-4.html). 

முஸ்லிம்களின் பாதுகாவலராக தன்னை பீற்றிக்கொள்ளும் திமுக அரசில் தான் கோவை குண்டுவெடிப்பில் பல குற்றமற்றவர்கள் விசாரைக்கான கைது செய்யப்பட்டு 23  வருடங்களாக சிறையில் உள்ளனர். சமீபத்தில் நடந்த திருபுவனம் ராமலிங்கம் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்ட 12 பேரும் விசாரணை கைதிகளே. 

1,212 பெண்கள் விசாரணை கைதிகளாக இந்தியா முழுக்க உள்ளை சிறைகளில் உள்ளனர், இந்த பெண்களுடன் 1409 குழந்தைகளும் விசாரணை கைதிகளாக உள்ளனர். 

விசாரணை கைதிகளின் நிலவரம். 

விசாரணை கைதிகளாக 5 வருடத்திற்கு மேலாக உள்ள நபர்கள் 5011. இதுவரை விடுதலை செய்யப்பட விசாரணை கைதிகளின் எண்ணிக்கை (2019  வரை) 635. 


தமிழகத்தின் நிலை:

கடந்த மக்கள் விரோத அதிமுக அரசு தருமபுரி பேருந்து எரிப்பில் ஈடுபட்டவரை கூட விடுதலை செய்தது, ஆனால் விசாரணை கைதிகளாக இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்யவில்லை. திமுக அரசும் இந்த விடயத்தில் ஒன்றும் மாறப்போவது இல்லை. ஜூன்-3  அன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விசாரணை கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தும் இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அதை பற்றி வரை கூட திறக்கவில்லை.  

தமிழகம் முழுவதும் விசாரணைக்கைதிகளாக இருப்பவர்களின் எண்ணிக்கை
அதில் 
ஆண்கள் 8703
பெண்கள் 541
மொத்தம் 9244.
படிக்காதவர்கள் 2764
பத்தாவது வரை படித்தவர்கள் 3399
ஹிந்துக்கள் 7247
முஸ்லிம்கள் 1015
கிருத்துவர்கள் 982
SC 2466
ST 218
OBC 6399
Others 161.

ஆக தமிழகத்தில் அதிகமாக விசாரணைக்கைதிகளாக இருப்பவர்களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக திமுக அரசு விடுதலை செய்து மக்களுக்கான அரசு என்று நிரூபிக்கவேண்டும். ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்றால் ஹிந்துக்களையும், சிறுபான்மையினரின்  பாதுகாவலன் என்றால் முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களையும் விடுதலை செய்யவேண்டும். திமுக அரசு தமிழர்களுக்கான அரசு என்றால் தமிழர்களை விடுதலை செய்யவேண்டும், தெலுங்கர்களுக்கான அரசு என்றால் விடுதலை செய்யவேண்டாம். 

தவறே செய்யாமல் விசாரனையில் பெயரில் மக்களை வஞ்சிக்கும் அரசுகள் மாறவேண்டும், அரசியல் காழ்ப்புணர்வு மற்றும் சரியான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத போது அப்பாவிகளை கைது செய்து விசாரணை கைதிகளாக வைத்திருப்பதை நீதிமன்றம் தண்டிக்கவேண்டும், இந்த குற்றத்திற்கு துணைபோகும் ஒவ்வொரு அதிகாரியையும் தண்டிக்கவேண்டும்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், அனால் ஒரே ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பது போல விசாரணை கைதிகள் கட்டாயம் விடுவைக்கப்படவேண்டும், இது அரசின் கடமை மட்டுமல்ல, பெருமையும் கண்ணியமும் கூட ஆகும்.

கண்ணியம் காக்கப்படுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம். 

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...