Tuesday, January 7, 2020

NRC, CAA and NPR


அன்பானவர்களே, NRC என்ற தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது அஸ்ஸாம் மக்களுக்காக கொண்டுவரப்பட்டது. அஸ்ஸாம் மக்களின் நெடுங்கால கோரிக்கை தங்களின் வளங்களையும் வாழ்வாதாரத்தையும் பங்காள தேச, மேற்கு வங்காள மக்கள் (முஸ்லிம்கள் & இந்துக்கள்)  அபகரிக்கின்றனர், அதனால் அவர்களை வெளியேற்றவேண்டும் என்பது. அதற்காக வழக்கு தொடுத்து உச்ச நீதி மன்றத்தில் தீர்ப்பு வந்தது. தீர்ப்பில் சொல்லப்பட்டது என்னவென்றால் பங்களாதேஷ் பிரிந்த போது அதாவது 24 -03 -1971  க்கு பிறகு மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷில் இருந்து வந்த மக்கள் அனைவரும் (முஸ்லிம்கள் மட்டுமல்ல ஹிந்துக்களும்) அஸ்ஸாமை விட்டு வெளியேற வேண்டும். அதை நடைமுறைப்படுத்தாமல் பிஜேபி அரசு 23 -03 -1991 க்கு பிறகு வந்த மக்கள் அனைவரும் அஸ்ஸாமை விட்டு வெளியேற வேண்டும் என்று புதிய பிரச்சனையை கிளப்பியது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது எரிகிற தீயில் என்னை வார்த்தது போலாகிவிட்டது. இதை எதிர்த்து தான் அஸ்ஸாமிகள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள் 

அவர்களின் போராட்டத்தை கணக்கில் எடுக்காமல் NRC  ஐ அமல்படுத்தி 1600  கோடி செலவு செய்து 40  லட்சம் அஸ்ஸாமிகளை இந்தியர்கள் இல்லை என்று பிஜேபி அரசு அறிவித்தது. 40 லட்சம் மக்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு 8000  கோடி அளவுக்கு செலவு செய்து ( வேலையை விட்டு அலைந்தால் ஆன செலவு 8000  கோடி என்று தோராயமாக கணக்கிடப்பட்டுள்ள்ளது) 21 லட்சம் தங்கள் குடியுரிமையை பெற்றுள்ளனர். மீதம் 19 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லை. இந்த 19 லட்சம் பேரில் 12  லட்சம் பேர் ஹிந்துக்கள், 7  லட்சம் பேர் முஸ்லிம்கள். இப்பொழுது இந்த 19 லட்சம் பேர் தங்களுக்கு குடியுரிமை வேண்டும் என்றும், அஸ்ஸாமிகள் 21 லட்சம் பேருக்கு ஏன் குடியுரிமை கொடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குகிறீர்கள் என்றும் போராடுகின்றனர். இது முழுக்க முழுக்க பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை சார்ந்ததே, இதில் மதமோ சாதியோ இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த பிரச்சனை இப்படியே இருக்க NRC  ஐ நாடு முழுக்க நடைமுறைப்படுத்துவோம் என்று உள்துறை அமைச்சர் நடைமுறைப்படுத்தி உள்ளார். இந்த நேரத்தில் இது தேவை அற்றது மட்டுமல்ல, மக்களுக்கு எதிரானதும் கூட. 

இது இப்படி இருக்க CAA என்ற குடிமக்கள் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. இது என்ன சொல்கிறது  என்றால்,  வேறு நாட்டில் இருந்து வந்து (எந்த நாடானாலும் - திருமண உறவு & இந்திய வம்சாவளி , எந்த மதமானாலும்) 11  வருடங்களாக குடியிருந்தால் இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று சட்டத்தை 5 வருடம் இருந்தாலே போதும் என்று குறைத்துள்ளது, மேலும் பழைய சட்டம் ஜாதி மத இன அடிப்படையில் ஆனது அல்ல, ஆனால் 2019  சட்டம் மூன்று நாடுகள் மற்றும் ஆறு மதங்கள் (இஸ்லாம் தவிர்த்து) என்று சொல்கிறது.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது 19 லட்சம் அஸ்ஸாமிகளில் பல லட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும், இதனால் மேலும் அஸ்ஸாமிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

இலங்கை தமிழர்களுக்கு எதிரான சட்டம்

இனப்படுகொலை மூலமாக பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு ஏன் இந்த குடியுரிமை இல்லை என்று கேட்டபோது இலங்கை இந்தியாவை சேர்ந்தது அல்ல என்றார்கள், ஆனால் Afganistan மட்டும் எப்போது இந்தியாவோடு இருந்தது என்ற சொல்வதில்லை, இது வர்ணாசிரம அடிப்படையில் அமைக்கப்பட உள்ள பாசிச ராஷ்டிராவின் விதை என்று தெரிந்தோர் முளையிலேயே கிள்ளியெறிய ஆசைப்படுவார்கள்.

இது முஸ்லிம்களை பாதிக்குமா?

முஸ்லிம்களை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியர்களையும் பாதிக்கும், எப்படி என்றால் இந்தியர்கள் அனைவரும் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவையான சான்றை தயாரிக்கவேண்டும், அதற்காக அலையும் போது பொருளாதாரம் பாதிக்கும், அதனால் நாட்டில் உள்நாட்டு உற்பத்தி மேலும் குறையும், இறக்குமதி அதிகமாகும், பணவீக்கம் அதிகமாகும், நாட்டில் பொருளாதாரம் சீர்குலையும். இன்று இருக்கும் பொருளாதார நிலைக்கு இது தேவையற்றது.

இதன்மூலம் அரசுக்கு எதிராக போராடக்கூடியவர்கள் அனைவரையும் இந்திய குடிமக்கள் இல்லை என்று அறிவிக்க முடியும். தன குடியுரிமையை நிரூபிக்க வழக்கு, நீதிமன்றம் என்று அலைய குறைந்தது 50,000 செலவாகும். பார்லே ஜி பிஸ்கட் கூட வாங்க வழியற்ற மக்கள் எப்படி தங்கள் குடியுரிமையை நிரூபிக்க ஆயிரக்கணக்கில் செலவு செய்யமுடியும்?.

சரி குடியுரிமை இல்லை என்று ஆகிவிட்ட பிறகு, வதை கூடங்களில் மக்களை அடைப்பார்கள், அவர்களை விலங்குகளை விட மோசமாக நடத்துவார்கள், அவர்களுக்கான அடிப்படை தேவைகளை செய்யமாட்டார்கள். கொத்தடிமைகளாக வாழும் அவர்களை பயன்படுத்தி வேலை வாங்கி கொண்டு குறைந்த வழங்குவார்கள், அல்லது ஊதியம் வழங்க மாட்டார்கள். இதன் மூலம் நாட்டில் உள்ள மற்றவருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும், பஞ்சம் தலைவிரித்தாடும். கார்ப்பரேட்டுகள் கொழிப்பார்கள், சாதாரண மக்கள் கஞ்சிக்கே வழி இல்லாமல் சாவார்கள்.

இனியும் இது முஸ்லிம்களுக்கு மட்டுமே எதிரானது என்று சொல்வதால் ஒருபயனும் இல்லை, இந்த தேவையற்ற சட்டத்தை அரசு திரும்ப பெரும் வரை நாடே இதற்க்கு எதிராக போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இல்லையென்றால் பூர்வகுடிகள் நாடற்று நாதியற்று வாழ நேரிடும்.


இது இப்படியே இருக்கு புதிய ஒரு சட்டத்தை நடைமுறை படுத்த துடிக்கிறது மத்திய பாசிச அரசு அது தான் NPR என்ற National Population Registry.



இதன் நோக்கமும் ஆதாரின் நோக்கமும் ஒன்று (சற்று ஏறக்குறைய) எனும்போது எதற்கு இந்த சட்டம்?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
1). 98 % இந்தியர்களுக்கு ஆதார் கார்டு இருக்கும் போது பிறகு எதற்கு இந்த சட்டம்? ஏற்கனவே உள்ள தரவுகளை பயன்படுத்தவேண்டியது தானே, அதாரின் தரவுகள் தேவை இல்லை என்றால் பிறகு ஏன் 24,066  கோடிகள் செலவு செய்து ஆதார் அட்டையை கொடுத்தீர்?
2). தான் இந்தியன் என்பதை நிரூபிக்க ஆதாரங்களை காட்டுமாறு கேட்கப்போவது இல்லை - பிறகு எதற்கு இந்த சட்டம்?



----------------------------------------------------------------------------------------------------------------------------------------

1). நீங்கள் பிறந்த தேதி, மாதம், ஆண்டு, இடம் ஆகிய விவரங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையிலேயே உள்ளது பிறகு எதற்கு இந்த சட்டம்?
2). வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள விவரம் போதுமானது இல்லை என்றால் நான் அளித்த வாக்கின் மூலம் தேர்நதெடுக்கப்பட்ட MLA , MP , இத்யாதி இத்யாதி எப்படி செல்லுபடியாகும்? செல்லுபடி ஆகவில்லை என்றால் திரும்பவும் தேர்தலை நடத்துவீர்களா?
3). எந்த எந்த ஆவணங்களை ஆதாரமாக ஏற்பது என்று முடிவு செய்யாமல் எதற்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்கிறீர்?
4). இதன் மூலம் எந்த பாதிப்பும் யாருக்கும் இல்லை என்றால் பிறகு எதற்கு இந்த சட்டம், சட்டத்தின் அவசியம் என்ன? நாடாளுமன்றத்தை கூட்டி விவாதித்து சட்டம் இயற்றவேண்டிய அவசியம் என்ன? பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே? 


---------------------------------------------------------------------------------------------------------------------------------------

1). ஏற்கனவே ஆதாரில் பிறந்த தேதி உண்டு, வாக்காளர் அடையாள அட்டையில் பிறந்த தேதி உண்டு பிறகு ஏன் கேட்ப்பார்கள்?

2). எதற்க்காக பதிவேட்டை தயாரிக்கிறீர்கள்?



 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
1). வாக்காளர் அடையாள அட்டை என்பதும் குடியுரிமைக்கான ஆதாரம் தானே பிறகு எதற்கு இந்த சட்ட திருத்தம்?


---------------------------------------------------------------------------------------------------------------------------
ஆக மொத்தத்தில் எதற்க்காக இந்த சட்டத்தை கொண்டுவந்தோம் என்றும், இனி என்ன செய்யப்போகிறோம் என்று தெளிவான விளக்கத்தை கொடுக்காமல் மக்களை அலைக்கழிப்பதே பாசிச அரசின் நோக்கம்.

2125 க்குள் இந்து ராஸ்டிராவாக இந்தியாவை ஆக்குவது தான் ஆர் எஸ் எஸ் ன் நோக்கம், அந்த இந்து ராஷ்டிரா எப்படி இருக்கும் என்றால் 3% மக்கள் மட்டும் கொழித்து வாழக்கூடிய, மற்ற சமுதாயத்தினர் அவர்களுக்கு அடிமையாக வாழவேண்டிய இந்தியாவாக இருக்கும். அதை ஆரம்பத்திலேயே தடுப்பது ஒவ்வொரு இந்தியர்களின் கடமை.

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...