இன்றைய இந்தியா என்ற தலைப்பில் இந்தியாவின் நிலையை குறித்து என்னால் முடிந்தவரை தரவுகளை ஆதாரங்களுடன் தொகுத்து தந்துள்ளேன், குறை தவறு இருப்பின் சுட்டுங்கள் திருத்தி கொள்கிறேன். நிறை அனைத்தும் இறைவனுக்கே.
1. பசி பட்டினி
இந்தியாவில் உள்ள ஏழில் ஒருவன் இரவு உணவு இல்லாமல் படுக்கைக்கு செல்கிறான், இதுதான் இந்தியாவின் நிலை, hunger index என்ற அட்டவணையில் இந்தியாவின் இடம் 102. 117 நாடுகளில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தியாவுக்கான இடம் 102, எதற்க்கெடுத்தாலும் பாகிஸ்தானோடு ஒப்பிட்டு பேசுவது பாசிச பிஜேபி யின் வேலை, அந்த பாகிஸ்தானே 94 வது இடத்தில் உள்ளது.
1. பசி பட்டினி
இந்தியாவில் உள்ள ஏழில் ஒருவன் இரவு உணவு இல்லாமல் படுக்கைக்கு செல்கிறான், இதுதான் இந்தியாவின் நிலை, hunger index என்ற அட்டவணையில் இந்தியாவின் இடம் 102. 117 நாடுகளில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தியாவுக்கான இடம் 102, எதற்க்கெடுத்தாலும் பாகிஸ்தானோடு ஒப்பிட்டு பேசுவது பாசிச பிஜேபி யின் வேலை, அந்த பாகிஸ்தானே 94 வது இடத்தில் உள்ளது.
உலகின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள் அதிகமாக வசிக்கும் நாடு இந்தியா
- 194.4 மில்லியன் மக்கள், அதாவது நமது மக்கள் தொகையில் 14.5% ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள்
- 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 20.8% எடை குறைந்தவர்கள்
- 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 37.9% உடல் நலம் குன்றியவர்கள்
- இனப்பெருக்க வயதில் (15-49 வயது) 51.4% பெண்கள் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பசிகளுக்கான காரணம் என்ன?
இதே நிலை நீடித்தால் பசியற்ற இந்தியாவை 2025 ல் இந்தியா அடைய முடியாது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த பிரச்சனைகளை தீர்க்க இந்தியா எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?
5 ,32 ,800 கோடிகளை ஒவ்வொரு வருடமும் ஒதுக்கினால் மட்டுமே, 2030 ல் பசியற்ற இந்தியாவை உருவாக்க முடியும் ஆனால் இந்தியா ஒதுக்கிய தொகை எவ்வளவு? 1,23,580 கோடிகளை மட்டும் ஒதுக்கியுள்ளது, நான்கு மடங்குக்கு கீழ் தொகையை ஒதுக்கி எப்படி பசியற்ற இந்தியாவை உண்டாக்க முடியும்? இந்த லட்சணத்தில் பணமதிப்பிழப்பு, வரி, தேசிய குடிமக்கள் பதிவேடு என்று நாட்டின் பொருளாதாரத்தை சவக்குழியில் வைக்கும் வேலையை இந்தியா தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக வாக்கு கொடுத்த இந்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பல லட்சம் மக்கள் வேலையை இழந்து பார்லே ஜீ பிஸ்கட்டு கூட வாங்க இயலாத நிலையில் உள்ளனர். இந்த கொடூரங்கள் நீங்க பாசிச அரசு எல்லோருக்குமான அரசாக மாறவேண்டும், மதம் ஜாதி இறைநம்பிக்கை போன்றவற்றை மக்களின் சொந்த விருப்பத்திற்கு விட்டுவிட்டு நாட்டை முன்னேற்ற பாடுபடவேண்டும். இல்லையெனில் பாசிச அரசை மக்கள் குழிதோண்டி புதைக்கும் காலம் வெகு தூரம் இல்லை.
https://www.downtoearth.org.in/coverage/health/why-india-remains-malnourished-42697.
பசியற்ற உலகை உருவாக்க இஸ்லாம் கூறும் வழி என்ன?
பசியற்ற உலகை உருவாக்க இஸ்லாம் கூறும் வழி என்ன?
- உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள் என்ற குரானின் படி தேவைக்கு தகுந்த சாப்பிடவேண்டும்.
- வயிற்றை மூன்று பாகங்களாக பிரித்து ஒரு பகுதி உணவு, ஒருபகுதி நீர் ஒரு பகுதி காற்று என்ற முஹம்மது (ஸல்) வழிமுறைப்படி உண்ணவேண்டும்.
- பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் உண்மையான இஸ்லாமியன் இல்லை என்ற கூற்றுப்படி ஒவ்வொருவனும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு உணவு கொடுத்து உதவ வேண்டும்.
- குழம்பில் தண்ணீர் ஊற்றி அதிகமாக்கி பக்கத்து வீட்டுக்காரனுக்கு கொடுத்து உதவுங்கள்.
No comments:
Post a Comment