Sunday, January 12, 2020

முரண்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகள்


இந்திய நீதியமைப்பில் கீழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என மூன்றடுக்கு மேல்முறையீடு செய்யும் முறை இருந்து வருகிறது.
குற்ற, சிவில் வழக்குகள் கீழமை நீதிமன்றங்களின் விசாரணை வரம்பில் உள்ளவை.
சட்டங்கள், அரசியலமைப்பு தொடர்பான விஷயங்களை உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் விசாரிக்க முடியும்

அரசியலமைப்பு தொடர்பான மிகவும் சிக்கலான கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் சொல்வதே இறுதித் தீர்வு. உயர்நீதிமன்றங்களின் உத்தரவுகள் சமயங்களில் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும். பல்வேறு சமயங்களில் உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் முரண்பட்டுள்ள சம்பவங்களும் இந்திய வரலாற்றில் நிகழ்ந்துள்ளன.
ஏ.டி.எம் ஜபல்பூர் - எமர்ஜென்சி:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் ஜூன் 25,1975 அன்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அரசியலமைப்புச் சட்டம் செயலிழந்தது. அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. நாடாளுமன்றம் இந்திரா காந்தியின் ரப்பர் ஸ்டாம்பானது. அரசியல் எதிரிகள் காவல்துறையால் சிறைவைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை மீட்டுத்தரக்கோரி ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்கொணர்வு தொடுக்கும் உரிமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது, அதுவும் அடிப்படை உரிமைகளில் தான் வருகிறது என்று அரசு வாதிட்டது. மக்கள் ஆட்கொணர்வு மனு தொடுக்கும் உரிமையுள்ளதா என பல்வேறு உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவசர நிலை அமலில் இருந்தாலும் மக்களுக்கு ஆட்கொணர்வு மனு தொடுக்கிற உரிமை உள்ளது என சென்னை உள்பட ஒன்பது உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருந்தன.

இந்தத் தீர்ப்புகளை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு மேல்முறையீட்டை விசாரித்தது. ஏ.டி.எம் ஜபல்பூர் என இந்த வழக்கு அழைக்கப்பட்டது. இறுதியில் `மக்களுக்கு ஆட்கொணர்வு மனு தொடுக்கிற உரிமை கிடையாது’ என 4 - 1 என்கிற பெரும்பான்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. எச்.ஆர். கண்ணா மட்டும் மாறுபட்டு தீர்ப்பளித்தார். ஒன்பது உயர்நீதிமன்றங்களின் உத்தரவுகள் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன. 41 ஆண்டுகள் கழித்து 2017-ம் ஆண்டு ஜபல்பூர் வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

சமீபத்திய உதாரணங்கள்:
இதுபோன்று உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்துடன் முரண்படுகிற சம்பவங்களை சமீப காலங்களில் நிறைய பார்க்க முடிகிறது.

1.      காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இணைய, தொலைதொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டன. இவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் கையாண்ட விதம் கடும் விமர்சனத்திற்குள்ளானது. ஹேபியஸ் கார்பஸ் வழக்குகளை விசாரிக்காமல் காலம் தாழ்த்திவந்தன. இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் இணைய சேவை முடக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஐந்து மாதங்கள் கழித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிலும் தடையை முழுவதுமாக நீக்கவில்லை. ஆனால் அஸ்ஸாமில் விதிக்கப்பட்ட இணையத் தடையை உடனடியாக நீக்க வேண்டுமென கவுகாத்தி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2.      காஷ்மீரில் அரசியல்வாதிகள் வீட்டுச்சிறை வைக்கப்பட்டதை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. பெங்களூருவில் விதிக்கப்பட்ட ஊரடங்கு (144) தடை உத்தரவு சட்டப்பூர்வமாக செல்லுமா என கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஜாமியா மிலியா, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காவல்துறையினர் ஒடுக்குமுறை எதிர்த்து தொடுக்கப்பட்ட அவசர வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. வன்முறை நின்றால் வழக்கை விசாரிப்போம் என தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தெரிவித்த கருத்து கடும் விமர்சனத்துக்குள்ளானது.


3.      தற்போது குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளையும் `வன்முறை நின்றால்தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்’ என்று மீண்டும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் `இளைய தலைமுறையினர் போராடக் கற்றுக்கொடுக்கிறார்கள்’ என்று மும்பை உயர்நீதிமன்றம் இளைஞர்கள் போராட்டத்துக்கு புகழாரம் சூட்டியிருக்கிறது. `போராட்டங்கள் என்பது உயிர்ப்புள்ள ஜனநாயகத்தின் இன்றியமையாத அம்சம்’ என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

4.      உச்சநீதிமன்றம் தற்போது குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாத நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றம் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் நடைபெற்று வருகிற போராட்டத்துக்குத் தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இவ்வாறு பல சமயங்களில் உயர்நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றத்தின் தவறான நிலைப்பாட்டுக்கு எதிர் நிலைப்பாடு எடுத்துள்ளன.


இதுபற்றி முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறுகையில், ``தலைமை நீதிபதியின் கருத்தை மத்திய அரசுக்கு கூறியதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் உள்ளவர்கள் பெரும்பாலும் பொது மக்களோடு இணைந்தே இருப்பவர்கள். அதனால் அவர்களின் அணுகுமுறை சில நேரங்களில் மாறுபடுவதுண்டு. ஆனால், உச்சநீதிமன்றத்தில் இருப்பவர்கள் பொது மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டவர்களைப் போன்றுதான் இருக்கின்றனர். அதனால்தான் பெரும்பாலும் அவர்களின் கருத்துகள் இதுபோன்று உள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை உச்சநீதிமன்றத்துக்கு இருக்கிறது. ஆனால் பெரும்பாலான சமயங்கள் உயர்நீதிமன்றங்கள் போன்ற கீழமை நீதிமன்றங்கள்தான் அரசியலமைப்பை, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருந்திருக்கின்றன. இதற்கு நெருக்கடியும் ஒரு காரணம். மத்தியில் எந்த அரசு பலமாக இருந்தாலும் நீதித்துறையின் செயல்பாடு இப்படித்தான் இருக்கும். நெருக்கடி நிலை காலத்தில் அப்படித்தான் இருந்தது. தற்போதும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைதான் நிலவுகிறது” என்றார்.

Thursday, January 9, 2020

PFI எல்லோருக்குமான இந்தியாவை உருவாக்க பாடுபடும் இயக்கம் என்று ஜெர்மன் அறிஞர் புகழாரம்


பி.எஃப்.ஐ (Popular Front of India) பற்றிய ஜெர்மன் அறிஞரின் வேறுபட்ட கண்ணோட்டம்

 கோழிக்கோடு: CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது நடந்த வன்முறையை மேற்கோள் காட்டி மத்திய அரசு இந்திய முன்னணி (PFI) ஐ தடை செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில், ஆக்ஸ்போர்டு சர்வதேச மேம்பாட்டுத் துறையுடன் ஜெர்மன் ஆராய்ச்சி அறிஞர் PFI  பற்றி மேற்கொண்ட ஆய்வு, இந்திய அரசு சொல்லும் குற்றச்சாட்டுக்கு முற்றிலும் எதிராக உள்ளது.

 அரசாங்கமும் உளவுத்துறையும் PFI ஐ யை ஒரு ‘தீவிரவாத அமைப்பு’ என்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் இயக்கம் என்றும் முத்திரை குத்தும்போது,  ​​இந்த அமைப்பானது சட்டக் கல்வி மூலம் முஸ்லிம்களுக்கான அதிகாரம் குறித்தும், அவர்களின் அரசியலமைப்பு உரிமைகள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது என்று ஜெர்மன் அறிஞர் Arndt Emmerich இந்த அமைப்பை பற்றி கூறுகிறார்.

 அரசியல், கல்வி மற்றும் இந்திய முஸ்லீம் அமைப்புகளின் சட்ட நடைமுறைவாதம்: முஸ்லீம் சிறுபான்மையினரின் அரசியலின் தன்மை  பற்றிய ஒரு ஆய்வு (Political Education and Legal Pragmatism of Muslim Organizations in India; A Study of the Changing Nature of Muslim Minority Politicsஎன்ற தனது கட்டுரையில், PFI இந்திய முஸ்லிம்களுக்கு அரசியலின் தேவையை குறித்து தேவையான விழிப்புணர்வை வழங்கி அடைப்படை மாற்றத்தை கொண்டு வரும் என்று கூறியுள்ளார்.



 கல்வி, அரசியல் மற்றும் அதிகாரத்தை  இந்திய முஸ்லீம் சமூகம் அடைவதற்கான வழியை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது என்றும், இவர்களின் செயல்பாடுகள் சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாகவும், ஆராச்சியாளர் ஒப்புக்கொள்கிறார்.

 இந்துத்வ தீவிரவாதிகளிடம் இருந்தும், காவல் துறையின் அதிகார துஸ்பிரயோகத்தில் இருந்தும் எவ்வாறு தங்களை தற்காத்து கொள்வது என்றும், முஸ்லீம் சமுதாயத்தை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்தும் PFI எங்களுக்கு பயிற்சி அளிப்பதாக PFI ஐ சேர்ந்த போராளிகள் அறிஞரிடம் PFI ன் செயல்பாடுகள் குறித்து விளக்கியுள்ளனர்.

 Arndt Emmerich  இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் புது தில்லி நகரங்களுக்கு மூன்று முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல பி.எஃப்.ஐ தலைவர்கள் மற்றும் பணியாளர்களுடன் உரையாடி இந்த தகவல்களை பெற்றுள்ளார்.

 "அல்-கைதா தோன்றியதிலிருந்தும், செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களிலிருந்தும், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய இயக்கங்களும் முஸ்லீம் அமைப்புகளும் ஆட்சிகளை ஜனநாயக முறைப்படி ஒன்றிணைக்க  விரும்பவில்லை என்றும், மதமும் அரசியலும் ஒன்றே என்றும் அதை பிரிக்கக்கூடாது என்றும் கூறிவருவதாக அறிஞர் சொல்கிறார்.

 “இந்தியாவில் ஒரு இஸ்லாமிய கிலாபாத்தை ஊக்குவித்து சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை உண்டாக்க விரும்பிய சிமி போல் அல்லாமல், இஸ்லாமியர் அல்லாதவர்களையும், யோகா, உடற்பயிற்சி, ஆயுர்வேதம், இந்தி & சமஸ்கிருத கோஷங்கள் மற்றும் தேசியக் கொடி  போன்ற பொது விஷயங்களையும் ஒருங்கிணைத்து எல்லோருக்குமான சம உரிமை உள்ள இந்தியாவை உருவாக்க PFI  நினைக்கிறது என்று அறிஞர் கூறுகிறார்.

 2009 இல் மைசூரில் நடந்த வன்முறையின் போது ‘காவல்துறை பாகுபாட்டை’ எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட வழிகளையும், அரசியலமைப்பு தொடர்பான கல்வியைப் பரப்புவதிலேயும் வெற்றிகண்ட இயக்கம் மக்களுக்கான இயக்கமாக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்று அறிஞர் பாராட்டுகிறார்.

 அரசியல் மற்றும் சட்ட நிறுவனங்களின் அரசியல் விழிப்புணர்வை மேம்படுத்தவும், அவர்களுக்கு அரசியல் ரீதியாக உதவி செய்து ஜனநாயகத்தை மேம்படுத்தவும் பிபி செயற்பாட்டாளர்கள் உழைத்துவருகின்றனர். இந்த முக்கிய செயல்பாடுகளின் மூலமாக சாதாரண மக்களும் அரசியல் அதிகாரத்தை அடையமுடியும் என்று PFI  நம்புகிறது.

 புத்தகத்திற்க்கான இணைப்பு கீழே, அமேசானில் வாங்கி படித்து பயன் பெறுங்கள்.



ஆராய்ச்சி கட்டுரைக்கான இணைப்பு


அறிஞரை பற்றி அறிய 

Wednesday, January 8, 2020

1) 20 கோடி பட்டினியாளர்களை கொண்ட இந்தியா - இன்றைய இந்தியா(2020)

இன்றைய இந்தியா என்ற தலைப்பில் இந்தியாவின் நிலையை குறித்து என்னால் முடிந்தவரை தரவுகளை ஆதாரங்களுடன் தொகுத்து தந்துள்ளேன், குறை தவறு இருப்பின் சுட்டுங்கள் திருத்தி கொள்கிறேன். நிறை அனைத்தும் இறைவனுக்கே.

1. பசி பட்டினி

இந்தியாவில் உள்ள ஏழில் ஒருவன் இரவு உணவு இல்லாமல் படுக்கைக்கு செல்கிறான், இதுதான் இந்தியாவின் நிலை, hunger index என்ற அட்டவணையில் இந்தியாவின் இடம் 102. 117 நாடுகளில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தியாவுக்கான இடம் 102, எதற்க்கெடுத்தாலும் பாகிஸ்தானோடு ஒப்பிட்டு பேசுவது பாசிச பிஜேபி யின் வேலை, அந்த பாகிஸ்தானே 94 வது இடத்தில் உள்ளது.







உலகின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள் அதிகமாக வசிக்கும் நாடு இந்தியா
  • 194.4 மில்லியன் மக்கள், அதாவது நமது மக்கள் தொகையில் 14.5% ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள்
  • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 20.8% எடை குறைந்தவர்கள்
  • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 37.9% உடல் நலம் குன்றியவர்கள்
  • இனப்பெருக்க வயதில் (15-49 வயது) 51.4% பெண்கள் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 



இந்த பசிகளுக்கான காரணம் என்ன?

பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், சரியான குடிநீர் வசதி இன்மை, திட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்த வக்கற்ற அரசு, வேலையின்மை, சாதிக்கொடுமை என்று பட்டியல் நீள்கிறது.


இதே நிலை நீடித்தால் பசியற்ற இந்தியாவை 2025 ல் இந்தியா அடைய முடியாது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். 


இந்த பிரச்சனைகளை தீர்க்க இந்தியா எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?

5 ,32 ,800  கோடிகளை ஒவ்வொரு வருடமும் ஒதுக்கினால் மட்டுமே, 2030  ல் பசியற்ற இந்தியாவை உருவாக்க முடியும் ஆனால் இந்தியா ஒதுக்கிய தொகை எவ்வளவு? 1,23,580  கோடிகளை மட்டும் ஒதுக்கியுள்ளது, நான்கு மடங்குக்கு கீழ் தொகையை ஒதுக்கி எப்படி பசியற்ற இந்தியாவை உண்டாக்க முடியும்? இந்த லட்சணத்தில் பணமதிப்பிழப்பு, வரி, தேசிய குடிமக்கள் பதிவேடு என்று நாட்டின் பொருளாதாரத்தை சவக்குழியில் வைக்கும் வேலையை இந்தியா தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக வாக்கு கொடுத்த இந்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பல லட்சம் மக்கள் வேலையை இழந்து பார்லே ஜீ பிஸ்கட்டு கூட வாங்க இயலாத நிலையில் உள்ளனர். இந்த கொடூரங்கள் நீங்க பாசிச அரசு எல்லோருக்குமான அரசாக மாறவேண்டும், மதம் ஜாதி இறைநம்பிக்கை போன்றவற்றை மக்களின் சொந்த விருப்பத்திற்கு விட்டுவிட்டு நாட்டை முன்னேற்ற பாடுபடவேண்டும். இல்லையெனில் பாசிச அரசை மக்கள் குழிதோண்டி புதைக்கும் காலம் வெகு தூரம் இல்லை.

https://www.downtoearth.org.in/coverage/health/why-india-remains-malnourished-42697.

பசியற்ற உலகை உருவாக்க இஸ்லாம் கூறும் வழி என்ன?


  1. உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள் என்ற குரானின் படி தேவைக்கு தகுந்த சாப்பிடவேண்டும்.
  2. வயிற்றை மூன்று பாகங்களாக பிரித்து ஒரு பகுதி உணவு, ஒருபகுதி நீர் ஒரு பகுதி காற்று என்ற முஹம்மது (ஸல்) வழிமுறைப்படி உண்ணவேண்டும்.
  3. பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் உண்மையான இஸ்லாமியன் இல்லை என்ற கூற்றுப்படி ஒவ்வொருவனும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு உணவு கொடுத்து உதவ வேண்டும்.
  4. குழம்பில் தண்ணீர் ஊற்றி அதிகமாக்கி பக்கத்து வீட்டுக்காரனுக்கு கொடுத்து உதவுங்கள்.


Tuesday, January 7, 2020

NRC, CAA and NPR


அன்பானவர்களே, NRC என்ற தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது அஸ்ஸாம் மக்களுக்காக கொண்டுவரப்பட்டது. அஸ்ஸாம் மக்களின் நெடுங்கால கோரிக்கை தங்களின் வளங்களையும் வாழ்வாதாரத்தையும் பங்காள தேச, மேற்கு வங்காள மக்கள் (முஸ்லிம்கள் & இந்துக்கள்)  அபகரிக்கின்றனர், அதனால் அவர்களை வெளியேற்றவேண்டும் என்பது. அதற்காக வழக்கு தொடுத்து உச்ச நீதி மன்றத்தில் தீர்ப்பு வந்தது. தீர்ப்பில் சொல்லப்பட்டது என்னவென்றால் பங்களாதேஷ் பிரிந்த போது அதாவது 24 -03 -1971  க்கு பிறகு மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷில் இருந்து வந்த மக்கள் அனைவரும் (முஸ்லிம்கள் மட்டுமல்ல ஹிந்துக்களும்) அஸ்ஸாமை விட்டு வெளியேற வேண்டும். அதை நடைமுறைப்படுத்தாமல் பிஜேபி அரசு 23 -03 -1991 க்கு பிறகு வந்த மக்கள் அனைவரும் அஸ்ஸாமை விட்டு வெளியேற வேண்டும் என்று புதிய பிரச்சனையை கிளப்பியது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது எரிகிற தீயில் என்னை வார்த்தது போலாகிவிட்டது. இதை எதிர்த்து தான் அஸ்ஸாமிகள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள் 

அவர்களின் போராட்டத்தை கணக்கில் எடுக்காமல் NRC  ஐ அமல்படுத்தி 1600  கோடி செலவு செய்து 40  லட்சம் அஸ்ஸாமிகளை இந்தியர்கள் இல்லை என்று பிஜேபி அரசு அறிவித்தது. 40 லட்சம் மக்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு 8000  கோடி அளவுக்கு செலவு செய்து ( வேலையை விட்டு அலைந்தால் ஆன செலவு 8000  கோடி என்று தோராயமாக கணக்கிடப்பட்டுள்ள்ளது) 21 லட்சம் தங்கள் குடியுரிமையை பெற்றுள்ளனர். மீதம் 19 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லை. இந்த 19 லட்சம் பேரில் 12  லட்சம் பேர் ஹிந்துக்கள், 7  லட்சம் பேர் முஸ்லிம்கள். இப்பொழுது இந்த 19 லட்சம் பேர் தங்களுக்கு குடியுரிமை வேண்டும் என்றும், அஸ்ஸாமிகள் 21 லட்சம் பேருக்கு ஏன் குடியுரிமை கொடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குகிறீர்கள் என்றும் போராடுகின்றனர். இது முழுக்க முழுக்க பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை சார்ந்ததே, இதில் மதமோ சாதியோ இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த பிரச்சனை இப்படியே இருக்க NRC  ஐ நாடு முழுக்க நடைமுறைப்படுத்துவோம் என்று உள்துறை அமைச்சர் நடைமுறைப்படுத்தி உள்ளார். இந்த நேரத்தில் இது தேவை அற்றது மட்டுமல்ல, மக்களுக்கு எதிரானதும் கூட. 

இது இப்படி இருக்க CAA என்ற குடிமக்கள் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. இது என்ன சொல்கிறது  என்றால்,  வேறு நாட்டில் இருந்து வந்து (எந்த நாடானாலும் - திருமண உறவு & இந்திய வம்சாவளி , எந்த மதமானாலும்) 11  வருடங்களாக குடியிருந்தால் இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று சட்டத்தை 5 வருடம் இருந்தாலே போதும் என்று குறைத்துள்ளது, மேலும் பழைய சட்டம் ஜாதி மத இன அடிப்படையில் ஆனது அல்ல, ஆனால் 2019  சட்டம் மூன்று நாடுகள் மற்றும் ஆறு மதங்கள் (இஸ்லாம் தவிர்த்து) என்று சொல்கிறது.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது 19 லட்சம் அஸ்ஸாமிகளில் பல லட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும், இதனால் மேலும் அஸ்ஸாமிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

இலங்கை தமிழர்களுக்கு எதிரான சட்டம்

இனப்படுகொலை மூலமாக பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு ஏன் இந்த குடியுரிமை இல்லை என்று கேட்டபோது இலங்கை இந்தியாவை சேர்ந்தது அல்ல என்றார்கள், ஆனால் Afganistan மட்டும் எப்போது இந்தியாவோடு இருந்தது என்ற சொல்வதில்லை, இது வர்ணாசிரம அடிப்படையில் அமைக்கப்பட உள்ள பாசிச ராஷ்டிராவின் விதை என்று தெரிந்தோர் முளையிலேயே கிள்ளியெறிய ஆசைப்படுவார்கள்.

இது முஸ்லிம்களை பாதிக்குமா?

முஸ்லிம்களை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியர்களையும் பாதிக்கும், எப்படி என்றால் இந்தியர்கள் அனைவரும் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவையான சான்றை தயாரிக்கவேண்டும், அதற்காக அலையும் போது பொருளாதாரம் பாதிக்கும், அதனால் நாட்டில் உள்நாட்டு உற்பத்தி மேலும் குறையும், இறக்குமதி அதிகமாகும், பணவீக்கம் அதிகமாகும், நாட்டில் பொருளாதாரம் சீர்குலையும். இன்று இருக்கும் பொருளாதார நிலைக்கு இது தேவையற்றது.

இதன்மூலம் அரசுக்கு எதிராக போராடக்கூடியவர்கள் அனைவரையும் இந்திய குடிமக்கள் இல்லை என்று அறிவிக்க முடியும். தன குடியுரிமையை நிரூபிக்க வழக்கு, நீதிமன்றம் என்று அலைய குறைந்தது 50,000 செலவாகும். பார்லே ஜி பிஸ்கட் கூட வாங்க வழியற்ற மக்கள் எப்படி தங்கள் குடியுரிமையை நிரூபிக்க ஆயிரக்கணக்கில் செலவு செய்யமுடியும்?.

சரி குடியுரிமை இல்லை என்று ஆகிவிட்ட பிறகு, வதை கூடங்களில் மக்களை அடைப்பார்கள், அவர்களை விலங்குகளை விட மோசமாக நடத்துவார்கள், அவர்களுக்கான அடிப்படை தேவைகளை செய்யமாட்டார்கள். கொத்தடிமைகளாக வாழும் அவர்களை பயன்படுத்தி வேலை வாங்கி கொண்டு குறைந்த வழங்குவார்கள், அல்லது ஊதியம் வழங்க மாட்டார்கள். இதன் மூலம் நாட்டில் உள்ள மற்றவருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும், பஞ்சம் தலைவிரித்தாடும். கார்ப்பரேட்டுகள் கொழிப்பார்கள், சாதாரண மக்கள் கஞ்சிக்கே வழி இல்லாமல் சாவார்கள்.

இனியும் இது முஸ்லிம்களுக்கு மட்டுமே எதிரானது என்று சொல்வதால் ஒருபயனும் இல்லை, இந்த தேவையற்ற சட்டத்தை அரசு திரும்ப பெரும் வரை நாடே இதற்க்கு எதிராக போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இல்லையென்றால் பூர்வகுடிகள் நாடற்று நாதியற்று வாழ நேரிடும்.


இது இப்படியே இருக்கு புதிய ஒரு சட்டத்தை நடைமுறை படுத்த துடிக்கிறது மத்திய பாசிச அரசு அது தான் NPR என்ற National Population Registry.



இதன் நோக்கமும் ஆதாரின் நோக்கமும் ஒன்று (சற்று ஏறக்குறைய) எனும்போது எதற்கு இந்த சட்டம்?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
1). 98 % இந்தியர்களுக்கு ஆதார் கார்டு இருக்கும் போது பிறகு எதற்கு இந்த சட்டம்? ஏற்கனவே உள்ள தரவுகளை பயன்படுத்தவேண்டியது தானே, அதாரின் தரவுகள் தேவை இல்லை என்றால் பிறகு ஏன் 24,066  கோடிகள் செலவு செய்து ஆதார் அட்டையை கொடுத்தீர்?
2). தான் இந்தியன் என்பதை நிரூபிக்க ஆதாரங்களை காட்டுமாறு கேட்கப்போவது இல்லை - பிறகு எதற்கு இந்த சட்டம்?



----------------------------------------------------------------------------------------------------------------------------------------

1). நீங்கள் பிறந்த தேதி, மாதம், ஆண்டு, இடம் ஆகிய விவரங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையிலேயே உள்ளது பிறகு எதற்கு இந்த சட்டம்?
2). வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள விவரம் போதுமானது இல்லை என்றால் நான் அளித்த வாக்கின் மூலம் தேர்நதெடுக்கப்பட்ட MLA , MP , இத்யாதி இத்யாதி எப்படி செல்லுபடியாகும்? செல்லுபடி ஆகவில்லை என்றால் திரும்பவும் தேர்தலை நடத்துவீர்களா?
3). எந்த எந்த ஆவணங்களை ஆதாரமாக ஏற்பது என்று முடிவு செய்யாமல் எதற்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்கிறீர்?
4). இதன் மூலம் எந்த பாதிப்பும் யாருக்கும் இல்லை என்றால் பிறகு எதற்கு இந்த சட்டம், சட்டத்தின் அவசியம் என்ன? நாடாளுமன்றத்தை கூட்டி விவாதித்து சட்டம் இயற்றவேண்டிய அவசியம் என்ன? பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே? 


---------------------------------------------------------------------------------------------------------------------------------------

1). ஏற்கனவே ஆதாரில் பிறந்த தேதி உண்டு, வாக்காளர் அடையாள அட்டையில் பிறந்த தேதி உண்டு பிறகு ஏன் கேட்ப்பார்கள்?

2). எதற்க்காக பதிவேட்டை தயாரிக்கிறீர்கள்?



 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
1). வாக்காளர் அடையாள அட்டை என்பதும் குடியுரிமைக்கான ஆதாரம் தானே பிறகு எதற்கு இந்த சட்ட திருத்தம்?


---------------------------------------------------------------------------------------------------------------------------
ஆக மொத்தத்தில் எதற்க்காக இந்த சட்டத்தை கொண்டுவந்தோம் என்றும், இனி என்ன செய்யப்போகிறோம் என்று தெளிவான விளக்கத்தை கொடுக்காமல் மக்களை அலைக்கழிப்பதே பாசிச அரசின் நோக்கம்.

2125 க்குள் இந்து ராஸ்டிராவாக இந்தியாவை ஆக்குவது தான் ஆர் எஸ் எஸ் ன் நோக்கம், அந்த இந்து ராஷ்டிரா எப்படி இருக்கும் என்றால் 3% மக்கள் மட்டும் கொழித்து வாழக்கூடிய, மற்ற சமுதாயத்தினர் அவர்களுக்கு அடிமையாக வாழவேண்டிய இந்தியாவாக இருக்கும். அதை ஆரம்பத்திலேயே தடுப்பது ஒவ்வொரு இந்தியர்களின் கடமை.

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...