Saturday, February 22, 2020

51. காமராஜரை உயிருடன் எரித்து கொல்ல முயன்ற பாசிஸ்டுகள்







காமராஜரை பாசிஸ்டுகள் எரித்து கொலை செய்ய முயன்ற காரணங்கள் யாவை?

1. ஆர் எஸ் எஸ் ஆதரவாளரான காங்கிரஸ் குன்ஸாரிலால் நந்தாவை தற்காலிக பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார் காமராஜர்,

2.ஆர் எஸ் எஸ் ஆதரவாளரான மொராஜ் தேசாவை பிரதமர் ஆக்காமல் இந்திராவை பிரதமர் ஆக்கினார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராஜர்,

3. பசுவதை எதிர்ப்பு சட்டத்தை காங்கிரஸ் செயற்குழுவில் எதிர்த்தார்,

4. பசுவதை சட்டத்தை விட மக்களின் வாழ்வாதாரம் முக்கியம் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொன்னார்,


5. காந்தியின் உயிரை குடித்த பாசிஸ்டுகளை எதிர்த்தார்.


10-Jan-1966 - ரஷ்ய பிரதமர் அலெக்ஸி கோசிஜின் தலைமையில் இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அயூப்கான் இருவரும் இந்திய பாகிஸ்தான் போரை நிறுத்துவதாக ஒப்புக்கொண்டனர். அதன் பெயர் தாஸ்கண்ட் ஒப்பந்தம். அன்று இரவே சாஸ்திரி மாரடைப்பால் இறந்தார், பின்பு அவர் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. அவர்கள் குடும்பத்தினர் சாஸ்திரியின் மரணத்தின் சந்தேகம் எழுப்பினர். ஜனதா ஆட்சியில் விசாரணை நடந்தது, ஆனால் கொலை என்று நிரூபிக்கப்படவில்லை. இன்றுவரை அவரின் மரணம் மர்மமாகவே உள்ளது.

இந்தியாவின் இந்து பிரதமர் என்று ஆர் எஸ் எஸ் ஆள் சிலாகிக்கப்பட்ட சாஸ்திரியின் மரணம், இந்துத்துவ இயக்கங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எஞ்சியிருந்த ஒரே நம்பிக்கை குன்ஸாரிலால் நந்தா.

ஆர் எஸ் எஸ் மீது நந்தாவுக்கும், நந்தா மீது ஆர் எஸ் எஸ் க்கும் ஒருவித ஈர்ப்பு இருந்தது, அந்த ஈர்ப்பு நேருவின் இறப்புக்கு பின் கூடியது. அதன் காரணமாக ஆர் எஸ் எஸ் ன் பத்திரிக்கையான ஆர்கனைஸருக்கு பேட்டிகள் கொடுத்தார். அதே காலக்கட்டத்தின் சதாசர் சமிதி (நல்லொழுக்கத்திற்க்கான சங்கம்) என்று ஆரம்பித்து மத அமைப்புகள் அனைத்தையும் ஒற்றை குடையின் கீழ் ஒன்று சேர்க்க முயன்றார், அதற்க்கு ஆர் எஸ் எஸ் யையும் ஆர்கனைஸரையும் துணைக்கு அழைத்தார். அரசு ஊழியர்கள் ஆர் எஸ் எஸ் ல் இருக்கக்கூடாது என்றபோது, ஆர் எஸ் எஸ் அரசியல் கட்சியல்ல, கலாச்சார  அமைப்பு என்று ஆர் எஸ் எஸ் க்கு சான்றிதழ் வழங்கினார்.

ஆர் எஸ் எஸ் க்காக இவ்வளவு செய்தவரை பிரதமராக ஆக்க ஆர் எஸ் எஸ் விரும்பியது, அதன் படியே நந்தா தற்காலிக பிரதமர் ஆனார். பிறகு நிரந்தர பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையை தொடங்கினார் காங்கிரசின் தலைவர் காமராஜர். அந்த நேரத்தில் ஆர் எஸ் எஸ் ன் நம்பிக்கை கீற்று மொராஜ் தேசாய், ஆனால் அந்த நம்பிக்கை கீற்றும் மின்னலாகி மறைந்துபோனது. காமராஜர்,  நேருவின் மகளை பிரதமராக தேர்ந்தெடுத்தார்.

பிரதமராக ஆன இந்திராவுக்கு முதல் சவால் பாசிச சங்கங்களின் பசுவதை எதிர்ப்பு போராட்டம். ஆர் எஸ் எஸ் தொடங்கி ஆரிய சமாஜம் வரையிலான பாசிச அமைப்புகள் காலம் காலமாக முன்னெடுக்கும் விடயம் பசுவதை தடை.




பசுவதைக்கு எதிரான சட்டம் வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோது, நேரு அதை செய்யவில்லை. இந்திரா பிரதமர் ஆனபோது நந்தா போன்ற ஆர் எஸ் எஸ் ஸ்லீப்பர் செல்ஸ் காங்கிரசில் இருந்து கொண்டு அழுத்தம் கொடுத்தனர்.

இந்தியா முழுமைக்கும் பொருந்த கூடிய வகையில் பசுவதை சட்டம் கொண்டுவரவேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து 07 -நவம்பர் 1966 அன்று  டெல்லியில் பேரணி நடத்தப்போவதாக பாசிச அமைப்புகளான பாரதிய ஜனசங்கம், ஹிந்து மஹா சபை, ஆரிய சமாஜம், சனாதன தர்மம் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்தன.

 அந்த பேரணிக்கு பாரதிய ஜனசங்கத்தின் மத்திய நிர்வாகக்குழு முழு ஒத்துழைப்பை நல்கியது.

பசுவதையை முழுமையாக தடுக்க அரசியலமைப்பு சட்டத்தை திருத்தவேண்டும்,
பசு பக்தர்கள் அனைவரையும் பாரதிய ஜனசங்கம் வணங்குகிறது,
பசு பாதுகாப்புக்குக்கான சர்வ கட்சி குழுவுக்கு தனது முழு ஒத்துழைப்பையும் அது உறுதி செய்கிறது

என்று தீர்மானங்களை ஜனசங்கம் நிறைவேற்றியது.

பேரணிக்காக உருவாக்கப்பட்ட உயர்மட்டக்குழுவில் ஜனசங்க பொதுச்செயலாளர் தீனதயாளன் உபாத்யாயா, ராமராஜ்ய பரிஷத்தின் ஸ்வாமி கரபாத்ரஜி, பூரி சங்கராச்சாரியார், முனி சுஷில்குமார், டெல்லி ஆர் எஸ் எஸ் ன் ஹான்ஸ் ராஜ் குப்தா, பாரத் சாது சமாஜத்தின் ஸ்வாமி குர்சரன் தாஸ், டெல்லி ஜனசங்கத்தின் வி பி ஜோஷி, காங்கிரசின் சேத கோவிந்ததாஸ், ஆரிய சமாஜத்தின் ராம்கோபால் சல்வாலே உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.


பேரணிக்கு ஆர் எஸ் எஸ் குண்டர்கள், சாமியார்கள், பாசிஸ்டுகள் அனைவரையும் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டனர். பேரணி அன்று சுமார் ஒன்னரை லட்சம் பேர் குழுமி இருந்தனர். அதிகமாக மக்கள் உத்திர பிரதேஷ், மத்திய பிரதேஷ், பீகார், ராஜஸ்தான், டெல்லி மற்றும் பஞ்சாப் ல் இருந்து வந்திருந்தனர்.


பேரணி செல்வதற்கு டெல்லி காவல்துறை அனுமதி கொடுத்து இருந்தது, அதற்க்கு முன் ராமேஸ்வரானந்த் போன்ற பல  தலைவர்கள் பேசினார்கள், அதில் ராமேஸ்வரானந்த் என்ற ஜனசங்க எம் பி நாடாளுமன்றத்தில் பசுவதை தடுப்பு சட்டம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், பின்னர் கோமாத்கி ஜே என்று முழங்கி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இப்போதும் பேரணியில் அவர்தான் பேரணிக்கு வந்தவர்களை உசுப்பேத்தினார், இப்படி அமைதியாக யிருந்து என்ன பயன், புறப்படுங்கள், நாடாளுமன்றத்தை சூழ்ந்து கொள்ளுங்கள், அங்கிருந்து மந்திரிகளை வெளியேற அனுமதிக்காதீர்கள் என்று மக்களை உசுப்பேத்தினார்.

இது போதாதா? மக்கள் நாடாளுமன்றத்தை சூழ்ந்தனர், நாடாளுமன்றத்தின் உள்ளே நுழைய முற்பட்டனர், காவலர்கள் தடுத்தார்கள், தங்களிடம் இருந்த சூலாயுதத்தால் காவலர்களை தாக்கினார்கள், அதை தடுக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது, அதில் பல சாமியார்கள் இறந்தனர்.


அதை தொடர்ந்து சாமியார்கள் கூட்டம் களைய தொடங்கியது, பயந்து போய் அல்ல, பயங்கர ஆத்திரத்துடன். அருகில் இருந்த அமைச்சர் ரகுராமையா வீட்டை அடித்து நொறுக்கியது அந்த வெறியூட்டப்பட்ட கூட்டம். உண்மையில் அவர்கள் தாக்க விரும்பியது காமராஜர் வீட்டைத்தான். காரணம், பசுவதை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு காமராஜரின் பதில் சற்றே காட்டமாக இருந்தது.


அதாவது பசுவுக்காக இவர்கள் கவலைப்படுகிறார்கள், மனிதர்கள் வசிக்க வீடில்லை, உடுத்த நல்ல துணி இல்லை, அடுத்த வேலை சோற்றுக்கு வழி இல்லை, ஆனால் இவர்கள் பசுவை வைத்து அரசியல் செய்கிறார்கள், இவர்களின் பூரர்வீக கதை நமக்கு தெரியாதா? இந்த வன்முறை கும்பல் தானே தேசப்பிதா காந்தியின் உயிரை குடித்தது, இன்னும் யார் யார் உயிரை குடிக்க அலைகிறார்கள் இவர்கள்? மீண்டும் நாட்டில் நவகாளி நடக்கவேண்டுமா?

பசுவதை எதிர்ப்பு சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுவில் விவாதம் நடந்த போது அதை எதிர்த்தவர் காமராஜர். மேலும், செயற்குழுவில் பசுவதைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தால் அதை நான் ஏற்கப்போவது இல்லை என்றார் கர்ம வீரர் காமராஜர்.

இதை அறிந்துகொண்ட பாசிஸ்டுகள் காமராஜர் மீது கடுங்கோபம் கொண்டனர், அதனால் வந்த கோபத்தில் காமராஜர் வீட்டை அடித்து நொறுக்க சென்றனர், அதே நேரத்தில் அருகில் இருந்த ரகுராமய்யா என்ற அமைச்சரின் வீட்டை அடித்து நொறுக்கினார்கள்.

சட்டென சுதாரித்த ஒருவர், நாம் தாக்கவேண்டியது இந்த வீடு அல்ல, அது பக்கத்துக்கு தெருவில் உள்ளது என்ற நியாபகப்படுத்த, கூட்டம் காமராஜர் வீட்டை அடித்து நொறுக்க கிளம்பியது.

ஜந்தர் மாந்தர் சாலையில் நான்காம் எண் கட்டடமான தன் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார் காமராஜர். அந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைய பார்த்தனர் பாசிச கலவரக்காரர்கள். ஆனால் காமராஜரின் உதவியாளர்களாக நிரஞ்சன் வாலுவும், பக்துர்சிங்கும் அவர்களை வீட்டுக்குள் நுழைய விடவில்லை.

ஆத்திரமடைந்த பாசிஸ்டுகள், வீட்டின் மீது கல்லை வீசினர், கையேடு கொண்டுவந்த பெட்ரோலை ஜன்னல் மூலம் உள்ளே ஊற்றி நெருப்பை மூட்டினர். அதற்குள் காமராஜர் இருந்த அறையை உள்பக்கமாக தாழ்ப்பாழ் போட்டுக்கொண்டார். அப்போது அவருடன்  இந்தியன் எஸ்பிரஸின் மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜனும் இருந்தார்.
கலவரக்கார்கள் பாதுகாவலர்களை நெட்டி தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து குளிசாதன பெட்டியை அடித்து உடைத்தனர். வீட்டு பணியாளர் அம்மியை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றனர். கோமாதா கி ஜே என்ற முழக்கத்தோடு காமராஜர் இருந்த அறையின் கதவை உடைக்க முயன்றனர்.

நிலைமையின் விபரீதத்தை புரிந்துகொண்ட காமராஜர் தானே சென்று பாசிஸ்டுகளிடம் பேசி அவர்களை அமைதிப்படுத்துவதாக சொன்னார், ஆனால் உதவியாளர்கள் நீங்கள் சென்றால் உங்கள் உயிரை குடித்துவிடுவார்கள் என்று எச்சரித்தனர்.

அதற்குள் வீட்டில் இருந்து கிளம்பிய புகை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்த்ததால், காவல் துறைக்கு விபரம் தெரியப்படுத்தப்பட்டு, காவலர்கள் வந்து பாசிஸ்டுகளை அடித்து துரத்தினார்கள்.

 விவகாரம் அத்தோடு முடியவில்லை, காமராஜரை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற விடயம் நாடாளுமன்றத்திலும், காங்கிரஸ் செயற்குழுவிலும் எதிரொலித்தது. ஜனசங்க எம் பி ராமேஸ்வரானந்த் பேசிய பேச்சி உண்மை தான் என்று உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா உறுதி செய்தார். அந்த பேச்சுக்கான ஒலிநாடா ஆதாரம் இருப்பதாக சொன்னார்  செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ராஷ் பகதூர்.

அதனை தொடர்ந்து குன்ஸாரிலால் நந்தா கடுமையான கண்டனத்துக்கு உள்ளானார். நடந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கும் வகையில் தன் உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கொஞ்சமும் தாமதிக்காமல் அந்த ராஜினாமாவை இந்திரா ஏற்றுக்கொண்டார்.

 ஆதாரம் - இந்துத்துவ இயக்க வரலாறு, நா முத்துக்குமார் - பக்கம் 319-324.

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...