இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாகட்டும்.
49:6 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا
اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ
49:6. முஃமின்களே!
ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத்
தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால்
(குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர்
நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
BJP ன் B team அஸதுத்தீன் உவைஸி (AIMIM)
உத்திர பிரதேச தேர்தல் பற்றி மட்டுமல்ல மற்ற 4 மாநில தேர்தல்
பற்றியும் ஒரு கட்டுரை எழுதவேண்டும் என யோசித்து நேரம் இல்லாமல் எழுதமுடியவில்லை. ஆனால்
இன்று கட்டாயம் இந்த கட்டுரையை எழுதவேண்டிய நிர்பந்தம் உள்ளதால் எழுதுகிறேன்.
நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலின் முடிவு கடந்த 10 ந்தேதி வெளியானது. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இன்றுவரை
AIMIM கட்சியை பிஜேபி யின்
பி டீம் என்ற வசைபாடுதல் நிற்கவில்லை. AIMIM கட்சியின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும்
அவர்கள் பி டீமாக செயல்படவில்லை என்ற உண்மையை உரைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
முஸ்லிம்களை பொறுத்தவரையில் எதிரியாக இருந்தாலும் வசைபாடுதல், அவதூறு கூறுதல் மற்றும் அநியாயம் செய்தல் கூடாது. பாதிக்கப்பட்டவனின்
இறைஞ்சுதலுக்கு அல்லாஹ்விடம் பயந்துகொள்ளுங்கள் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
ஒரு முஸ்லிமுக்கு ஒரு செய்தி கிடைத்தால் அதை சரிபார்க்காமல் பரப்பமாட்டான், அதுவும் இன்றைய மோசமான காலகட்டத்தில் மிகவும் விழிப்போடு இருக்கவேண்டும்.
சரி விடயத்துக்கு வருவோம், உத்திர பிரதேச தேர்தலை சந்திக்க AIMIM , பாபு சிங் குஷ்வாஹாவின் ஜன் அதிகார் கட்சி, வாமன் மேஷ்ராமின் ராஷ்ட்ரிய பரிவர்தன் மோர்ச்சா, பகுஜன் முக்தி கட்சி,
பாரதிய வஞ்சித் சமாஜ் கட்சி மற்றும் ஜனதா கிராந்தி கட்சி ஒன்றிணைத்து
Bhagidari
Parivartan Morcha என்ற கூட்டணியை உருவாக்கியது. மேலும் Peace party
of India கட்சியை இந்த கூட்டணி ஆதரிக்கும் என்றும் முடிவுசெய்யப்பட்டது.
AIMIM உத்திரப்பிரதேசில் 100 இடங்களிலும் Peace party
of India 100 இடங்களிலும் போட்டியிட்டது. 0.49% ஓட்டுக்களை AIMIM பெற்றது. 2017 ல் 312 இடங்களை பெற்ற பிஜேபி 255 இடங்களை பெற்றும் ஆட்சி அமைக்கப்போகிறது, அதே நேரத்தில் சமாஜ்வாதி பார்ட்டி 2017 ல் 64 இடங்களை பெற்றது, 2022 ல் 111
இடங்களை பெற்றுள்ளது. பிஜேபி க்கு சரிவு என்றாலும் தனிப்பெருன்பான்மையுடன் ஆட்சி
அமைக்கப்போகிறது. அவர்களின் வெற்றிக்கு பல காரணிகள் இருந்தாலும் மிக முக்கிய காரணி பிஜேபி யை எதிர்க்கும் எவரும்
ஒன்று இணையாததுதான். மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி, இந்திய காங்கிரஸ், அகிலேஷ்
யாதவின் சமாஜ்வாதிபார்ட்டி என்று எல்லோரும் பிரிந்து நின்றுவிட்டு பிஜேபி வென்றதும்
AIMIM
தான் காரணம் என்பது கேடுகெட்ட அய்யோக்கியத்தனம்.
அதிலும் சிவ சேனா சொல்லும் (AIMIM க்கும் மாயாவதிக்கும் விருதுகள் தரவேண்டும்) அரசியல்
அறிவற்றது காரணம், மராத்தியில்
ஆட்சியை ருசிக்க காங்கிரசின் உதவி தேவை ஆனால் பிஜேபி யை வெற்றிகொள்ள காங்கிரசுடன் சேர்ந்து
போட்டியிடமாட்டமாட்டோம் என்ற நிலைப்பாடு நகைப்புக்குரியது மட்டுமல்ல, கடைந்தெடுத்தெடுத்த அய்யோக்கியத்தனமும் ஆகும். 0.03% ஓட்டுக்களை
பெற்ற சிவசேனா காங்கிரஸோடு சேராமல் நிறத்துக்கு காரணம் என்ன? பிஜேபி யை வெற்றிபெறவைக்கத்தான்.(நோட்டாவை விட குறைவு, நோட்டா 0.69%).
2019 நாடாளுமன்ற தேர்தலில் 23 வருட பகையை மறந்து மாயாவதி அகிலேஷுடன் இணைந்து போட்டியிட்டார், 2014
ல் மாயாவதியின் உத்திரபிரதேச MP களின் எண்ணிக்கை 0, ஆனால் 2019 ல் அகிலேஷ் யாதவுடன் இணைந்தபிறகு கிடைத்த MP 10 . இருந்தும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் இனி அகிலேஷுடன் கூட்டணி
இல்லை என்று தனது நிலையை மாற்றிக்கொண்டார்.
அகிலேஷ் ஆல் பலனடைந்தும் கூட்டணியை முறித்தத்து ஏன் என்ற காரணம்
தெரியவில்லை. கூட்டணியை தொடந்து இருந்தால் பிஜேபி யை உத்திர பிரதேசத்தில் இருந்தே துடைத்தெறிந்து
இருக்கலாம், ஆனால் தனித்து நின்று பிஜேபி யை வெற்றிபெறவைத்துவிட்டார்.
அதைவிட கொடூரம் மம்தாவும் அகிலேஷ் ம் செய்ததுதான். மம்தா அகிலேஷை
ஆதரித்தார், ஆனால் காங்கிரசை வெறுத்தார், முடிவு எல்லோரும் தனித்து நின்றார்கள் பிஜேபி வென்றது. சிறுவயதில்
இருந்தே மாடு சிங்கம் கதை படித்து இருக்கிறோம், இன்று நடைமுறையில் காண்கிறோம்.
இனி AIMIM ஆல் பிஜேபி வெற்றிபெறவில்லை என்பதை ஆதாரத்துடன் காண்போம்.
AIMIM போட்டியிட்டதே 100 இடங்களில் தான், ஆனால் கீழே
உள்ள போட்டோவில் 165 இடங்களில் AIMIM ஆல் பிஜேபி வென்றது என்று உள்ளது.
இதுபோன்ற விடயங்களை திட்டமிட்டு பரப்புவார்கள் யாரென்று பார்த்தால், ஒன்று பிஜேபி யினர்களாக இருக்கும், அல்லது காலம்காலமாக நம்மை அடிமையாக வைத்திருக்கும் திராவிட கட்சியாக
இருக்கும். இதில் மானக்கேடான விடயம் யாதெனில் இஸ்லாமியர்களே இதுபோன்ற நச்சுக்களை பிரித்து
அறியாதது தான்.
12.88% ஓட்டுக்களை பெற்ற மாயாவதியால் ஓட்டுக்களை பிரியவில்லை, ஆனால் 0.49% பெற்ற AIMIM ஓட்டுக்களை பிரித்து விட்டது என்பது
மனநோயாளிகள் வியாக்கணம், திருந்த
வேண்டியது AIMIM அல்ல. மனநோயாளிகளே.
உண்மை அறியாமல் பொய்யை பரப்புவார்கள் அறிந்துகொள்ளட்டும், மாயாவதி 10-20 % வரை (மேலே
இவர்கள் குற்றம் சாட்டும் தொகுதிகளில்) ஓட்டுக்களை பிரித்துள்ளார். ஆக மொத்தம் மாயாவதி தான்
உண்மையான பிஜேபி யின் பி டீம் என்பது விளங்குகிறது. இனிமேலாவது ஃபாஸிக் என்ற தீயவனாக
இருக்காமல், இறைவனினின்
பொருத்தத்தை பெரும் உண்மையாளர்களாக இருப்போம், பாசிசத்தை வேரறுப்போம்.