Sunday, May 9, 2021

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் மூலம் இஸ்லாமிய சமுதாயம் கற்ற பாடம்

I. தேர்தலுக்கு முன் இஸ்லாமியர்களின் நிலைப்பாடு

சட்டமன்ற தேர்தல் காலம் சூடுபிடித்துக்கொண்டு இருந்த சூழ்நிலையில் இஸ்லாமியர்கள் அனைவரும் யாராவது நமக்கு நல்லது செய்துவிடமாட்டார்களா என்று ஏக்கத்தோடு இருந்தார்கள். கடந்த கால அதிமுகவின் பிஜேபி கூட்டணி, மக்களை விரோத போக்கின் விரக்தியால் முஸ்லீம் சமுதாயத்திற்கு இருந்த ஒரே போக்கிடம் திமுக மட்டுமே. 

கடந்த காலங்களின் திமுக இஸ்லாமிய சமூகத்திற்கு சில நல்லதையும் சில தீமைகளையும் செய்திருந்தாலும், அதிமுக விடம் செல்லமுடியாத காரணத்தால் திமுக தான் நமது தீர்வாக இருந்தது.

நம்மை கவர திமுக கொடுத்த அல்லது திமுக செய்யும் என்று நாம் நினைத்த வாக்குறுதிகள்

1. பிஜேபி யை தமிழகத்தில் காலூன்றவிடாமல் எங்களால் மட்டுமே தடுக்கமுடியும்.

2. CAA  NRC & NPR போன்ற சட்டங்களை ஆட்சிக்கு வந்தால் நீக்கிவிடுவோம்.

மேலே சொன்ன இரண்டு காரணங்களால் பெரும்பான்மை இஸ்லாமிய சமுதாயம் திமுகவை தானாக சென்று ஆதரவை அளித்தது. வெள்ளிக்கிழமை ஜும்மா மேடைகள் திமுகவிற்க்கான மேடைகளாக மாறியது. பாம்பு, உப்புமா மற்றும் இளநீர் கதைகள் சொல்லப்பட்டது. அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர் கூட திமுக தான் நமக்கான பாதுகாவலன் என்று வம்படித்தார்கள்.

எல்லா பள்ளி இமாம்களும் திமுகவிற்கு தான் வாக்கு செலுத்தவேண்டும் என்று கட்டாய கடைமை போல சொன்னார்கள். அரசியல் ஹராம் தேவையற்றது என்று இதுவரை சொல்லிய சமூகம் இன்று அரசியல் தேவை என்று மாறியுள்ளதை வரவேற்போம், ஆனால் அரசியல் பற்றி இன்னும் படிக்கவேண்டும் என்பதே நமது ஆவல்.

உண்மையிலேயே திமுக தான் தீர்வா?

திமுகவிற்கு வாக்குச்செலுத்த இஸ்லாமிய சமுதாயம் தயாராக இரண்டு காரணம் மேலே சொன்னது, அதை திமுகவால் தடுக்கமுடியுமா? தடுக்க முடிந்ததா? தடுக்கவும் இல்லை, தடுக்கவும் முடியாது என்பதுதான் அதற்க்கான பதில்.

1. பிஜேபி யின் வளர்ச்சியை திமுகவால் தடுக்கமுடியாது, தடுக்கவும் இல்லை.

பெரும்பான்மை மக்கள் பிஜேபி யை பற்றி தெரிந்த அளவுக்கு ஆர் எஸ் எஸ் பற்றி தெரியவில்லை. ஆர் எஸ் எஸ் என்ற நாசகார சக்தி மக்களின் மனநிலையை திட்டமிட்டு மாற்றிக்கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் இருமடங்கு தன் செயல்பாடுகளை அதிகரித்துள்ளது. மக்கள் விரோத செயல்களை திட்டம் தீட்டி செயல்படும் RSS அமைப்பின் அரசியல் பிரிவுதான் பிஜேபி, ஆக பிஜேபி யை அழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது முற்றிலும் தவறான வாதம். 

தமிழ்நாட்டில் பிஜேபியுடன் திமுக கூட்டணி வைத்தது நாமெல்லாம் அறிந்த ஒன்றே, ஆனால் இன்று பிஜேபி யை எதிர்ப்பதுபோல திமுக தன்னைக்காட்டிக்கொண்டு வெற்றிபெறவேண்டும் என்று செயல்பட்டது, வெற்றியும் பெற்றுவிட்டது. 

எல்லா கட்சியும் வேட்பாளரை அறிவித்தவுடன் தான் திமுக வேட்பாளர்களை அறிவித்தது, பிஜேபி போட்டியிட்ட தொகுதிகளில் பிஜேபியை எதிர்த்து தோல்வியுறச்செய்யும் அளவுக்கு திமுக வேட்பாளர்களை தேர்வு செய்யவில்லை, பிரச்சாரமும் சரியாக செய்யவில்லை. இதிலிருந்தே பிஜேபி யின் வருகையை திமுகவால் தடுக்கமுடியாது/தடுக்கவும் செய்யாது என்பது திண்ணம். 

2. CAA, NRC & NPR சட்டங்களை திமுகவால் மட்டுமல்ல எந்த மாநில கட்சியாலும் திரும்ப பெறவைக்கமுடியாது.

மத்திய அரசு கொண்டுவந்த பல திட்டங்களை (வேளாண் மசோதா, நீட் தேர்வு, குடியுரிமை சட்டம்) எந்த மாநில கட்சியாலும் தடுத்தநிறுத்தவோ, திரும்ப பெறவைக்கவோ முடியாது. நீதிமன்றத்தை அணுகி சட்டத்தை தடுத்தநிறுத்த முடியும் ஆனால் அந்த வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து எடுத்த நடத்த நீதிமன்றங்கள் தயாராக இல்லை, காரணம் பிஜேபி மற்றும் ஆர் எஸ் எஸ். 

ஆக முடியாத இரண்டு காரங்களை காட்டி முஸ்லிம்களை பயமுறுத்தி பயன்படுத்திக்கொண்டது என்பதை விட பயன்படுத்தவிட்டுவிட்டோம் என்பதே சரியான வாதம். 

SDPI மற்றும் மற்ற கட்சிகளின் நிலைப்பாடு

SDPI இந்திய முழுக்க உள்ள ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி, இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராக கொண்டு வளர்ந்துவரும் கட்சி. இந்த கட்சியின் தேர்தல் நிலைப்பாடு பிஜேபி தவிர மற்ற கட்சிகளோடு கூட்டணிவைக்கலாம் என்பதே. கூட்டணி வைப்பது கேவலமான காரியம், தவறான காரியம் என்றால் திமுகவே இன்று கூட்டணி மூலம் தான் ஆட்சியை பிடித்துள்ளது. கூட்டணி என்பது வெற்றிக்கான தேர்தல் வியூகமே தவிர தவறான காரியமல்ல.  

ஆக திமுக மற்றும் மக்கள் நீதிமய்யத்திடம் கூட்டணி பேசியது அல்லது அ ம மு க விடம் கூட்டணி வைத்ததோ தவறில்லை.

மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர்களும் அவர் அவர் அரசியல் பாதையில் சென்றபோது SDPI  க்கு ஓட்டுப்போட்டால் மட்டும் பிஜேபி வந்துவிடும் என்று பொய்யை பரப்பியது ஏன்?

தேர்தல் முடிவுக்கு பிறகு SDPI டெபாசிட்டை இழந்தது, பிஜேபி யும் வந்தது. 

II. இஸ்லாமிய சமூகம் என்ன செய்திருக்கவேண்டும்?

திமுக தான் முஸ்லிம்களின் போக்கிடம் என்றால் ஒட்டுமொத்த சமுதாயமும் ஒன்றாகி நமது தேவைகளை கேட்டு, பிரதிநிதித்துவத்தை அடைய முற்பட்டிருக்கவேண்டும், அதை செய்யாமல் தானாக சென்று ஆதரவு தந்து நம்மை நம்மை நாமே தாழ்த்திக்கொள்வது போலாகும். இஸ்லாமியர்கள் என்றால் மற்றவருக்கு நன்மை செய்யக்கூடியவர்கள், இன்று தமிழகத்தில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடிக்கொண்டு இருக்கிறது, முஸ்லிம்களே இன்று குடிகாரர்களாக மாறிக்கொண்டு வருகிறார்கள். சிறையின் எந்த பாவமும் அறியாத பலர் விசாரணைக்கைதியாகவே இருக்கிறார்கள். இந்த பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு? இஸ்லாமிய சமுதாயம் எல்லோரும் ஒற்றைக்கட்டாக நின்று இந்த பிரச்சனைகளை தீர்ப்போம் என்று வாக்குறுதி கொடுத்தால் திமுகவை ஆதரிப்போம், இல்லையென்றால் தேர்தல் நிலைப்பாட்டை எடுக்கமாட்டோம் என்று சொல்லியிருக்கலாம், அதை உலமா சபை முன்னின்று செய்திருக்கவேண்டும். ஆனால் ஏதோ ஒரு பலனை மனதில் வைத்துக்கொண்டு பிஜேபி வந்துவிடக்கூடாது என்ற ஒற்றை ஓட்டை காரணத்தை கொண்டு திமுகவை ஆதரிப்பது நமக்கு நாமே குழிபறிப்பது போலாகும்.

இஸ்லாமிய சமூகத்தின் மொத்த பிரச்சனைகளையும் தீர்ப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தால் ஆதரிப்போம் என்று சொல்லி நெருக்கடியை கொடுப்பதற்கு பதில், தமுமுக இரண்டு சீட்டில் உதயசூரியன் சின்னத்தில் நின்றது. லீக் மூன்று இடத்தில் ஏணி சின்னத்தில் நின்றது. 

தமுமுக வென்றது, லீக் தோற்றது. லீக்கின் தமிழக சகாப்தம் முடிந்தது. 

திமுக ஒன்றும் இஸ்லாமியர்களின் காவலர்கள் அல்ல, இறைவன் மட்டுமே நமது காவலன். குடியுரிமை சட்டத்தை திமுக செயல்படுத்தவிடாது என்று நாம் நம்பினால் அதுதான் நமது அரசியல் அறியாமை, அதை திமுக பயன்படுத்திக்கொண்டது. 

தான் வெற்றிபெற எதையும் ஒரு அரசியல் கட்சி செய்யும், திமுக பிஜேபி+குடியுரிமை சட்டத்தை காட்டி நம்மை பயன்படுத்திக்கொண்டது.

III. நமக்கான பிரச்சனைக்கு என்ன தீர்வு?

இனியாவது நாம் அரசியலில் மட்டுமல்ல எல்லா விடயத்துக்கு ஒன்று இணைய வேண்டும். தேசிய அளவில் முஸ்லிமாக மட்டுமல்ல, ஒடுக்கப்பட்டவர்களாக தேசிய கட்சியான சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் (SDPI) கீழ் ஒன்றிணைந்து பசியற்ற பயமற்ற இந்தியாவை படைக்கப்படுபடவேண்டும். 

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...