Wednesday, April 15, 2020

தப்லீக் ஜமாத்தினர் திட்டமிட்டு பரப்பிய கொரோனா - பயோ ஜிஹாத்



காலம் காலமாக இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தை பல வழிகளில் எதிர்த்துக்கொண்டு இருக்கிறார்கள், முடிவு அவர்கள் வாயை மண்ணைக்கொண்டே இறைவன் மூடி இருக்கான் என்பது வரலாறு. காய்த்த மரம் கல்லடிப்படும் என்பதுபோல, இஸ்லாம் சத்திய மார்க்கம் என்பதால் ஷைத்தானும் அவனை பின்பற்றுபவர்களுக்கு இஸ்லாத்தை விமர்சித்து கொண்டே இருக்கிறார்கள்.



அவர்களின் விமர்சனங்களால் வெற்றிபெற முடியாத போது அவதூறை கைலெடுக்கிறார்கள். பன்னெடுங்காலமாக அவர்கள் இஸ்லாத்தோடு நடத்தும் போரில் முக்கிய போர் அறிவுப்போர், இதில் இஸ்லாமிய எதிரிகள் பல வெற்றிகளை கண்டுள்ளனர். அதில் முக்கியமானது ஜிஹாத், அது லவ் ஜிஹாத் , பயோ ஜிஹாத் என்று நீண்டு கொண்டு போகிறது.



1800 ல் இருந்து 1950 வரை 60,000 புத்தகங்களை இஸ்லாத்திற்கு எதிராக எழுதியுள்ளனர், அந்த மூடர்களுக்கு தெரியவில்லை இஸ்லாம் என்ற ஜோதியை வாயால் ஊத்தி அணைக்கமுடியாது என்று.



இன்று தப்லீக் ஜமாத்தால் மட்டுமே இந்தியாவில் கொரோனா பரவியதாக கட்டப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் வெற்றிபெற்று விட்டனர், ஆனால் உண்மை அதுவல்ல. பாசிஸ்டுகளும் அவர்களின் ஆதரவாளர்களும் இதை நம்பலாம், தங்களின் கையாலாகாத தனத்தை மூடி மறைக்கலாம், அனால் உண்மை ஒருபோதும் தூங்காது.



கொரோனா இந்தியாவுக்கு வந்த பாதையை அறிந்துகொண்டால் எப்படி, யாரால் இந்தியாவில் கொரோனா பரவியது என்பதை எளிதில் அறியலாம்.



1. முதல் கரோனா சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட நாள் - 17-11-2019 – South Morning China Post. (Source: https://www.livescience.com/first-case-coronavirus-found.html)




2. நாம் இப்போதே கொரோனாவை தடுக்க ஆயத்தமாகவேண்டும்
இது தான் சரியான நேரம், பயப்படவேண்டாம்,
இது அறிவியலுக்கான நேரம், வந்தந்திகளுக்கான நேரம் அல்ல,
இது ஒற்றுமைக்கான நேரம், களங்கத்திற்க்கான நேரம் அல்ல என்று – 30-01-2020 - Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) - Director-General of the World Health Organization கூறினார். (Source: https://news.un.org/en/story/2020/01/1056372)
இந்த நேரத்தில் CAA விஷயத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தியது.


3. முதல் கரோனா நோயாளி கேரளாவில் கண்டறியப்பட்டது 30-01-2020 (Source: https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/coronavirus-crisis-heres-total-number-of-confirmed-cases-in-india-as-per-health-ministry/articleshow/74589499.cms?from=mdr)



4. கரோனா வைரஸ் காரணமாக ஏர்போர்ட்டுகளில் பரிசோதனைகளை தொடங்கியது - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வரதன்.



5. 28,529 நபர்களை சந்தேகித்து, கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வரதன் சொன்னது – 05-03-2020.


6. 288 பேரை பரிசோதித்ததில் 5 பேருக்கு கொரோனா உள்ளது என்று கேரளா அரசு சொன்னது – 28-01-2020.


7. இந்தியாவில் 23 நோயாளிகளை கண்டறிந்ததாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நாள் 04-03-2020.


8. 3 நாட்களுக்கு முன் டெல்லியில் ஒருவரையும் தெலுங்கானாவை சேர்ந்த மற்றொருவரையும் கொரானா தாக்கியதை கண்டுபிடித்தோம், ஒருவர் இத்தாலியில் இருந்தும் மற்றொருவர் துபாயில் இருந்தும் வந்தனர் என ஹர்ஷ் வர்தான் சொன்னது 05-03-2020.


9. மேலும் ஆக்ராவை சேர்ந்த ஆறுபேரை பரிசோதித்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, அவர்கள் டெல்லியில் இருந்து தொற்றை பெற்றனர். இத்தாலியில் இருந்து ராஜஸ்தானுக்கு சுற்றுலாவுக்கு வந்த கணவன் மனைவிக்கு இருந்த கொரோனா பஸ் ஓட்டுநர் முதல் கொண்டு 14 பேர்களுக்கு பரவியது.



10. நாங்கள் எல்லா வகையிலும் கொரோனாவை முறியடிக்க தயார் நிலையில் 17-01-2020 ல் இருந்து உள்ளோம் என்று ஹர்ஷ் வரதன் என்று சொன்னார்.


Source: https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/govt-taking-all-measures-to-prevent-spread-of-coronavirus/articleshow/74494313.cms?from=mdr).



ஆக இந்தியா 17-01-2020 அன்று தொட்டே கொரோனாவை கட்டுக்குள் வைக்க எல்லா நடவடிக்கையும் எடுத்துவிட்டது, பிறகு எப்படி கொரோனா இந்தியா முழுக்க பரவியது? காரணம் தப்லீக் ஜமாத் அப்படித்தானே. உண்மையா பொய்யா என்பதை ஆராய்வோம்.




தப்லீக் ஜமாஅத் மாநாடு நடக்க திட்டமிட்ட தேதிகள் மார்ச் 10, 12-13  மற்றும் 18. முதல் ஊரடங்கு மார்ச் 23 அன்றுதான் போடப்பட்டது, ஆக ஊரடங்கை மீறி இந்த கூட்டம் நடக்கவில்லை, இந்த மாநாடு நடந்தது குற்றம் என்றால் இதற்க்கு முன்னும் பின்னும் பல கூட்டங்கள் நடந்தது அது குற்றம் ஆகாதா? அதன் மூலம் கொரோனா பரவாதா? எல்லா வகையிலும் தோல்வியுற்ற கையாலாகாத அரசு தப்லீக் ஜமாத்தை குற்றம் சுமத்துகிறது.




முதல் கொரோனா கேரளாவில் 30-01-2020 அன்று கண்டறியப்பட்ட உடன் ஏன் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கல? இத்தாலியில் இருந்து சுற்றுலாவுக்கு வந்தவர்கள் மூலம் டெல்லியில் கொரோனா பரவியபோது அரசு என்ன செய்து கொண்டு இருந்தது?


கொரோனாவின் அச்சம் இருந்த போது நமஸ்தே ட்ரம்ப் என்று ட்ரம்பை February 24  அன்று குஜராத் அழைத்துவந்து, 100  கோடிக்கு கட்டிய குட்டி சுவரை காட்டியது இந்திய அரசு. அதில் மொத்தம் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 1.25 லட்சம் வரை.


கோவை ஈஷா மையத்தில் நடந்த சிவராத்திரி (Feb-21 ) விழாவில்   கலந்துகொண்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 150. மொத்தம் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சம். இதன் மூலம் ஏன் கொரோனா பரவி இருக்க வாய்ப்பில்லை?




1. உலக பெண்கள் தினம் குடியரசு மாளிகையில் கடந்த மார்ச் 8  அன்று நடந்தது,




2. 10  நாட்கள் நடக்கும் ஆட்டிங்கள் பொங்கல் கேரளாவில் 10  லட்சம் அளவிற்கு பெண்கள் கூடி நடந்தது, அடுத்தடுத்த நாட்களில் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43  ஆக உயர்ந்தது.



3. 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்த அடுத்த நாளே  உத்திர பிரதேச மாநில முதல்வர் தடையை மீறி ராம நவமியை நடத்தினார்.



4. கூட்டம் கூடக்கூடாது என்று கர்நாடகா மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட பின்பும் சட்டமன்ற உறுப்பினர் மஹன்ட்ஸ்  க்வாட்கிமத் அவர்களின் மக்களின் திருமணத்திற்கு கர்நாடகா முதல்வர் சென்று கலந்துகொண்டு தடையை மீறினார்.



5. கொரோனாவில் பாதிக்கப்பட்ட பாடகி கனிகா கபூர் உடன் பிறந்த நாள்    (Mar 20) விழா கொண்டாடிய முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் அவரின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்யந்த் சிங்
 


6. பஞ்சாபி சீக்கிய கண்காட்சியில் மார்ச் 10 -12  வரை 40,000  வரை மக்கள் கலந்து கொண்டார்கள், அதை முன்னின்று நடத்திய 70  வயது பிரச்சாரகர் மார்ச் 26  ந் தேதி இறந்து விடுகிறார்.



7. உகாதி என்ற தெலுங்கு (March 25) வருடப்பிறப்பு நாடெங்கிலும் தெலுங்கர்களால் கொண்டாடப்பட்டது, முக்கியமாக ஆந்திரா கர்நாடகா மற்றும் கர்நாடகாவில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி இந்த விழாவை நடத்தினார்கள்.


திருப்பதி முதல் பல பிரசித்தி பெற்ற கோவில்கள் தர்க்காக்கள் சர்ச்சுகள் மூடப்படவில்லை, பெரிய பெரிய வணிக வளாகம் முதல் மார்க்கட் வரை திறந்தே இருந்ததன. இப்போதெல்லாம் பரவாத கொரோனா தப்லீக் ஜமாத்தால் தான் பரவியது என்றால் எப்படி சரியாகும்.

 இதிலெல்லாம் பரவாத கொரோனா தப்லீக் மாநாட்டால் மட்டும் பரவியது என்று இஸ்லாம் மீது வெறுப்பை இந்திய ஊடகங்கள் பரப்பிக்கொண்டு இருக்கின்றன. பொய்யை  விட, பாதி உண்மை மிகவும் மோசமான விஷயம்.


 ஊடங்கள் நடுநிலை தவறும்போது சமுதாயத்தில் பல மோசமான விளைவுகளை உண்டாக்கும், ஒரு சமுதாயத்தையே குற்றப்படுத்தி உங்கள் வயிறை மோசமாக நிரப்பக்கூடிய இழிநிலைக்கு இந்த அரசு உங்களை தள்ளியுள்ளது என்றால் நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது அரசை, மாறாக நீங்களே ஒரு சமுதாயத்தை குற்றப்படுத்தி சுய இன்பம் அடைகிறீர்கள்.


 இதே நிலை நீடித்தால், குறித்துவைத்துக்கொள்ளுங்கள் இனியும் பல மோசமான தண்டனைகளை இறைவனிடம் இருந்து பெறுவீர்கள். எப்பொழுதெல்லாம் சமுதாயம் நடுநிலை தவறுகிறது அப்பொழுதெல்லாம் தண்டிக்கப்படும்.



















Saturday, February 22, 2020

51. காமராஜரை உயிருடன் எரித்து கொல்ல முயன்ற பாசிஸ்டுகள்







காமராஜரை பாசிஸ்டுகள் எரித்து கொலை செய்ய முயன்ற காரணங்கள் யாவை?

1. ஆர் எஸ் எஸ் ஆதரவாளரான காங்கிரஸ் குன்ஸாரிலால் நந்தாவை தற்காலிக பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார் காமராஜர்,

2.ஆர் எஸ் எஸ் ஆதரவாளரான மொராஜ் தேசாவை பிரதமர் ஆக்காமல் இந்திராவை பிரதமர் ஆக்கினார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராஜர்,

3. பசுவதை எதிர்ப்பு சட்டத்தை காங்கிரஸ் செயற்குழுவில் எதிர்த்தார்,

4. பசுவதை சட்டத்தை விட மக்களின் வாழ்வாதாரம் முக்கியம் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொன்னார்,


5. காந்தியின் உயிரை குடித்த பாசிஸ்டுகளை எதிர்த்தார்.


10-Jan-1966 - ரஷ்ய பிரதமர் அலெக்ஸி கோசிஜின் தலைமையில் இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அயூப்கான் இருவரும் இந்திய பாகிஸ்தான் போரை நிறுத்துவதாக ஒப்புக்கொண்டனர். அதன் பெயர் தாஸ்கண்ட் ஒப்பந்தம். அன்று இரவே சாஸ்திரி மாரடைப்பால் இறந்தார், பின்பு அவர் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. அவர்கள் குடும்பத்தினர் சாஸ்திரியின் மரணத்தின் சந்தேகம் எழுப்பினர். ஜனதா ஆட்சியில் விசாரணை நடந்தது, ஆனால் கொலை என்று நிரூபிக்கப்படவில்லை. இன்றுவரை அவரின் மரணம் மர்மமாகவே உள்ளது.

இந்தியாவின் இந்து பிரதமர் என்று ஆர் எஸ் எஸ் ஆள் சிலாகிக்கப்பட்ட சாஸ்திரியின் மரணம், இந்துத்துவ இயக்கங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எஞ்சியிருந்த ஒரே நம்பிக்கை குன்ஸாரிலால் நந்தா.

ஆர் எஸ் எஸ் மீது நந்தாவுக்கும், நந்தா மீது ஆர் எஸ் எஸ் க்கும் ஒருவித ஈர்ப்பு இருந்தது, அந்த ஈர்ப்பு நேருவின் இறப்புக்கு பின் கூடியது. அதன் காரணமாக ஆர் எஸ் எஸ் ன் பத்திரிக்கையான ஆர்கனைஸருக்கு பேட்டிகள் கொடுத்தார். அதே காலக்கட்டத்தின் சதாசர் சமிதி (நல்லொழுக்கத்திற்க்கான சங்கம்) என்று ஆரம்பித்து மத அமைப்புகள் அனைத்தையும் ஒற்றை குடையின் கீழ் ஒன்று சேர்க்க முயன்றார், அதற்க்கு ஆர் எஸ் எஸ் யையும் ஆர்கனைஸரையும் துணைக்கு அழைத்தார். அரசு ஊழியர்கள் ஆர் எஸ் எஸ் ல் இருக்கக்கூடாது என்றபோது, ஆர் எஸ் எஸ் அரசியல் கட்சியல்ல, கலாச்சார  அமைப்பு என்று ஆர் எஸ் எஸ் க்கு சான்றிதழ் வழங்கினார்.

ஆர் எஸ் எஸ் க்காக இவ்வளவு செய்தவரை பிரதமராக ஆக்க ஆர் எஸ் எஸ் விரும்பியது, அதன் படியே நந்தா தற்காலிக பிரதமர் ஆனார். பிறகு நிரந்தர பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையை தொடங்கினார் காங்கிரசின் தலைவர் காமராஜர். அந்த நேரத்தில் ஆர் எஸ் எஸ் ன் நம்பிக்கை கீற்று மொராஜ் தேசாய், ஆனால் அந்த நம்பிக்கை கீற்றும் மின்னலாகி மறைந்துபோனது. காமராஜர்,  நேருவின் மகளை பிரதமராக தேர்ந்தெடுத்தார்.

பிரதமராக ஆன இந்திராவுக்கு முதல் சவால் பாசிச சங்கங்களின் பசுவதை எதிர்ப்பு போராட்டம். ஆர் எஸ் எஸ் தொடங்கி ஆரிய சமாஜம் வரையிலான பாசிச அமைப்புகள் காலம் காலமாக முன்னெடுக்கும் விடயம் பசுவதை தடை.




பசுவதைக்கு எதிரான சட்டம் வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோது, நேரு அதை செய்யவில்லை. இந்திரா பிரதமர் ஆனபோது நந்தா போன்ற ஆர் எஸ் எஸ் ஸ்லீப்பர் செல்ஸ் காங்கிரசில் இருந்து கொண்டு அழுத்தம் கொடுத்தனர்.

இந்தியா முழுமைக்கும் பொருந்த கூடிய வகையில் பசுவதை சட்டம் கொண்டுவரவேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து 07 -நவம்பர் 1966 அன்று  டெல்லியில் பேரணி நடத்தப்போவதாக பாசிச அமைப்புகளான பாரதிய ஜனசங்கம், ஹிந்து மஹா சபை, ஆரிய சமாஜம், சனாதன தர்மம் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்தன.

 அந்த பேரணிக்கு பாரதிய ஜனசங்கத்தின் மத்திய நிர்வாகக்குழு முழு ஒத்துழைப்பை நல்கியது.

பசுவதையை முழுமையாக தடுக்க அரசியலமைப்பு சட்டத்தை திருத்தவேண்டும்,
பசு பக்தர்கள் அனைவரையும் பாரதிய ஜனசங்கம் வணங்குகிறது,
பசு பாதுகாப்புக்குக்கான சர்வ கட்சி குழுவுக்கு தனது முழு ஒத்துழைப்பையும் அது உறுதி செய்கிறது

என்று தீர்மானங்களை ஜனசங்கம் நிறைவேற்றியது.

பேரணிக்காக உருவாக்கப்பட்ட உயர்மட்டக்குழுவில் ஜனசங்க பொதுச்செயலாளர் தீனதயாளன் உபாத்யாயா, ராமராஜ்ய பரிஷத்தின் ஸ்வாமி கரபாத்ரஜி, பூரி சங்கராச்சாரியார், முனி சுஷில்குமார், டெல்லி ஆர் எஸ் எஸ் ன் ஹான்ஸ் ராஜ் குப்தா, பாரத் சாது சமாஜத்தின் ஸ்வாமி குர்சரன் தாஸ், டெல்லி ஜனசங்கத்தின் வி பி ஜோஷி, காங்கிரசின் சேத கோவிந்ததாஸ், ஆரிய சமாஜத்தின் ராம்கோபால் சல்வாலே உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.


பேரணிக்கு ஆர் எஸ் எஸ் குண்டர்கள், சாமியார்கள், பாசிஸ்டுகள் அனைவரையும் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டனர். பேரணி அன்று சுமார் ஒன்னரை லட்சம் பேர் குழுமி இருந்தனர். அதிகமாக மக்கள் உத்திர பிரதேஷ், மத்திய பிரதேஷ், பீகார், ராஜஸ்தான், டெல்லி மற்றும் பஞ்சாப் ல் இருந்து வந்திருந்தனர்.


பேரணி செல்வதற்கு டெல்லி காவல்துறை அனுமதி கொடுத்து இருந்தது, அதற்க்கு முன் ராமேஸ்வரானந்த் போன்ற பல  தலைவர்கள் பேசினார்கள், அதில் ராமேஸ்வரானந்த் என்ற ஜனசங்க எம் பி நாடாளுமன்றத்தில் பசுவதை தடுப்பு சட்டம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், பின்னர் கோமாத்கி ஜே என்று முழங்கி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இப்போதும் பேரணியில் அவர்தான் பேரணிக்கு வந்தவர்களை உசுப்பேத்தினார், இப்படி அமைதியாக யிருந்து என்ன பயன், புறப்படுங்கள், நாடாளுமன்றத்தை சூழ்ந்து கொள்ளுங்கள், அங்கிருந்து மந்திரிகளை வெளியேற அனுமதிக்காதீர்கள் என்று மக்களை உசுப்பேத்தினார்.

இது போதாதா? மக்கள் நாடாளுமன்றத்தை சூழ்ந்தனர், நாடாளுமன்றத்தின் உள்ளே நுழைய முற்பட்டனர், காவலர்கள் தடுத்தார்கள், தங்களிடம் இருந்த சூலாயுதத்தால் காவலர்களை தாக்கினார்கள், அதை தடுக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது, அதில் பல சாமியார்கள் இறந்தனர்.


அதை தொடர்ந்து சாமியார்கள் கூட்டம் களைய தொடங்கியது, பயந்து போய் அல்ல, பயங்கர ஆத்திரத்துடன். அருகில் இருந்த அமைச்சர் ரகுராமையா வீட்டை அடித்து நொறுக்கியது அந்த வெறியூட்டப்பட்ட கூட்டம். உண்மையில் அவர்கள் தாக்க விரும்பியது காமராஜர் வீட்டைத்தான். காரணம், பசுவதை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு காமராஜரின் பதில் சற்றே காட்டமாக இருந்தது.


அதாவது பசுவுக்காக இவர்கள் கவலைப்படுகிறார்கள், மனிதர்கள் வசிக்க வீடில்லை, உடுத்த நல்ல துணி இல்லை, அடுத்த வேலை சோற்றுக்கு வழி இல்லை, ஆனால் இவர்கள் பசுவை வைத்து அரசியல் செய்கிறார்கள், இவர்களின் பூரர்வீக கதை நமக்கு தெரியாதா? இந்த வன்முறை கும்பல் தானே தேசப்பிதா காந்தியின் உயிரை குடித்தது, இன்னும் யார் யார் உயிரை குடிக்க அலைகிறார்கள் இவர்கள்? மீண்டும் நாட்டில் நவகாளி நடக்கவேண்டுமா?

பசுவதை எதிர்ப்பு சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுவில் விவாதம் நடந்த போது அதை எதிர்த்தவர் காமராஜர். மேலும், செயற்குழுவில் பசுவதைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தால் அதை நான் ஏற்கப்போவது இல்லை என்றார் கர்ம வீரர் காமராஜர்.

இதை அறிந்துகொண்ட பாசிஸ்டுகள் காமராஜர் மீது கடுங்கோபம் கொண்டனர், அதனால் வந்த கோபத்தில் காமராஜர் வீட்டை அடித்து நொறுக்க சென்றனர், அதே நேரத்தில் அருகில் இருந்த ரகுராமய்யா என்ற அமைச்சரின் வீட்டை அடித்து நொறுக்கினார்கள்.

சட்டென சுதாரித்த ஒருவர், நாம் தாக்கவேண்டியது இந்த வீடு அல்ல, அது பக்கத்துக்கு தெருவில் உள்ளது என்ற நியாபகப்படுத்த, கூட்டம் காமராஜர் வீட்டை அடித்து நொறுக்க கிளம்பியது.

ஜந்தர் மாந்தர் சாலையில் நான்காம் எண் கட்டடமான தன் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார் காமராஜர். அந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைய பார்த்தனர் பாசிச கலவரக்காரர்கள். ஆனால் காமராஜரின் உதவியாளர்களாக நிரஞ்சன் வாலுவும், பக்துர்சிங்கும் அவர்களை வீட்டுக்குள் நுழைய விடவில்லை.

ஆத்திரமடைந்த பாசிஸ்டுகள், வீட்டின் மீது கல்லை வீசினர், கையேடு கொண்டுவந்த பெட்ரோலை ஜன்னல் மூலம் உள்ளே ஊற்றி நெருப்பை மூட்டினர். அதற்குள் காமராஜர் இருந்த அறையை உள்பக்கமாக தாழ்ப்பாழ் போட்டுக்கொண்டார். அப்போது அவருடன்  இந்தியன் எஸ்பிரஸின் மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜனும் இருந்தார்.
கலவரக்கார்கள் பாதுகாவலர்களை நெட்டி தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து குளிசாதன பெட்டியை அடித்து உடைத்தனர். வீட்டு பணியாளர் அம்மியை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றனர். கோமாதா கி ஜே என்ற முழக்கத்தோடு காமராஜர் இருந்த அறையின் கதவை உடைக்க முயன்றனர்.

நிலைமையின் விபரீதத்தை புரிந்துகொண்ட காமராஜர் தானே சென்று பாசிஸ்டுகளிடம் பேசி அவர்களை அமைதிப்படுத்துவதாக சொன்னார், ஆனால் உதவியாளர்கள் நீங்கள் சென்றால் உங்கள் உயிரை குடித்துவிடுவார்கள் என்று எச்சரித்தனர்.

அதற்குள் வீட்டில் இருந்து கிளம்பிய புகை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்த்ததால், காவல் துறைக்கு விபரம் தெரியப்படுத்தப்பட்டு, காவலர்கள் வந்து பாசிஸ்டுகளை அடித்து துரத்தினார்கள்.

 விவகாரம் அத்தோடு முடியவில்லை, காமராஜரை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற விடயம் நாடாளுமன்றத்திலும், காங்கிரஸ் செயற்குழுவிலும் எதிரொலித்தது. ஜனசங்க எம் பி ராமேஸ்வரானந்த் பேசிய பேச்சி உண்மை தான் என்று உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா உறுதி செய்தார். அந்த பேச்சுக்கான ஒலிநாடா ஆதாரம் இருப்பதாக சொன்னார்  செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ராஷ் பகதூர்.

அதனை தொடர்ந்து குன்ஸாரிலால் நந்தா கடுமையான கண்டனத்துக்கு உள்ளானார். நடந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கும் வகையில் தன் உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கொஞ்சமும் தாமதிக்காமல் அந்த ராஜினாமாவை இந்திரா ஏற்றுக்கொண்டார்.

 ஆதாரம் - இந்துத்துவ இயக்க வரலாறு, நா முத்துக்குமார் - பக்கம் 319-324.

Sunday, February 16, 2020

பாசிசத்தை அச்சுறுத்தும் 5M

பாசிசத்தை அச்சுறுத்தும் 5M (எம்கள்) - பாசிச ஆர் எஸ் எஸ் கவனத்தில் கொள்ளவேண்டிய 5M

இந்த ஐந்து T மூலம் இந்திய பொருளாதாரத்தை காக்கலாம், ஐந்து F மூலம் பொருளாதாரத்தை உயர்த்தலாம், இந்த மூன்று D தான் இந்தியாவின் வலிமை என்று மோடி பேசியதை நாமெல்லாம் பரிகாசம் செய்தோம்.

நாம் செய்த விமர்சனங்களை மோடி கேட்டு விட்டு மேலும் சில பரிந்துரைகளுடன் மோடி வந்துள்ளதாக தெரிகிறது, அந்த பரிந்துரை தான் பாசிசத்தின் எதிரி 5M.


ஆனால் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) இப்போது வெறுப்பு அரசியலில் ஈடுபடுவதாக தெரிகிறது. புது தில்லியின் உபெர் ஸ்வாங்கி அசோகா ஹோட்டலில் சமீபத்தில் முடிவடைந்த உலக இந்து காங்கிரசில் (WHC), சங்கம் ஒரு "சிந்தனைக் கட்டுரையை" வெளியிட்டது, இது 5M ஐ இந்தியாவில் பாசிசத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அடையாளம் கண்டுள்ளது, அந்த 5M கீழே

1. Marxism - மார்க்சிசம்

2. Macaulayism - மகாலயிசம்

3. Missionaries - மிசினரி

4. Materialism – நாத்திகம்/ பணக்காரர்கள்

5. Muslim – முஸ்லீம்.


பாசிசத்தை பொறுத்தவரை தன்னை அச்சுறுத்தும் சக்திகளை நாட்டுக்கு எதிராக சித்தரிக்கும் , அதுற்கு பலிகடா ஆனால் நம்மையும் ஒருநாள் நாசமாக்கும். ஆர் எஸ் எஸ் என்ற நாசகார சக்தி இந்தியர்களுக்கு ஒன்றும் செய்ததில்லை, ஏன் விடுதலை போராட்டத்தில் கூட கலந்துகொள்ளவில்லை, ஆனால் மேலே உள்ள ஐந்து சக்தியும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உதவிற்று.



1. மார்க்சிசம் - மக்களுக்கு இடையே வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்கிறது 

ஆர் எஸ் எஸ் வர்ணாசிரம கொள்கைமூலம் மக்களை கூறுபோட்டுக்கொண்டு இருக்கிறது 
2. மெக்காலே கல்விக்கொள்கையில் பல குளறுபடிகள் இருந்தாலும், எல்லோருக்கும் கல்வி சென்று அடையவேண்டும் என்று விரும்பினார்கள், ஆதிக்க சாதியின் பல கேவல வரலாறுகளை பதிவு செய்தது 

ஆர் எஸ் எஸ் ன் சித்தாந்தம், படித்தால் நாக்கை அரு, படிப்பதை கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்றது 


3. மிஷினரி - மத மாற்றம் என்ற ஒற்றை எதிர்ப்பை மட்டுமே இவர்கள் மீது சொல்லமுடியும் , விரும்பியவர்கள் விரும்பிய மதத்தை ஏற்றுக்கொள்ள இந்திய அரசிலமைப்பு அனுமதிக்கும் போது மதமாற்றம் பெரியவிசயமல்ல, ஆனால் மிஷினரி சாதி மத மொழி வேறுபாடு இன்றி எல்லா மக்களுக்கும் கல்வியை அனுமதித்தது, எல்லா மக்களுக்கும் சேவை ஆற்றியது 
ஆனால் ஆர் எஸ் எஸ் என்ற நாசகார சக்தி மக்களை சாதி மத இன பேதம் அடிப்படையில் பிரித்து பார்த்தது, வேதகாலம் முதல் நவீன காலம் வரை மக்களை கூறுபோட்டு தாழ்ந்தவன், கீழானவன் என்று மக்களை கேவலப்படுத்தியது 

4. நாத்திகம் என்றாலே கடவுள் மறுப்பை மட்டும் பேசும் சித்தாந்தம் என்று ஒரு மாயையை மக்களிடம் ஏற்படுத்தி மக்களை சிந்திக்க விடாமல் செய்யும் தந்திரத்தை ஆர் எஸ் எஸ் பல காலமாக செய்து கொண்டு இருக்கிறது. ஆனால் கடவுளின் பெயரால் கட்டிசமைத்த கட்டுக்கதைகளை பகுத்தறிவு மூலம் மக்களிடம் தலிவை ஏற்படுத்தும் இயக்கமே நாத்திக இயக்கம், அது எல்லா மதங்களையும் எதிர்க்கிறது ஆனால் ஏதோ ஹிந்துக்களை மட்டுமே எதிர்ப்பதாக மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்கிறது பாசிசம். 
நான்கு வர்ணத்தை நானே படைத்தேன் என்று மக்களை கூறுபோட்டு சுகபோகமாக வாழ கடவுளின் பெயரில் கட்டுக்கதைகளை உண்டாக்கி மக்களை கூறுபோட்டு வர்ணாசிரம தர்மத்தை தூக்கி பிடிக்கும் இயக்கம் ஆர் எஸ் எஸ் 
5. இறைவன் முன் அனைவரும் சமம், அராபியராக இருந்தாலும் பயபக்தி உடையவர் தான் இறைவனுக்கு பிடித்தவர் என்றும், அமைதி, சாந்தி, சமாதானம் என்றும் மக்களிடம் இஸ்லாம் வளர்வதை கண்டு பொறுக்காமல், எங்கே வளர்ந்தால் நம் இருப்புக்கு ஆப்பு வந்துவிடும் என்ற காரணத்தாலும் பாசிசம் இஸ்லாத்தை தீவிரவாதிகள், தேச துரோகிகள் என்று மக்களிடம் பரப்புரை செய்து, இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து ஒழிக்கவேண்டும் என்று செயல்பட்டு கொண்டு இருக்கிறது பாசிசம் 
இறைவன் முன் அனைவரும் சமமல்ல, ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு வேலை உண்டு, அதை செய்வதே இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு என்று மக்களை கூறுபோட்டது ஆர் எஸ் எஸ். 



பல வருடங்களாக ஆர் எஸ் எஸ் ஆங்கில எழுத்தின் 13 வது எழுத்தை அதாவது M ஐ பிசாசின் குறியீடு என்று சொல்லிக்கொண்டு இருந்தது. மேலும் மார்க்க்சியம், மெக்காலே மற்றும் மதர்ஸாவை என்ற மூன்றையும் பயங்கரமான முக்கோணம் என்று சொல்லிக்கொண்டு இருந்தது. இன்று மிஷினரி மற்றும் ஆத்திகத்தை சேர்த்து ஐந்து முக்கியமான எதிரியாக சித்தரிக்கிறது.

பொதுவாக இந்துமதத்தை அறிந்து கொள்வது ஆர் எஸ் எஸ் வேலையாக இருக்கவில்லை, ஆர் எஸ் எஸ் சில புத்தகங்களை தடை செய்வதை விட்டுவிட்டு பாசிசத்திற்கு எதிராக உள்ளவைகளை (5M ) அழிக்கும் வேளையில் இறங்க வேண்டும். மேலும் அந்த 5M இந்து மத்தில் இருந்தே வருகிறது என்பதையும் அறியவேண்டும்.

1690 மற்றும் 1780 க்கு இடையில், பார்ப்பன அறிஞர் பாஸ்கரராய இந்து சாம்ராஜ்யத்தின் அவசியத்தை மக்களிடம் எடுத்துரைத்தார். மேலும் இலக்கணம், இறையியல், இலக்கியம் மற்றும் பல விஷயங்களில் பல கட்டுரைகளை எழுதினார்.

மராட்டி -தஞ்சாவூர் இராச்சியம் (இன்றைய மகாராஷ்டிராவின் பெரும்பகுதியையும், தமிழ்நாட்டின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது) இந்து மன்னர் சரபோஜி I ன் உதவியால் பாஸ்கரராயா இந்து மதத்தின் தத்துவங்கள் மற்றும் நடைமுறைகளை விவரிக்கும் ஒரு பெரிய படைப்பை ஒன்றாக உருவாக்கினார்.

இன்று நாம் அன்னை தேவி அல்லது சக்தியை அறிய பாஸ்கரராயா உருவாக்கிய கலைக்களஞ்சியமே உதவுகிறது. இன்று நாம் வழிபடும் சரஸ்வதி, சக்தி, பலப்பல கடவுள்கள், சித்தாந்தங்கள் எல்லாம் பாஸ்கரேயாவாள் உண்டாக்கப்பட்டதே.

பாசிச ஆர் எஸ் எஸ் தனக்கு எதிரானதாக கருதும் இந்த ஐந்தும் ஹிந்து மதத்தை கடுமையாக எதிர்க்கக்கூடியது என்று நாம் சொல்லித்தெரியவேண்டிய அவசியம் இல்லை.

முடிந்தால் அசைவ உணவை தடை செய்ய ஆர் எஸ் எஸ் விரும்பும், அது மேலும் அந்த 5M க்கும் ஆர் எஸ் எஸ் க்கும் பிரச்சனையை உண்டாக்கும்.

மது அருந்துவதும். போதைப்பொருள் உபயோகிப்பதும் ஆர் எஸ் எஸ் ஐ பொறுத்தவரை தடை, சைவர்களுக்கு கஞ்சாவும் தடையாகும்.


இதில் மிகப்பெரிய சோகம் யாதெனில், பாஸ்கரயா என்பவர் இந்த 5M ல் உள்ளவர் இல்லை. பாஸ்கரராய இறந்த மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு மார்க்ஸ் பிறந்தார்.

எனவே, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் விமானங்களைப் போலவே, தி கேபிடல் மற்றும் கம்யூனிஸ்ட் அறிக்கையும் பண்டைய இந்தியாவில் எழுதப்பட்டிருந்தால், பாஸ்காராயா ஒரு மார்க்சியவாதியாக இருந்திருப்பார்.

பரோன் மக்காலே 1834 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார், மீண்டும், பாஸ்காராயர் இறந்த பிறகு, அந்த M  ஐயும் டிக் செய்யலாம்.

மிஷினரி ? நீங்கள் என்னை விளையாடுகிறீர்களா? பாஸ்கரராயர் தனது வாழ்நாள் முழுவதையும் அன்னை தேவியின் வழிபாட்டிற்காக அர்ப்பணித்தார், மேலும் யஜ்ஞம் செய்யும் இந்துவாக இருந்தார். முஸ்லீம் ஆட்சியாளர்கள் நிறைந்த ஒரு நாட்டில் இந்து இறையியலைப் படிப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் அவர் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். ஏதேனும் இருந்தால், அவர் கிறிஸ்தவ மிஷனரிகள் மீது நித்திய நரகத்தை உச்சரித்திருப்பார் - புனித நூலின் மீது பெற்றுக்கொண்டு இருந்தார்.

அடுத்த M க்கு நாத்திகம் அல்லது பணக்காரர்கள் என்று பொருள் கொள்ளலாம், தத்துவத்தில், பொருள்முதல்வாதம் என்பது உறுதியான மற்றும் பொருள் சார்ந்த விஷயங்களின் (ஒருவர் காணக்கூடிய மற்றும் உணரக்கூடிய அல்லது கணித ரீதியாகக் குறைக்கக்கூடிய விஷயங்கள்) தொடர்புகளின் அடிப்படையில் வரலாற்றையும் சமூகத்தையும் விளக்கும் மற்றும் அருவமான விஷயங்களை நிராகரிப்பவர் அதாவது நாத்திகர். ஆனால் இதனாலும் பாஸ்கராயா பாதிப்படைய மாட்டார்.

வரலாற்றின் தொடக்கத்திலிருந்து இந்தியாவில் ஒரு பெரிய அளவிலான பொருள்முதல்வாத தத்துவம் இருந்தது - உண்மையில், சில சமயங்களில் இந்து சமுதாயத்தில் கிரேக்க-ரோமானிய க்கு முந்தைய பொருள்முதல்வாதம் இருந்தது. பாஸ்காராயர் விரும்பியிருந்தால், அந்த தத்துவ பள்ளிகளில் ஏதேனும் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் உண்மையில் பொருள்முதல்வாதத்தை எதிர்த்தவர். அவர் அன்னை தேவியின் உண்மையான தீவிர பக்தர். அந்தளவுக்கு அவரது உரைகள் தெய்வம் பற்றி இருந்தது. அவர் எப்படி தெய்வத்தால் ஆட்கொள்ளப்பட்டார் என்று நிறைய குறிப்புகள் எழுதப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது அவரது திரிபுரசுந்தரி பஹ்யா வரிவஸ்யா ஆகும். எனவே, ஆமாம், இந்த எம் கூட துண்டிக்கப்படுகிறது.

கடைசி M - முஸ்லீம் தீவிரவாதம்? அது சாத்தியமாக இருக்க ஒரு வாய்ப்பு கூட இல்லை (நிச்சயமாக ஐ.எஸ்.ஐ.எஸ் கொடியை வைத்திருக்கும் பாஸ்காராயாவின் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படம் சமூக ஊடகங்களில் வெளிவருகிறது).

அதனால் அது எதை விட்டுச்செல்கிறது? நள்ளிரவில் எழுந்திருந்தாலும் வேதங்களை மேற்கோள் காட்டக்கூடிய ஒரு தீவிர இந்து பிராமணர், தனது இந்து மதத்தை நன்கு அறிந்த ஒரு மனிதர், அவரது கால அரசியல் விவாதங்களும் பண்டிதர்களும் அவரது அபரிமிதமான வாசிப்பு மற்றும் தீவிரமான கூர்மையான அறிவை தெளிவுபடுத்தினர்.

இதையொட்டி, ஆர்.எஸ்.எஸ் அவர்களின் மூன்று M. Morality Of Victoria மஹாராணி விக்டோரியா அறநெறி, மெய்ன் காம்ப் அரசியல் மற்றும் முசோலினி ஆகியவற்றைச் செயல்தவிர்க்கும் ஒரு M தொகுப்பைத் தேடுகிறார்களானால், அவர்கள் தவறான இடங்களில் பார்க்கிறார்கள். அவர்களின் இத்தாலிய பாசிசம் மற்றும் ஜேர்மன் நாசிச கலவையை இந்து மதம் என்ற போர்வையில் ஆர் எஸ் எஸ் செய்கிறது.

பிரதானமாக இருக்கும் புதிர்

இந்த தந்திரமும் பஞ்சாமகரமும் பிரதான இந்து மதத்தின் ஒரு பகுதியாக இல்லை, எனவே நாம் புறக்கணிக்கலாம் மற்றும் நிலையான பதிப்பைத் தொடரலாம் என்று ஒருவர் இங்கு வாதிடலாம். ஆனால் அதற்கு நான் கேட்பேன் - பிரதான நீரோடை என்றால் என்ன? தரநிலை என்ன?

ஒரு உண்மை என்னவென்றால், மத அடையாளத்தின் பாசாங்குடன் அல்லது ஒரு கட்டுக்கதையை மற்றொன்றுக்கு முதன்மையாகக் கொண்டு நடத்தப்படும் போர்களை நம்மால் தீர்க்கமுடியவில்லை. மற்றொன்று என்னவென்றால், நாம் அடிக்கடி நம்புவதற்கு வழிவகுக்கும் அளவுக்கு நம் வரலாற்றை உண்மையில் விட்டுவிட மாட்டோம். இந்த இரண்டு உண்மைகளும் சேர்ந்து எல்லா நேரத்திலும் மாறும் மத அடையாளங்களின் பெயரில் நிரந்தரமாக சண்டை செய்ய வழிவகுக்குகிறது.


ஆர் எஸ் எஸ் எப்பொழுதும், தனக்கு வருகிற ஆபத்தை இந்து மதத்திற்கு வரும் ஆபத்து போலவே சித்தரிக்கும், அப்படி சித்தரித்து இந்துக்களை இந்துக்கள் அல்லாதவருக்கு எதிராக செயல்பட தூண்டும், ஆனால் அது உண்மையல்ல.

இந்து-முஸ்லீம் மோதல் வரலாற்று ரீதியாக உள்ளது - அதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்து-புத்த மோதல் மற்றும் இந்து-சமண மோதல்களும் உண்டு. மிக முக்கியமாக, இவற்றுடன், ஒவ்வொரு மதத்திலும் எப்போதும் மோதல்கள் இருந்தன. பாசிச படைப்பிரிவு ஊடகங்களில் தொடர்ந்து “இந்து மத விரோதம் ” என்ற பதத்தை சொல்லிவருவதன் அர்த்தம் என்னவென்றால், முதலில் முஸ்லிம்களை அழித்துவிட்டு, பின்னர் இந்து மத்தில் உள்ள பார்ப்பனர்களை தவிர எல்லோரையும் அழிப்பது அல்லது தனக்கு கீழாக வைப்பது ஆகும்.

சக்தி (பெண்பால் சக்தியை வணங்குபவர்கள்), ஷைவர்கள் (ஆண்பால் சிவனை வழிபடுபவர்கள்) மற்றும் வைஷ்ணவர்கள் (நகர்ப்புறத்தைப் பின்பற்றுபவர்கள் மற்றும் விஷ்ணு என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட பிற்கால மதத்தை) எப்போதும் எல்லோரையும் எதிரிகளாக வைப்பதன் நோக்கம் அதுவே.

வங்காளத்தைச் சேர்ந்த பிரபல வைணவ சுவிசேஷகர் சைதன்யாதேவ், அவரது காலத்தின் சக்திகளையும் சைவர்களும் கடுமையாக எதிர்த்தார்.

வங்காளத்தைச் சேர்ந்த முஸ்லீம் (ஆம், முஸ்லீம்!) நவாபின் ஆதரவைப் பெற்றபோது, ​​வங்காளத்தையும் அதன் பிராமணர்களையும் விட நீலாச்சலில் (இன்றைய ஒரிசாவில்) நட்புரீதியான இடமும், பணக்கார வர்த்தகர் சமூகத்தின் (தி வைசியர்கள்). வர்த்தக சமூகத்தின் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி, கீதையை (வைஷ்ணவ கண்ணோட்டத்தில் இந்து மதம்) இந்தியாவின் நடைமுறை மத புத்தகமாக பரிசளித்தபோது, ​​அந்த சிவ புராணம் அல்லது ஒரு சாந்தி அல்ல என்று சொல்லும்போது, ​​அந்த மோதலை நாம் இன்னும் உயிரோடு காண்கிறோம்.

மங்கல் காவ்யா.

நிலையானதாக இருப்பது அதிகாரத்தில் இல்லாதவர்களின் கலாச்சார நடைமுறைகளை நிராகரிப்பதாகும். அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை "பிரதான நீரோட்டம்" என்றும் அதிகாரத்திற்கு வெளியே இருப்பவர்கள் "மற்றவர்கள்" என்றும் அறிவிக்கிறார்கள். அவர்கள் இந்த பிரதான நீரோட்டத்தின் நடைமுறைகளை ‘தரநிலை’ என்று கருதுகின்றனர், மற்றவர்களின் நடைமுறைகளை ‘மாறுபட்டவர்கள்’ என்று மறுக்கிறார்கள். விரைவில், மாநிலத்தின் அதிகாரம் ‘மாறுபட்ட’ கலாச்சாரங்களை சட்டவிரோதமாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் ‘தரநிலை’ விதிக்கப்படுவது நிகழ்கிறது (ஐ.ஐ.டி கள் அசைவத்தை பரிமாறக்கூடாது, ஏனெனில் அதிகாரத்தில் இருக்கும் வைணவர்கள் மற்றும் சமணர்கள் இறைச்சி சாப்பிடுவதில்லை).

ஒரு மரபுவழி சாதி பிராமணர் என்ற இயங்கியல் மற்றும் தாந்த்ரீக வழியிலிருந்து விடுவிக்கப்பட்ட திறமை வாய்ந்தவர் என்று பாஸ்கரராயவே ஒப்புக் கொண்டார், இது பிராமணரின் சாதி மற்றும் சாதி இரண்டையும் ஒரு வகுப்பாளராக தனிப்பட்ட முறையில் நிராகரிக்கிறது.

அவர் இரட்டை வாழ்க்கை வாழ்ந்தார், தந்திரத்தின் வழிகள் அனைவருக்கும் இல்லை, எனவே வெளிப்படையாக பேச வேண்டியதில்லை என்று நியாயப்படுத்தினார். சில நூறு வருடங்கள் கழித்து, பாஸ்கரராயர் கொஞ்சம் பாசாங்குத்தனமானவர் - அல்லது, சிறந்த முறையில், தனது இணக்கமற்ற, முரட்டுத்தனமான, தாராளவாத கருத்துக்களுக்காக அரசியல் ரீதியாக துன்புறுத்தப்படுவார் என்று பயப்படுகிற ஒரு மனிதனைப் போல. அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது இன்று இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் உள்ள உயரடுக்கினரிடையே நாம் அதிகம் காண்கிறோம் - அவர்கள் பெரும்பான்மை மற்றும் தார்மீக சார்பு பொலிஸ் சித்தாந்தங்களை பொதுவில் ஆதரிக்கிறார்கள், ஆனால் தனிப்பட்ட முறையில் மிகவும் தாராளமாக உள்ளனர்.

அதிகாரத்தின் வலது பக்கத்தில் இருப்பதற்கும், பயனாளிகளின் நல்ல புத்தகங்களை அவர்கள் இந்த பாஸ்கராராயன் இரட்டைத்தன்மையுடன் தொடர்கிறார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஆழ்ந்த கவலைப்பட வேண்டியது என்னவென்றால், "பிரதான நீரோட்டம்", "தரநிலை" மற்றும் "இணக்கம்" என்று முத்திரை குத்தப்பட்டாலும், மற்றவர்களும் அவற்றின் விலகல்களும் நீங்காது. "தீங்கிழைக்கும் 5M" ஆர்.எஸ்.எஸ்ஸை விட அதிகமாக இருக்கும் என்பதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது.

எது எப்படியோ, பாசிசத்தை அழிக்க நாம் 3M களை கையில் எடுக்கவேண்டும்,

1. Media - இன்று பல ஊடகங்கள் விலை போய்விட்ட நிலையில், நமக்கு இருக்கும் ஊடகம் சமூக ஊடகங்களே. 
2. Manpower - சிறந்த கருத்தை கொண்ட, நல்ல முறையில் சிந்திக்கக்கூடிய, நாட்டின் மெது அக்கறைகொண்ட, வன்முறையை எதிர்க்க கூடிய நபர்கள் தேவை. 
3. Money - பாசிசத்தை வேரோடு புடுங்கி எறிய பொருளாதாரம் மிக மிக முக்கியம். 

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...