Sunday, February 19, 2023

ஆந்திர கவர்னர் அப்துல் நசீர் கடந்து வந்த பாதை

 



02-01-2023 அன்று உச்சநீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற  அப்துல் நசீர் அவர்கள் 12-02-2023 அன்று ஆந்திர கவர்னராக பதவியேற்றார். பிஜேபி அரசு இவருக்கு ஓய்வு பெற்ற 40 நாளிலே இவருக்கு கவர்னர் பதவி வழங்கியுள்ளது என்றால் இவரின் செயற்பாடுகள் ஆளும் அரசுக்கு எதுவாக இருக்கும் என்றுதானே நினைக்கத்தோன்றும்.

 

யார் இந்த அப்துல் நசீர்?


கர்நாடகா கனரா பகுதியை சார்ந்த பக்கீர் சாஹிபுவுக்கு மகனாக பிறந்த இவருடன் பிறந்தவர்கள் 5 பேர். இவர் பெலுவை பகுதியில் வளர்ந்தார்மஹாவீரா கல்லூரியில் பி.காம் முடித்தார்பிறகு ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா சட்டக்கல்லாரியில் சட்டப்படிப்பை முடித்தார்.

 

 

நீதித்துறை வாழ்க்கை (1983–January 2023)

 

சட்டப்படிப்பை முடித்தவுடன் 1983 ல் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆக பயிற்சிபெற்றார். மே மாதம் 2003 ல் கூடுதல் நீதிபதியாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பணியாற்ற தொடங்கினார்பிறகு கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். பிப்ரவரி 2017 ல் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்டார். இப்படி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றவர்களில் இவர் மூன்றாமானவர். பொதுவாக உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதியாக பதவி வகித்தவர்கள் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவார்கள்.

 

 

சமீபத்தில் இவர் தீர்ப்பு சொன்ன மிக முக்கிய மூன்று வழக்குகள் 

1. பாபரி மஸ்ஜித் வழக்கு

2. முத்தலாக்

3. பணமதிப்பிழப்பு.

 

முத்தலாக் வழக்கு:

 

உச்ச நீதிமன்றத்தில், 2017 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய முத்தலாக் வழக்கை விசாரித்த பல மத பெஞ்சில் ஒரே முஸ்லிம் நீதிபதியாக நசீர் இருந்தார். நசீரும் மற்றுமொரு நீதிபதியும் முத்தலாக் (தலாக்-இ-பித் அத்) நடைமுறையின் செல்லுபடியை உறுதிசெய்தாலும்அது முஸ்லிம் ஷரியா சட்டத்தின்  கீழ் அனுமதிக்கப்படுகிறது என்ற தவறான புரிதலின் அடிப்படையில்பெஞ்ச் 3:2 பெரும்பான்மையால் தடை செய்து மத்திய அரசிடம் கேட்டது. முஸ்லீம் சமூகத்தில் திருமணம் மற்றும் விவாகரத்துகளை நிர்வகிப்பதற்கான சட்டத்தை அரசாங்கம் ஆறு மாதங்களில் கொண்டு வரவுள்ளது. அரசாங்கம் முத்தலாக் தொடர்பான சட்டத்தை உருவாக்கும் வரைகணவர்கள் தங்கள் மனைவிகளுக்கு முத்தலாக் கூறுவதற்கு தடை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது.

 

பாபரி மஸ்ஜித் வழக்கு:

 

பாபரி மஸ்ஜித் சர்ச்சையில் 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் 5 நீதிபதிகள் பெஞ்சில் அவர் ஒரு பகுதியாகவும் இருந்தார். அதில்எந்த ஒரு அறிவியல் காரணங்களையும் முன்வைக்காமல் பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவாக அநீதியை நீதி என்று ராம் மந்திருக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கினார்இதனால் பல ஆண்டுகளாக நீடித்த தகராறு 5-0 என்ற தீர்ப்புடன் முடிவுக்கு வந்தது.

 

பணமதிப்பு நீக்கம் வழக்கு:

 

அவர் ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களில்நசீர் தலைமையிலான அரசியலமைப்பு பெஞ்ச்இந்திய   அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட 2016 இந்திய ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கம் தொடர்பான வழக்குகளை விசாரித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை பழிவாங்கிய கோமாளித்தனமான  செயலை ஆதரித்து பணமதிப்பிழப்பு செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார்.

 

உச்ச நீதிமன்றஉயர் நீதிமன்ற நீதிபதிகள், `அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்கள்என்றே அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் சுயநலம் எதுவுமில்லாமல்எந்த ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல்முழுக்க முழுக்கச் சட்டத்தின் அடிப்படையில் நீதிபரிபாலனம் செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு. அப்போதுதான்மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கை நிலைத்திருக்கும். மாறாக நீதிபதிகள்மீதும்அவர்கள் வழங்கும் தீர்ப்புகள்மீதும் மக்களுக்குச் சிறு சந்தேகம் ஏற்பட்டாலும்அது நீதித்துறைமீதான நன்மதிப்பைக் குலைத்துவிடும். ஆனால்சில நீதிபதிகள் ஓய்வுபெற்றவுடனேயே பெரிய பொறுப்புகளில் அமர்த்தப்படும்போதுஅவர்களது பணிக்காலச் செயல்பாடுகள் கேள்விக்குள்ளாகின்றன.

 

நம்பகத்தன்மையை பாதிக்கும்!

ஒருவர் பணி ஓய்வுபெற்ற பிறகு, ‘கூலிங் பீரியட்’ எனப்படும் நியாயமான கால அவகாசம்கூட இல்லாமல் பதவிகளை வழங்குவது மிகவும் கவலைக்குரியதுஎன்கிறார்அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச்செயலாளரும்சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான ச.சிவக்குமார்.

நீதிபதியாக இருப்பவர் எந்தவித அச்சமும் இல்லாமல் தீர்ப்புச் சொல்பவராகஒரு சாராருக்கு ஆதரவாக இல்லாமல் தீர்ப்பு வழங்குபவராகயாருடைய செல்வாக்குக்கும் அடிபணியாமல் தீர்ப்புத் தருபவராக இருக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர்பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் என்பன போன்ற பதவிகள் வழங்கப்படுவது வழக்கம்தான். ஆனால்மாநிலங்களவை எம்.பி.மாநில ஆளுநர் போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு வழங்குவதுநீதித்துறை மீதான நம்பகத்தன்மையை பாதிக்கும். பணி ஓய்வுக்குப் பிறகுநமக்கு அரசுப் பதவி ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்துடன் ஒரு நீதிபதி செயல்படுவார் என்றால்அரசுக்கு எதிரான வழக்குகளில் எப்படிப்பட்ட தீர்ப்புகளை அவர் வழங்குவார் என்ற கேள்வி எழுகிறதுஎன்கிறார் வழக்கறிஞர் ச.சிவக்குமார்.

 இந்த நேரத்தில்பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் சட்ட அமைச்சரான மறைந்த அருண் ஜெட்லி, 2012-ம் ஆண்டு பா.ஜ.க எதிர்க்கட்சியாக இருந்தபோது முன்வைத்த ஒரு கருத்து நினைவுகூரத்தக்கது. பணி ஓய்வுக்குப் பிறகு பெறப்போகும் பதவியின் மீதான ஆசைபணியிலிருக்கும்போது வழங்கும் தீர்ப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய போக்குநீதித்துறையின் சுயேச்சையான செயல்பாடுகளை பாதிக்கும்என்றார் அவர்.


காங்கிரஸ் தவறு செய்ததால்தான் ஆட்சியை இழந்தது என்று பேசுகிற பா.ஜ.க-வினர்அதே தவறைச் செய்வதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும்!

 ஏற்கனவே முஸ்லீம் பிரதிநிதித்துவம் இல்லாத போதுஅப்துல் நசீர் போன்ற கோடாரிக்காம்புகளால் முஸ்லீம்  சமுதாயத்துக்கு தீங்கே. இந்த சூழ்நிலையில் நாம் நமது பிள்ளைகளை முஸ்லீம் சமுதாயத்திற்கும் தீனுக்கும் பயன்படும் வகையில் வளர்க்க வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக.

பாஜக ஆட்சியில் இதுவரை சோதனைக்குள்ளான பத்திரிகை நிறுவனங்களும், காரணங்களும்! - ஓர் அலசல்

 


1.BBC: டெல்லிமும்பையிலுள்ள பிபிசி அலுவலகங்களில் `ஆய்வு'(Survey) எனும் பெயரில்   வருமான வரித்துறை திடீர் ரெய்டு நடத்தியது

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி செய்தி ஊடகம், `இந்தியா: மோடி கேள்வி' (India: The Modi Question) என்ற ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டது.


2. டைனிக் பாஸ்கர்: கடந்த 2021 ஜூலை மாதம், நாட்டின் முன்னணி செய்தித்தாள் குழுமங்களில் ஒன்றான டைனிக் பாஸ்கர் (Dainik Bhaskar) நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் (Income tax department) சோதனை நடத்தினர். இந்தச் சோதனைக்கான காரணம், டைனிக் பாஸ்கர் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகவும், பங்குச்சந்தை விதிகளை மீறியதாகவும் வருமான வரித்துறை விளக்கம் தெரிவித்தது.

கொரோனா தொற்றின்போது அரசாங்கம் செய்த தவறான நிர்வாகத்தையும் அதன் விளைவால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள் பற்றியும் டைனிக் பாஸ்கர் செய்தி நிறுவனம் விரிவான அறிக்கையை வெளியிட்டது. மேலும், டைனிக் பாஸ்கர் நிறுவனத்தின் தேசிய ஆசிரியர் ஓம் கௌர், கொரோனா உயிரிழப்புகள் பற்றி நியூயார்க் டைம்ஸில் `கங்கை இறந்தவர்களைத் திருப்பித் தருகிறது. அது பொய் சொல்லவில்லை' எனும் தலைப்பில் கட்டுரையும் (Op-ed) எழுதியிருந்தார்.

3.பாரத் சமாச்சார்: அதேபோல, கடந்த 2021-ம் ஆண்டில் லக்னோவைச் சேர்ந்த பாரத் சமாச்சார் (Bharat Samachar) செய்தி அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

கொரோனா இரண்டாவது அலை குறித்து ஆழமான செய்திகளை வெளியிட்டதும், உத்தரப்பிரதேசத்தை ஆளும் பா.ஜ.க அரசின் தொற்றுநோய் மேலாண்மை சீர்கேடுகள் குறித்து கடுமையான விமர்சனக் கேள்விகளை பாரத் சமாச்சார் நிறுவனம் தொடர்ந்து எழுப்பிவந்ததும்தான் இந்த ரெய்டுக்கான காரணம்"

4.நியூஸ் கிளிக்: டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இன்டிபென்டண்ட் ஊடக நிறுவனம்தான் நியூஸ் கிளிக். கடந்த 2021 செப்டம்பர் மாதம் இந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் (Enforcement Directorate) திடீர் சோதனை நடத்தினர். நியூஸ் கிளிக் நிறுவனம் மட்டுமல்லாது அந்த ஊடகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது. இந்த திடீர் ரெய்டுக்கு காரணமாக, நியூஸ் கிளிக் நிறுவனம் சில சந்தேகத்துக்குரிய நிறுவனங்களிடமிருந்து வெளிநாட்டு நிதியைப் பெற்றுக்கொண்டு பணமோசடி வழக்கில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் பற்றிய செய்திகளை நியூஸ் கிளிக் முன்னணியில் நின்று கவரேஜ் செய்ததும், அந்த வீடியோக்களை மில்லியன்கணக்கானவர்கள் பார்த்து ரியாக்ட் செய்ததும்தான் காரணம் எனச் சொல்லப்பட்டது.

5. நியூஸ்லாண்ட்ரி: அதே காலகட்டத்தில், டெல்லியிலிருந்து செயல்படும் நியூஸ்லாண்ட்ரி (Newslaundry) செய்தி நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அலுவலக செய்தியாளர்கள் அனைவரின் செல்போன்களும் ஸ்விட்ச்-ஆஃப் செய்யப்பட்டு மேசைமீது வைக்க அறிவுறுத்தப்பட்டனர். மேலும், பணியாளர்கள் யாரும் அலுவலகத்தைவிட்டு வெளியேறவும் அனுமதி மறுக்கப்பட்டது. முக்கியமாக, நியூஸ்லாண்ட்ரி இணை நிறுவனர் அபிநந்தன் சேக்ரி, அவருடைய வழக்கறிஞரை அழைக்கக்கூட அனுமதிக்கப்படவில்லை என்றும், அவரது செல்போனை சோதனை அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த ரெய்டுக்கான காரணம், நியூஸ்லாண்ட்ரி நிறுவனமும் தொடர்ந்து டெல்லியில் போராடிய பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கொரோனா தொற்று உயிரிழப்பு குறித்தும் செய்தி வெளியிட்டு வந்ததுதான் எனக் கூறப்படுகிறது.

6. கிரேட்டர் காஷ்மீர்: கடந்த 2020 அக்டோபர் மாதம், ஜம்மு-காஷ்மீரின் முன்னணி ஆங்கில நாளிதழான கிரேட்டர் காஷ்மீர் (Greater Kashmir) அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) திடீர் சோதனை நடத்தியது. 

கிரேட்டர் காஷ்மீர் நிறுவனத்தின்மீது இந்தச் சோதனை முன்னோட்டம் நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

7. தி குயின்ட்: உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் இன்டிபென்டண்ட் ஊடகமாகச் செயல்பட்டுவரும் தி குயின்ட் (The Quint) ஊடகத்தின் அலுவலகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை.

கொரோனா இரண்டாவது அலை குறித்து ஆழமான செய்திகளை வெளியிட்டது.

8. என்டிடிவி: பா.ஜ.க ஆட்சி அமைந்தபோது, முதன் முறையாக 2017-ம் ஆண்டு, இந்தியாவின் முன்னணி செய்தி ஊடகமான என்டிடிவி(NDTV) அலுவலகங்கள்மீது சி.பி.ஐ சோதனை நடத்தியது. மேலும், என்டிடிவி நிறுவனர்களான பிரணாய் ராய், அவரின் மனைவி வீடுகளிலும் சிபிஐ சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. ``என்டிடிவி நிறுவனர்கள் ஐசிஐசிஐ வங்கியில் 48 கோடி ரூபாய் மோசடி செய்த காரணத்தால் சோதனை நடத்தப்பட்டது" என சிபிஐ தெரிவித்தது.

நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை; ஏழு ஆண்டுகளுக்கு முன்பே என்டிடிவி கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டது. ஆதாரமின்றி முறையான விசாரணையின்றி இந்த சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இது சுதந்திர ஊடகங்களுக்கு எதிரான ஒரு சூனிய வேட்டை. மேலும், பத்திரிகைச் சுதந்திரத்தின்மீதான அப்பட்டமான அரசியல் தாக்குதல்!" என கடுமையாக விமர்சித்தது. (கடுமையான நெருக்கடிகள் காரணமாக என்டிடிவி நிறுவனர்களான பிரனாய் ராய், ராதிகா ராய் தங்கள் பதவியை ராஜினாம செய்ய, தற்போது என்டிடிவி நிறுவனத்தின் பங்குகள் அதானி வசம் கைமாறியிருக்கின்றன).

9. 2022-ம் ஆண்டு டெல்லி, மும்பையிலுள்ள தி வயர் (The Wire) அலுவலகத்திலும், அதன் ஊழியர்களுடன் தொடர்புடைய வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

பா.ஜ.க ஆட்சி அமைவதற்கு முன்பாக, 2013-ம் ஆண்டு உலக ஊடக சுதந்திரத்தில் 142-வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 2022-ம் ஆண்டில் 150-வது இடத்துக்கு பின்னோக்கிச் சென்றிருக்கிறது.

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...