Sunday, January 22, 2023

நன்றி சொல்லுங்கள்

 நன்றி சொல்லுங்கள்

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் விரும்பக்கூடியது உதவிக்கு நன்றிதவறுக்கு மன்னிப்பு. நன்றி சொல்லுதலிலும் பல முறைகள் உண்டு.

 

1. English: Thank You அல்லது thank you very much என்கிறோம்,

2. Irish: “Go raibh maith agat” which means “May you have goodness.”

3. Danish:  Tak, tusind tak (thousand thanks) or Mange tak (Thank you very much!)

4. Swedish: Tack,  tack så mycket (thank you very much) or tusen tack (thousand thanks).

5. Spanish: Gracias or Muchas Gracias (thanks a lot).

6. French: Merci or Merci beaucoup (thank you very much).

7. Tamil: நன்றி.

 

இப்படி பல மொழிகளில் நன்றியினை சொன்னாலும்அராபிய மற்றும் இஸ்லாமிய வழிமுறை சற்றே வித்தியாசமானது.

 

அராபியர்கள் முறை:  Ya'tik al-'afiya (يعطيك العافيةஇதன் அர்த்தம் “may [God] give you health”.

இஸ்லாம் சொல்லும் நன்றி: இஸ்லாம் Jazāk Allāhu Khayran (جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا, May Allah reward you [with] goodness.

 

நன்றி நவிலும் நாகரிகப் பண்பியல்புமனிதர்களுக்கு பிறப்பியல் பிலேயே இருக்கும் ஓர் உள்ளார்ந்த உணர்ச்சியாகும். அது ஒரு நாகரிக முதிர்ச்சியுள்ளஒழுக்கமிக்க பண்பாகவும் கொள்ளப்படுகிறது. ஒரு முஃமினின் வாழ்வில் நன்றியுணர்வு ஈமானின் அடையாளத்தையும் இஸ்லாமிய பண்பியல் அழகையும் பிரதிபலிக்கிறது.

 

எவர் மனிதர்களுக்கு நன்றி நவிழவில்லையோஅவர்  அல்லாஹ்விற்கும் நன்றி நவிழமாட்டார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:திர்மிதீ) (403)

 

இஸ்லாம் தவிர மற்ற மொழிகள் அல்லது பண்பாட்டின்படி நன்றி என்பது ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு கிடைக்கும் வெகுமதிஅல்லது உணர்வு. ஆளான இஸ்லாத்தின்படி ஒருவர் மற்றவருக்கு உதவி செய்தால்இறைவன் உங்களுக்கு நல்லதை வழங்குவானாக என்று சொல்லப்படுகிறது. இதைவிட உயர்ந்த வார்த்தை உலகில் உண்டாஇதுதான் இஸ்லாத்தின் சிறப்பு.

 

நாம் செய்கின்ற உதவி அற்பமானதாக இருந்தாலும்அதற்கு நிறைவான கூலி அல்லாஹ்வினால் வழங்கப்படும். சில போதுஅந்த நன்றி உணர்விற்கான பலன் இந்த உலகத்திலேயே கிடைக்கலாம். அதற்கு பின்வரும் நிகழ்வு ஒரு சான்றாக உள்ளது.

 

கோபர்ட் கில்லி அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவராக புகழ் பெற்றவர். ஆனால்தனது சிறுவயதில் வறுமையுடன் போராடினார். தனது 13-வது வயதில் தான் வசித்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு பேப்பர் போடுவதுபால் பெகட் போடுவது என பகுதி நேர வேலை செய்து வந்தார். ஆனாலும்வருமானம் போதவில்லை. ஒருமுறை கையில் இருந்த பணம் முழுவதும் தீர்ந்து போய்உண்ண உணவில்லாமல் திண்டாடினார். ஒரு ரொட்டித்துண்டு கிடைத்தாலும் போதும் பசியமர்த்திவிடலாம் என்று நினைத்தார்.

 

ஆனால்அதற்கான வழிதான் கிடைக்கவில்லை. ஒருவாறாகதான் பேப்பர்பால் போடுகிற வீடுகளில் பிச்சையெடுக்கலாம் என்கிற முடிவுக்கு வந்துஒரு வீட்டின் கதவை தட்டினார். கதவைத் திறந்ததுஅவர் வயதில் இருந்த ஒரு சின்னப் பெண். அந்தப் பசியிலும் அவரின் சுயமரியாதை விழித்துக் கொண்டது. போயும் போயும் ஒரு சின்னப் பெண்ணிடம் பிச்சைக் கேட்பதாஎன்று எண்ணினார். அதனால் நிலையை சமாளித்துக் கொண்டு, ‘எனக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கிடைக்குமா?’ என்று கேட்டார். அந்த சின்னப்பெண் அவரின் கண்ணில் அவரின் பசியை விளங்கிக் கொண்டார். உள்ளே சென்ற அவள் ஒரு கோப்பை நிறைய பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள். பசியுடன் பாலை அருந்தியவர், ‘இதற்கு நான் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?’ என்று கேட்டார். தன் கவுரவத்தை சிறிதும் விட்டுக்கொடுக்காமல். அந்தச் சிறுமி நாங்கள் ஒன்றும் பால் செய்யவில்லை உன் கண்னில் பசியின் கோரம் தெரிந்தது. அதனால் தான் பாலைக் கொடுத்தேன்காசுக்கு அல்ல என்றாள்.

காலம் தான் எத்தனை முகங்களுடையது. கோபர்ட்டாக்டர் படிப்பை முடித்தார். டாக்டராக பிரபலமான போதுமிகப் பெரிய மருத்துவமனை ஒன்றை நிறுவிஅதன் தலைமை மருத்துவரானார்.

அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒரு வயது முதிர்ந்த பெண்மணி நோயாளியாக வந்து சேர்ந்தார். அவள் நோயின் தீவிரம் அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தது.

ஒரு நாள் அவள் வார்டில் நுழைந்த டாக்டர் கோபர்ட்அவளது கேஷ் சீட்டைப் பார்த்தார். அவள் கொடுத்திருந்த முகவரியை பார்த்ததும் அப்படியே ஷாக்காகிப் போனார். அவளிடம் பேச்சுக் கொடுத்துஅவள் முகவரி குறித்து விசாரித்தார். தாம் அந்த முகவரியில் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருவதாக அப்பெண்மணி குறிப்பிட்டார்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினார். அப்போதேதமது மருத்துவ குழுவினர்களை அழைத்து, ‘அப்பெண்மணிக்கு எத்தகைய உயர்சிகிச்சை செய்ய வேண்டுமானாலும் செய்யுங்கள். உடனே செய்யுங்கள். அவருக்குத் தேவையான அத்துணை வசதிகளையும் செய்து கொடுங்கள்’ என்று உத்தரவிட்டார்.

அவருக்கு அளித்த ராஜ சிகிச்சையில் நோய் நீங்கிமுழுமையாக குணமானாள். தலைமை டாக்டர் வந்து சென்றது முதலேதமக்கு அளிக்கப் பட்ட சிகிச்சை முறையை அப்பெண்மணியும் அறிந்து வைத்திருந்தாள்.

ஆனாலும்தமக்கான பில் எவ்வளவு வருமோ என்கிற கவலையில் இருந்த போதுநீங்கள் டிஸ்சார்ஜ் ஆகலாம் என தலைமை மருத்துவர் கூறிவிட்டார்’ என்று நர்ஸ் ஒருவர் கூறிவிட்டுபில்லை நீட்டினார்.

பில்லை வாங்கிய அந்தப் பெண்அந்தச் சீட்டில் தலைமை டாக்டர் இப்படி எழுதியிருந்ததைப் பார்த்தாள். அதில் ‘இந்தப் பெண்ணின் சிகிச்சைக்கான பில் 40 வருடத்திற்கு முன்பே ஒரு கோப்பை பாலில் தீர்க்கப்பட்டு விட்டது.’ என்று எழுதியிருந்தது.

அப்போது தான்அந்தப் பெண்னுக்கே அந்த தலைமை டாக்டர் யார் என்பது தெரியவந்தது. அவர் பசியின் கொடுமையில் சிக்கித் தவித்த போதுகொடுத்த ஒரு கோப்பை பாலுக்கு இப்படி நன்றியுணர்வோடும் ஒருவரால் நடந்து கொள்ளமுடியுமாஎன வியந்தவாறு அப்பெண்மணி வீட்டிற்குச் சென்றாள். (தினத்தந்தி : குடும்ப மலர், 4.8.2013, பக்கம்:11)

ஒரு கோப்பை பாலிற்கு உலகில் மிகப் பெரிய வெகுமதி கிடைத்ததாக இந்தக் கதை கூறுகிறது. நம்மைப் படைத்துநமக்கு உணவளித்துஅருள்பாளிக்கும் அல்லாஹ்விற்கு நன்றிபாராட்டினால்எப்படியெல்லாம் ஈருலகிலும் கூலி கிடைக்கும் என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அல்லாஹ்விற்கு நன்றி நவிலல் :


நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில்அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும்பார்வைகளையும்உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான்.’ ( அந்நஹ்ல் : 78).


பெற்றோருக்கு நன்றி நவிலல் :


மனிதர்களிலேயே அதிகம் நன்றிக்குரியவர் யார் என்றால்நம்மைப் பெற்றெடுத்த தாய்தான். தாய் என்பவள் கருவுற்ற நாள் முதல் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் நம்மைச் சுமக்கின்றாள். இரண்டு ஆண்டுகள் பாலூட்டுகின்றாள். ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக அவளது அழகை இழக்கின்றாள். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத தியாகங்களைச் செய்கின்றாள். எனவேதான்நபி (ஸல்) அவர்கள் தாயுடன் அதிகம் நட்புப் பாராட்டப் பணித்துள்ளார்கள்.

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும்உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.'(லுக்மான் : 14)


ஆயிஷா(ரலி) அறிவித்தார் : நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். எனவே நான், ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்இறைத்தூதர் அவர்களே! தங்களின் முந்தைய – பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்பவேண்டாமா?’ என்று கேட்டார்கள்.


ஆக மனிதர்களுக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தி நல்லவர்களாக வாழ்வோமாக.


நன்றி செலுத்துதலில் இணைவைப்பு:


இஸ்லாம் மட்டுமல்லஉலகத்தில் உள்ள அனைத்து மதங்களும்/மார்க்கமும் ஓரிறையையே வலியுறுத்துகிறது. ஆனால் பலர் அதை எரிக்காமல் அல்லது மறந்துவிட்டு இணைவைக்கிறார்கள். யாராவது இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்தால் உடனே கடவுள் போல வந்து உதவினார் என்கிறார்கள். அல்லது கடவுளாக பாவிக்கிறார்கள். தங்களின் பெற்றோர்களை/முன்னோர்களை கடவுளாக ஆக்கி வழிபாட்டு ஏக இறைவனுக்கு இணைவைக்கிறார்கள். என்னதான் மனிதர்கள் உதவிசெய்தாலும் அவர்கள் கடவுளாக ஆகமாட்டார்கள். எல்லா உதவிகளும் இறைவனிடம் இருந்தே மனிதனுக்கு கிடைக்கிறது.

ஆகையால் மனிதனுக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்துவோம்இறைவனை மட்டுமே வணங்குவோம்.

படித்தமைக்கு நன்றி / Jazāk Allāhu Khayran (جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا, May Allah reward you [with] goodness.

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...