"மக்களை ஆட்சி செய்பவர்களின்
நடத்தைகள் எப்படியிருக்க வேண்டும்"
என்பதற்கான, ஒரு வரலாற்று சம்பவம்.
AR. ரஹ்மானிடம் அமெரிக்காவில் கேட்கப்பட்ட ஓரு கேள்வி !
உங்கள் நாட்டீல் பிஜேபி, காங்கிரஸ் ஆட்சியில் எதை விரும்புவீர்கள் ?
இல்லை, இவையில்லாமல்,
வேறு எந்த விதமான ஆட்சி அமைந்தால் நலமாக இருக்கும் என விரும்புகிறீர்கள் ?
A.R ரஹ்மான் கூறிய பதில்:-
இந்தியாவில் யார் ஆட்சி சிறப்பானது என்று நான் கூறுவதை விட, பண்டைய அரேபியாவில் கலிபா எனப்படும் உமர் அவர்களின் ஆட்சி போல் இருந்தால் நலமாக இருக்கும் என விரும்புகிறேன்.
சுதந்திரத்தை எழுதி கொடுத்த பின்ஆங்கிலேய அதிகாரி, சுதந்திர இந்தியாவின் ஆட்சி எவ்வாறு இரூக்க வேண்டும் என்று ஆசைபடுகிறீர்கள்
என கேட்ட போது,
காந்தி அவர்கள் உடனே அளித்த பதில்,
பண்டைய அரபு தேசத்தில், ஜனாதிபதி உமர் என்பவரின் ஆட்சி போல் இருக்க விரும்புகிறேன்.
கெஜிர்வால் டெல்லியை வெற்றி பெற்ற கையுடன் அவரிடம் நீங்கள் எவ்வாறு ஆட்சி அமைக்க விரும்புகிறீர்கள் என்று கேட்ட போது,
கெஜிர்வால் அளித்த பதில்,
உமர் அவர்களுடைய ஆட்சியை போல் செயல்பட விரும்புகிறேன்.
(இந்த இருவரின் ஆசைகளும்
நிறைவேறவில்லை என்பது, தனிக்கதை)
இதை படித்தவுடன் உங்களில் எழும் கேள்வி யார் அந்த உமர் ?
உமர் வாழ்வில் நடந்த ஓரு சம்பவத்தை இங்கு சொல்கிறேன்.
அதன் பின் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
உமர் அவர்கள் ஆட்சிகாலத்தில்,
யூதர்களை வெற்றி பெற்று, பாலஸ்தீனம் மீண்டும் இஸ்லாமியர் கைவசம் வந்தது.
அதன் ஜனாதிபதியாக உமர் பதவியேற்றார். அப்போதைய பாலஸ்தீன வாசிகள், தங்களின் ஆட்சியாளர் உமர் அவர்களின் முகத்தை பார்க்க ஆசைபட்டு ஆர்வத்தில் கிளர்ச்சி செய்தனர்.
இதையறிந்த உமர் அவர்கள், தனக்கு துனையாக ஆட்சியின் பணியாளர்
ஒருவரை கூட்டிக்கொண்டு,
அந்த மக்களின் ஆசையை நிறைவேற்றச்சென்றார்.
உமர் அவர்கள் செல்லும் வழியில் தன் பணியாளரிடம், ஓரு குறிபிட்ட தூரத்தை சொல்லி, அதுவரை ஓட்டகத்தில்
நான் அமர்வேன், நீ நடந்து வர வேண்டும்.
பின், அதே அளவு தூரம்,
நீ ஒட்டகத்தில் அமர்ந்து வர,
நான் நடந்து வருவேன் என்று,
ஓப்பந்தம் செய்து கொண்டார்கள்.
உமர் அவர்களே ஒட்டகத்தில் முழவதுமாக அமர்ந்து வந்தாலும், யாரும் கேட்க முடியாது. ஆனாலும், ஆண்டான் அடிமை
என்ற பேதம் பார்க்காமல்,
சம உரிமையை பேணினார்.
அவ்வாறே மாறி மாறி சுழற்சி முறையில் பயனித்து பாலஸ்தீன எல்லையை நெருங்கிவிட்டார்கள்.
பாலஸ்தீன எல்லைக்குள் மக்கள் இருபுறமும் பெருங்கூட்டமாக காத்து நின்றார்கள்.
அவர்களை படைத்தளபதி ஓருவர் கட்டுப்படுத்தி, உமர் வரவை எதிர் நோக்கியிருந்தார்.
உமர் அவர்கள் பாலஸ்தின எல்லைக்குள் நுழையும் நிலையில், உமர் அவர்கள் ஓட்டகத்தில் அமரும் தூரம் முடிந்து விட்டது. எனவே உமர் அவர்கள் ஒட்டகத்திலிருந்து இறங்கிக்கொண்டு,
பணியாளரை ஒட்டகத்தின் மீது அமர்ந்து வரச்சொன்னார்.
பனியாளரோ, தற்போது எல்லைக்குள் நுழைய இருக்கிறோம், நீங்களே தொடர்ந்து அமருங்கள் எனக் கூறினார்.
மேலும் மக்கள் காணும் போது நீங்கள் ஓட்டகத்தில் அமர்வதே சரியென்றார்.
ஆனால் உமர் அவர்களோ, நான் இங்கு ஓட்டகத்தில் மன்னனாக அமர்வதைவிட,
நான் ஓப்பந்தத்தை மீறாத அடியானாக இறைவன் முன் நிற்க ஆசைபடுகிறேன்.
அதனால், நீ தான் அமர்ந்து வரவேண்டும் என்று சொல்லி, பணியாளர் ஒட்டகத்தில் அமர்ந்து வர, ஓட்டகத்தின் கயிற்றைப் பிடித்து கொண்டு, பாலஸ்தீனத்துக்குள்
மாமன்னர் உமர் அவர்கள் நுழைந்தார்.
மக்கள் அனைவரும் பணியாளரை மன்னரென நினைத்து மகிழ்ச்சி கொண்டார்கள்.
மக்கள், பணியாளரை மன்னன் என்று நினைக்க மற்றொரு காரணம், பனியாளரின் சட்டையில் மூன்று கிளிசல்கள், ஒட்டகத்தை பிடித்து வந்த உமரின் ஆடையிலோ 16 கிளிசல்கள்,
அங்கே இருந்த மக்கள் யாரும் இதற்கு முன் உமர் அவர்களை பாத்ததில்லை என்பதால், பனியாளரை மன்னனாக
நினைத்துக்கொண்டார்கள்.
அங்கே காவலுக்கு பொறுப்பேற்றிருந்த தளபதி ஹாலித் பின் வாலித் அவர்கள், ஒட்டகத்தில் பணியாளர் அமர்ந்து வர, மன்னர் உமர் நடந்து வருவதை கண்டதும் தன் உடைவாளை உருவிக் கொண்டு பனியாளரை வெட்டுவதற்கு விரைந்தார்.
அதை கண்ட உமர், ஹாலித் அவர்களை தடுத்து, நீங்கள் வரம்பு மீற வேண்டாம்.
ஒப்பந்தபடியே அவர் ஒட்டகத்தில்
அமர்ந்து வருகிறார் எனக்கூறி,
அவர்களின் ஒப்பந்தத்தை விளக்கினார்.
அப்போது அங்கிருந்த மக்கள், உமரின் நேர்மை, தன்னடக்கம் அனைத்தையும் கண்டு, "இப்படிப்பட்ட ஓருவரின் ஆட்சியில், தாங்கள் குடிமக்கள் என்பதை நினைத்து பெருமைபடுகிறோம்" என்று,
உணர்ச்சிவயப்பட்டு, மகிழ்ச்சிக்கூச்சலிட்டனர்.
தான் ஓரு ஜனாதிபதி என்பதை நினைத்து கர்வம் கொள்ளாமல்,
இறைவன்,
நமது ஒவ்வொரு எண்ணத்தையும்,
செயலையும், பேச்சையும் கவனித்துக்கொண்டிருக்கிறான் என்ற
இறை நம்பிக்கை கொண்டிருந்தவர்,
உமர் ரலியல்லாஹீ அன்ஹு அவர்கள்.